Wednesday, February 02, 2011

Frozen – 2010 – English


திங்கள் அன்று மாலை நேரம், என் இடத்தில் இரவில் இருந்து பனி புயல் ஆரம்பம் என்று தெரிந்து விட்டதால் அனைவரும் சீக்கிரமே வீட்டிற்கு வந்து அடைக்கலம் ஆனோம். இப்போது பொழுது போக வேண்டுமே என்று யோசனையில் இருந்த போது நண்பர் அண்ணாமலை சொன்ன படம் நினைவுக்கு வந்தது. அது தான் Frozen


டன், ஜோ மற்றும் டனின் காதலி பார்கர் அனைவரும் பனி சறுக்கு விளையாடும் இடத்தில் தங்கி, விடுமுறையை கழிக்க ஒரு இடத்திற்கு வந்து இருப்பார்கள். பார்கர்க்கு இந்த விளையாட்டு புதிது. மலை உச்சிக்கு செல்ல வின்ச்சை பயன்படுத்தி மலை மேல் சென்று, பனியில் சறுக்கி கொண்டே கீழ வருவார்கள். ஞாயிற்று கிழமை மதியம், மூவரும் அங்கு செல்கின்றனர். அதிக விலை கொடுத்து மூவரும் செல்ல முடியாததால், வின்சில் ஏற்றும் ஆளை ஏமாற்றி மூவரும் மேல போகின்றனர். பார்கர்க்கு இந்த விளையாட்டு தெரியாததால், மூவரும் மெதுவாக கீழ வருகின்றனர். ஜோ இதனால் டனிடம் பேச, மீண்டும் மேல செல்ல முடிவு செய்து ஆரம்பிக்கின்றனர். 
நேரம் இப்போது ஞாயிற்று கிழமை மாலை. அவர்கள் செல்லும் போது அந்த விளையாட்டை முடித்து இருப்பார்கள். அதே போல் இப்போது விளையாட்டை மூடினால், வானிலை காரணமாக மூன்று நாள் கழித்து தான் திறப்பார்கள். ஆனால் மீண்டும் எப்படியோ, அதே ஆளை ஏமாற்றி மேல செல்கின்றனர். இப்போது அவர்கள் மேல செல்வது இந்த ஆளை தவிர மற்ற யாருக்கும் தெரியாது. சக நண்பன் ஒருவன் விஷயம் கூற, அந்த ஆள்  இன்னும் மூன்று பேர் வர வேண்டும் கூறி சென்று விடுகிறான். ஆனால் அது எந்த மூன்று பேர் என்று புது ஆளுக்கு தெரியாது. அவன் சென்ற சில நிமிடத்தில் மூன்று பேர் வர, அவன் அனைத்தையும் செயல் இழக்க செய்து விட்டு சென்று விட, டன், ஜோ, பார்கர் மூவரும் மலைக்கு செல்லும் வழியில் அதுவும் வின்ச்சில்.
இப்போது அவர்கள் இப்படி கீழே வந்தார்கள், பனியால் அவர்களுக்கு என்ன ஆனது, உயிருக்கு ஏதாவது ஆபத்தா, ஆபத்து என்றால் அது எதனால் என்பதை நீங்கள் காண்க. இப்படத்தை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். சில விஷயங்களை நம்மால் எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு கொடுமையாக மற்றும் பயங்கரமாக  இருக்கும். ஆனால் அது உண்மை.  இப்படத்தை பார்த்தவுடன், பனி என்பதை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது என்ற நிலைமை வந்து விடும். ஒரு முறை கண்டிப்பாக படத்தை பார்த்தே ஆக வேண்டும்.
 இப்படத்தை பார்த்து முடித்து விட்டு, செவ்வாய் கிழமை காலையில் பார்த்தல் என் இடத்தில் பனி புயல் ஆரம்பம் ஆகி இருந்தது.

1 comment:

Kumaran said...

விமர்சனம் நன்று.நன்றி.