திங்கள் அன்று நண்பர்கள் அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி, காரணம் அடுத்த நாள் அலுவகத்துக்கு செல்ல தேவை இல்லை. ஆம் செவ்வாய் சென்று பனி புயல். ஏற்கனவே நான் பனி மழையை பார்த்து இருந்தாலும், புயலை பார்த்தது இல்லை. அதனால் புயலை பார்க்க எனக்கு ஓர் ஆர்வம். திங்கள் இரவு முதல் என்று கணித்து இருந்தார்கள். திங்கள் இரவு உறங்கினாலும், அவ்வபோது எழுத்து வெளியில் பார்ப்பது. ஏதாவது பனியின் அகோரம் இருக்கிறதா என்று. ஆனால் ஒன்றும் இல்லை.
செவ்வாய் கிழமை காலையில் ஏழு மணிக்கு பார்த்தல் லேசாக தான் பனி மழை பெய்து இருந்தது. சரி புயல் வேறு பக்கம் சென்று விட்டது என்று நினைத்து, வேலையை பார்க்க தொடங்கினோம். எட்டு மணி ஆக யாரும் எதிர் பாரவகையில் புயல் ஆரம்பம் ஆனது. மதிய வேளையில் கண்ணாடி வழியாக வெளியில் பார்த்தால், எங்கும் வெள்ளை நிறம். வீட்டில் இருந்ததால் எங்களுக்கு அதனுடைய வேகம் தெரியவில்லை. நான் மட்டும் கார் பார்கிங் சென்று, கதவை திறந்தால் சற்றும் நான் நினைக்காத பனி புயல் என் மீது. (தென்) இந்தியாவில் கிடைக்காத ஒரு அனுபவம்.
செவ்வாய் இரவு புயல் நின்றதாக அறிந்து கொண்டோம். இருந்தாலும் புதன் கிழமையும் என்னால் (என் இடத்தில் இருக்கும் யாராலும்) அலுவலகம் செல்ல முடியாது. புதன் கிழமையும் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலைமை. இரண்டாம் நாள் முழுவதுமாக வீட்டில் இருக்க முடியாத காரணத்தால், மாலை பொழுதில் வெளியில் செல்ல தயாரானோம். எனக்கு அது வரை பனியின் அளவு தெரியாது. கார் பார்கிங் கதவை திறந்தால், பத்து அங்குலத்துக்கும் மேல் பனி இருந்ததை பார்த்து அதிர்ந்து போனோம் என்றால் மிகை அல்ல.
கதவை திறந்த உடன், அந்த குளிர் காற்று படும் இடம் எங்கும் சிவந்து, இரத்தம் வெளியில் தெரியும் படி மாறுகிறது. அக்காற்று தோலை கிழிக்கும் படி இருந்தது. இந்தியாவில் இருப்பதாக நினைத்து, அந்த பனியிலும் வெளியில் சென்று கூடாக ஒரு காபி. காபின் சூடு சொர்க்கத்தை காட்டியது என்பது நிதர்சனம்.
அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தில் மறக்க முடியாததில் மிக முக்கியமான ஒன்று.
1 comment:
அழகான அனுபவம்...
Post a Comment