மதுரையை மையமாக வைத்து எடுக்கும் படங்கள் எப்போதும் தாயரிப்பாளர் கையை கடித்தது இல்லை என்பது நிதர்சனம். அதை மெய்பிக்கும் வகையில் வந்து உள்ள படம் தான் இது. கத்தி, அருவாள் என்று இல்லாமல், மதுரையில் சாதாரண இளைஞன் எப்படி இருப்பான் என்றும், வாழ்க்கை முறை என்ன என்றும் தெளிவாக கண் முன் வைத்து உள்ள படம் இது. நானும் படத்தின் பெயரை பார்த்த உடன், மீண்டும் பெரிய ரவுடியுடன் மோதும் கதை என்று நினைத்தேன். ஆனால் படம் பார்க்கும் போது அந்த நினைப்பை அழித்து, ஒரு மெல்லிய காதல் கதை கொடுத்ததுடன், நமக்கும் இந்த மாதிரியான காதல் கிடைக்காத என்ற எண்ணத்தை உண்டாக்கும் படம் என்றால் மிகையல்ல.
மதுரையை சேர்ந்த விஷ்ணு (கதைப்படி வெற்றி), படிப்பை முடித்து விட்டு, அப்பா தினமும் கொடுக்கும் பத்து ரூபாய் வைத்து கொண்டு வேலை தேடும் சாதாரண இளைஞன். அவனது அப்பாவிற்கு காவல்துறை என்றாலே பிடிக்காது. கல்யாணமாகி வீட்டில் சேர்ந்து இருக்கும் அவனது அண்ணன் மற்றும் அவனது அம்மா என்று ஒரு அழகான குடும்பம். ரம்யா மதுரையில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி. விஷ்ணுவின் அப்பாவிற்கு சேர வேண்டிய mobile recharge தொகை, கதாநாயகிக்கு சென்று விட, அந்த தொகையை மீண்டும் கேட்க போகும் போது விஷ்ணுவுக்கும், ரம்யாவிற்கும் காதல் ஏற்படுகிறது. காதல் சேர வேண்டும் எனில், விஷ்ணு போலீஸ் ஆக வேண்டும் என்று ரம்யாவின் அப்பா நிபந்தனை விதிக்க, முடிவு என்ன என்பதே மீதி கதை.
படத்தில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. காதல் ஏற்படுகின்ற தருணத்தை, அழகாக கொடுத்த விதம் தான், நம் மனதை கவர்கிறது. இயக்குனருக்கு என் பாராட்டுகள். பாடல்கள் மிக பெரிய வெற்றி இல்லாமல் போனால் கூட, கேட்டும் ரகம் தான். காதல் செய்யும் இடங்கள் கூட வறட்சி தெரியாமல், பல வண்ணங்கள் தெரிகிறது. குறிப்பாக மதுரையின் திருமலை நாயக்கர் மகாலின் அழகு திரையில் காண முடிகிறது. அதற்கு ஒளிபதிவளருக்கும் பாராட்டுகள். அதை போலவே, படத்தில் நகைச்சுவை தனியாக இல்லாமல், வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்களே நகைச்சுவை தான் என்று கண் முன்னால் வைக்கிறார். விஷ்ணுவின் அண்ணனாக வரும் நபரின் வசனங்கள் கைதட்டும் விதம். அண்ணி, அம்மா என்று குடும்பமே காதலை ஏற்று கொண்டு, காதலியுடன் மணிகணக்கில் அவர்கள் பேசுவது அழகு. காவல்துறை வேலையில் சேர விரும்பும் மக்கள், இந்த படத்தை பார்த்து எவ்வளவு பிரச்சனைகளை எதிர்க் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம். காவல்துறையில் நடக்கும் இத்தனை குளறுபடிகளை இயக்குனர் தைரியமாக இதில் கொடுத்ததிற்கு நச் என்று ஒரு கும்பிடு. மொத்தத்தில் குள்ளநரி கூட்டம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
1 comment:
very good review.
Post a Comment