சட்டபடி குற்றம்:
தற்போதைய ஆளும் கட்சி அரசை, நாம் என்ன என்ன கேள்விகள் கேட்க நினைக்கிறோமோ அனைத்தையும் இந்த படத்தில் காணலாம். நடிகர் சத்யராஜ் அவர்கள் ஈழ தலைவர் திரு. பிரபாகரன் போன்ற வேடத்தில் நடித்து, மனதில் உள்ள செயல்களை காட்டி இருப்பார். படம் பார்க்கும் போது, நாடக தன்மை இருப்பதை அறிந்து கொண்டாலும், அரசியல் ஆர்வம் உள்ள அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம். திரையுலகத்தை தன் கையில் வைத்து இருக்கும், ஆளும் காட்சி எப்படி இந்த படத்தை வெளியிட்டார்கள் என்பதே பெரிய கேள்வி.
முத்துக்கு முத்தாக:
கல்யாணத்திற்கு முன் பெற்றோரை தவறாக பேசிய ஒரு நபரை புரட்டி போட்டு அடிக்கின்ற சகோதர்கள், கல்யாணத்திற்கு பின் மனைவி பேச்சை கேட்டு அனைவரும் பெற்றோரை கவனிக்க முடியாமல் போவதும், சகோதர்களுக்குள் பேசிக்க முடியாமல் போவது என்ற தற்போதைய நிலைமையை காட்டி, மனதை உருகும் படி இயக்குனர் செய்து இருப்பார். சில மருமகள் மட்டுமே தனது கணவனின் பெற்றோரை தன் பெற்றோர் போல் நினைத்து, சேவை செய்கின்றனர் என்ற யாதர்த்தத்தை அதனுடைய எதிர் பாணியில் காட்டி இருப்பார்.. படத்தில் சொல்லும்படியான விஷயம் என்றால் அது இளவரசு மற்றும் சரண்யாவின் நடிப்பு. படத்தின் முடிவில் இளவரசு சிரிக்கும் காட்சி மற்றும் சரண்யா அவர்கள் பேசும் வசனம் ஆகட்டும், நெஞ்சை தொடும் விஷயங்கள். கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படத்தில் ஒன்று.
Love Aaj Kal – 2009 - ஹிந்தி:
புதிதாக வெளியாகி உள்ள தெலுகு திரைப்படம் "டீன்மர்" படத்தை பார்பதற்குள், அதனுடைய தாய் படமான இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பார்க்க ஆரம்பித்தது. காதல் செய்யும் ஜோடிகள் பார்க்க வேண்டிய படம். தொலைதூரத்து காதல், நட்பு என்பது நீடிக்காது என்பதை தெளிவாக காதலை மையபடுத்தி சொல்லி இருக்கும் படம். அதே போல், சில ஆண்டுகள் தனிமையில் வாழ்க்கை அனுபவித்தாலும், துணை இல்லாமல் இருப்பதால் கண்டிப்பாக ஒரு வெறுப்பு நிலை ஏற்படும் என்பதை தெளிவாக காட்டி இருக்கும் படம். காதல் செய்பவர்கள் மட்டும் இல்லாமல், அனைவருமே ஒரு முறை காணலாம். "டீன்மர்"ல் நான் கண்ட தாய் தன்மை இருக்குமா என்பது பெரிய கேள்வி.