மாடு இறந்தாலோ அல்லாத நாயிக்கு காலில் அடிப்பட்டலோ, சண்டைக்கு வர சில அமைப்புகள் எப்போதும் தயாராக இருக்கின்றன. ஆனால் மனிதன் இறந்தாலோ அல்லது அவனுக்கு அடிப்பட்டலோ, அவனை காப்பற்ற ஒரு மனிதன் கூட வர மாட்டன். எனக்கு நினைவு தெரிந்து கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் இதே நிலை. மனிதாபிமானம் என்ன என்று சில சமயம் நாம் கேட்கவேண்டிய சூழ்நிலை. ஆனால் அமெரிக்காவில் நான் கண்ட இரண்டு விஷயங்கள் என்ன மிரள வைத்தன.
அமெரிக்காவில் ஒரு நண்பருக்காக மருத்துவமனைக்கு சென்றோம். என்னை அழைத்து சென்ற நண்பர் அவர்களுக்கு, இடது கையில் சிறிது வலி. முதலில் சிறிய மருத்துவமனையில் அந்த வலியை பற்றி கேட்க, ஒரு வாரமாக இருப்பதாக அவர் சொல்ல, அவசர உதவிக்கு சென்று விடவோம் என்று அவர்கள் கூற, வேறு இடத்தில் உள்ள அவசர உதவி பிரிவுக்கு சென்றோம். அவசர உதவி என்பதற்கு இங்கு ஒரு தனி சட்டமே உள்ளது. சட்டத்தின் முக்கிய அம்சத்தை உள்ளே வரும் வழியில் பார்க்கும் படி வைத்து உள்ளனர். அவசர உதவிக்கு வரும் போது, நபரிடம் எந்தவித கேள்வியும் கேட்காமல் அனுமதித்து கொள்ள வேண்டும் மற்றும் உயிருக்கு உத்தர வாதம் வரும் வரை நபரிடம் கேள்வியே கேட்க கூடாது. வந்தவரின் உயிருக்கு பயம் இல்லை என்று தெரிந்த பிறகு தான், நோயாளின் அனுமதி பெற்று அனுப்பவோ அல்லது வைத்து கொள்ளவோ வேண்டும். பணம் என்ற விஷயம் எப்போதும் இடையில் வருவது இல்லை. என் நண்பருக்கு, எல்லா விதமான ஆய்வுகளும் செய்யப்பட்டன. தலை பகுதி கூட வட்ட வெளியில் பார்க்கபட்டது. இந்த கை வலியால் அவரின் உயிருக்கு பயம் இல்லை என்று தெரிந்த உடன் தான், அவர்களே மற்றொரு சின்ன மருத்துவரை பார்க்க எழுதி கொடுத்தனர். அவர்கள் எடுத்த ஆய்வுகளை என் கண்ணால் பார்த்தேன். கை வலிக்கே இந்த ஆய்வா என்று வியந்து போனேன். அந்த மருத்துவ அவசர உதவி சட்டம் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இரண்டு வாரத்திற்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வை காணும் போது, இந்திய அரசாங்கம் சில சமயங்களில் இங்கு பிச்சை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது. இதுவும் மருத்தவத்தை தொடர்பு உடையது தான். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எண்ணை தொடர்பு கொள்ளும் படிசொல்வார்கள். பிரச்சனையை பொறுத்து உடனே அதற்குரிய முடிவுகளை எடுப்பார்கள். பத்து வயது சிறுவன், எண்ணை தொடர்பு கொண்டு, தன் வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு மூச்சு விட முடியாமல் தவிப்பதாக தெரிகிறது. நான் என்ன செய்யட்டும். அப்பாவை அழைத்து சொல்லவா என்று கேட்க, எதிர் முனையில் இருக்கும் நபர் வேண்டும், எங்கே உடனே அழைப்பில் இரு என்று கூற, அந்த சிறுவன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறி கொண்டே இருக்கிறான். எதிர் முனையில் இருக்கும் நபர், பிரச்சனைக்கு உள்ளன நபர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்று அறிய சிறுவனிடத்தில் செய்ய சொல்லும் ஆய்வுகளும், அதற்கு சிறுவன் கூறும் பதில்களும், ஒரே பதட்டம் தான். ஆனால் சிறுவனுக்கு பதட்டம் இருந்தாலும், தொலைபேசியில் கூறி அனைத்தையும் சரியாக செய்து முடித்தான். எதிர் முனையில் பேசும் நபர், வீட்டின் தொலைபேசி எண்ணை வாங்கி கொள்கிறார். தற்போதைய தொலைபேசி தொடர்பு துண்டிக்க பட்டால், மீண்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த தொலைபேசி உரையாடல் ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கு நடக்க, அதற்குள் மருத்துவ அவரச உதவி குழு, அச்சிறுவனின் தொலைபேசி அழைப்பை வைத்து, வீட்டை கண்டுபிடித்து அவன் வீட்டிற்கு வந்து விடுகிறது.
ஒரு உயிரை காப்பற்றியதற்காக, அந்த சிறுவனுக்கு உயரிய விருது வழங்க படுகிறது. விருது வழங்க படுவது நம்மூரில் நடக்கும் என்றாலும், ஐந்து நிமிடத்தில் ஒரு மருத்துவ குழு வீட்டிற்கு வருவது என்றால், அது அமெரிக்கா அரங்கத்தால் மட்டுமே முடியும். இதற்காக அவரச மருத்துவ உதவி சட்டத்திற்கு தலை வணங்குகின்றேன்.
சிறுவனும், அவரச உதவியும் பேசிய தொலைபேசி உரையாடல் இங்கே.
இந்த செய்தியை முழுமையாக அறிய இங்கே.
No comments:
Post a Comment