Wednesday, February 23, 2011

திரைவிமர்சனம் - பயணம்



மனித உறவுகளை மற்றும் எண்ணங்களை மிக அழகாக காட்டி, பனி பிரதேசத்தில் இருக்கும் பூந்தோட்டத்தில் உலவும் உணர்வை கொடுத்த இயக்குனர் ராதாமோகன் அவர்களிடம் இருந்து இந்த மாதிரியான கதைகளத்துடன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. வித்தியாசமான முயற்சி எடுத்த அவருக்கு பாராட்டுக்கள்.



சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படும் விமானத்தில் தீவிரவாதிகள் இருக்க, திருப்பதியில் தரையிருக்கபடுகிறது. அதில் உள்ள பயணிகள் எப்படி தப்புகின்றனர் என்பதே கதை. ஏற்கனவே பல விமான கடத்தல் சம்பந்தபட்ட திரைப்படங்களை பார்த்து இருப்பதால், இப்படத்தில் புதிதாக என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் வர தான் செய்கிறது. அதையும் மீறி ரசிக்கும் படி அமைத்தது தான் இயக்குனரின் வெற்றி.  பயணிகளை காப்பற்ற பணியாற்றும் அதிகாரிகள், கமாண்டோ அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கை துறையினர் என்று அவர்களின் வேலைகளை நம் கண் முன்னால் காட்டுகிறார். இந்த மாதிரியான விஷயத்தில் நாம் செய்ய கூடிய சின்ன சின்ன தவறுகளால், எவ்வளவு விபரீதம் நேர கூடும் என்பதற்கு பத்திரிக்கை துறையினரின் விஷயமே போதும். அதே போல் படத்தில் உள்ள அனைத்தும் கதாபாத்திரங்களும் (பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், ரிஷி, சானகான், குமரவேல், பிருத்திவி ராஜ் மற்றும் நடிகரின் விசிறியாக வரும் நபர்) எதாவது ஒருவிதத்தில் நம் மனதில் நின்று விடுகிறது. நடிகர்கள் இப்படத்தின் பிருத்திவி ராஜ் அவர்களின் நிலைமையை பார்த்து, அடக்கி கொள்ள வேண்டும். 


நாகர்ஜுன் மனிதரை நம்பவே முடியவில்லை. சமீபத்தில் அவர் தன்னுடைய 51 வது பிறந்தநாளை கொண்டாடினர் என்று கேள்வி பட்டேன். இந்த படத்தை பார்த்தபிறகு அது உண்மை தான என்ற கேள்வி என் மனதில். சிறிது நேரமே பேசினாலும் பன்கதாபத்திர நடிகர் பிரகாஷ் ராஜ் நச். எப்போதும் போல் பிரம்மானந்தம் கலக்கல் தான். 


மீண்டும் நல்ல படத்தை கொடுத்த ராதாமோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

1 comment:

Anonymous said...

Mokkai padathuku buildupaa paaru ;)