127 Hours - ஆங்கிலம்
இரண்டு பாறைகளுக்கு இடையே விழும் சின்ன பாறையில் கை மாட்டி கொள்ள, அதில் இருந்து எப்படி நாயகன் விடு படுகிறான் என்பதே கதை. இது ஒரு உண்மை கதை. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, அவனது தன்னம்பிக்கை, அவனது முயற்சி என்று பலவிதமான மனிதனின் வெளிபாடுகளை இப்படத்தில் காணமுடியும். வாழ்வா அல்லது சாவ என்று தெரியாமல் இருக்கும் போது, செய்த தவறுகள் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகள் என்று முதல் முதலாக வாழ்க்கையை திரும்பி பார்க்கின்ற நேரம். அது எப்படி இருக்கும் என்பதை இப்படத்தை கண்டால் உணர முடியும். பொறுமையாக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தான்.
இப்படம் எடுக்கப்பட்ட இடம் அமெரிக்காவின் தென் மேற்கில் அமைந்து உள்ள Moab, Utah. தென் மேற்கு மாநிலங்கள் முழுவதும் இதே அமைப்பு உடையவை. எங்கு பார்த்தாலும் ஒரே வெயிலில் காய்ந்து போன இடங்கள். கீழே உள்ள படத்தை கண்டால் தெரியும். நானும் இதே போன்ற இடங்களின் வழியாக ஒரு முறை சென்று உள்ளேன் என்பது சிறு சந்தோசம்.
Ragada - தெலுகு
நாகர்ஜுன் படம் ஆச்சே, பாக்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தால் படம் ஓட ஓட தான் என் நினைவுக்கு அது ஒரு தெலுகு படம் என்று தெரிகிறது. 100% தெலுகு மசாலா படம். ஒரே நேரத்தில் 20 பேரை அடிப்பது, 3 குத்து பாட்டு. கண்ண கட்டிரிச்சு. படத்தில் ட்விஸ்ட்
வேற வைத்து கொன்று விட்டார்கள்.
No String Attached - ஆங்கிலம்
கல்யாணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்க்கை வாழ முடியும் என்ற கொள்கையில் உடைய ஒரு பெண்ணின் காதல் கதை.
மொக்கை படமாக இருந்தாலும், முதல் பாதி, நகைச்சுவையுடன் செல்லும். அது மட்டும் தான் ஆறுதல் தரும் விஷயம்.
The Eagle (2011) – ஆங்கிலம்
வழக்கமான ரோமானிய படைகளின் படம். ரோமானிய படைதளபதியாக இருக்கும் நாயகனின் தந்தை, வடக்கு பகுதியில் தனது படையின் சென்றவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அதே போல் அவர் கையில் இருந்த சின்னமும் காணமால் போய் விடுகிறது. தந்தையின் பெயரை மீட்க, நாயகன் அதே தேடி சென்று, சின்னத்தை கண்டு பிடித்தார என்பதே கதை. படம் எல்லாமே நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் படத்திற்கு சென்றது பெரிய தவறு தான் என்று பாதி படத்தில் தான் தெரிந்தது.
No comments:
Post a Comment