அஞ்சாதே படத்தில் பார்த்த ஒரு நல்ல இயக்குனரை, இந்த படத்தில் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் யுத்தம் செய் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
மீண்டும் ஒரு காவல்துறை திரைப்படம். பெண்கள் வரிசையாக காணாமல் போகின்றனர். வேறு சிலர் வரிசையாக கொலையும் செய்யபட்டு பொது மக்கள் இருக்கும் இடத்தில் கைகள் மட்டும் கிடைக்கிறது. இந்த கொலையை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி அதிகாரியான சேரன் நியமிக்க படுகிறார். சேரனின் தங்கையும் காணாமல் போய் இருப்பார். நாயகன் கொலையாளிகளை கண்டுபிடித்தார, கொலைகளின் காரணம் என்ன என்பதை மிஷ்கினின் வடிவத்தில் இப்படம். காவல்துறை அதிகாரிகளின் படங்கள் போதும் என்ற அளவு வந்து இருந்தாலும், சாதாரணமாக அதிகாரிகள் எப்படி ஒரு வழக்கை விசாரிப்பார்கள் மற்றும் அவர்களின் உண்மையான நிறத்தை இங்கே காணலாம். சேரன் கையில் துப்பாக்கிய என்று யோசித்தே தான், ஆரம்பித்தேன். ஆனால் சேரன் பல இடங்களில் கதையின் நாயகனாக நின்று விடுகிறார்.
இப்படத்திலும் கால்கள் மட்டும் உலவும் காட்சி, மனதில் நிற்கும் ஒரு மெல்லிய பின்னோட்ட இசை, ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதம், ஒரு காட்சியை காட்டி அதன் விளைவுகளை நம்மை யோசிக்க வைக்கின்ற நிகழ்வுகள் என்று எங்கும் மிஷ்கின் உலா வருகிறார்.
ஒரு சில வயதான ஆண்மக்கள் அதுவும் வசதி படைத்தவர்கள் எப்படி கேடுகேட்டவர்கள் என்பதை, இப்படத்தை கண்டாலே புரியும். இப்படத்தை காணும் போதே, நாம் அவர்களை கொன்றால் என்ன எண்ணம் கூட சிலருக்கு வரதான் செய்யும். இப்படியும் சில விலங்குகள் நம் அருகில் இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
மிஷ்கின் - சிறந்த இயக்குனர் என்பதை மீண்டும் நீருபித்தார்
No comments:
Post a Comment