No One Killed Jessica - ஹிந்தி
இந்த காலத்தில் நியாயத்தை பெற, எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கும் என்பதற்கு சின்ன உதாரணம் தான் இந்த இப்படம். ஒரு அரசியல்வாதியின் மகன், ஒரு பார்ட்டியில் பல பேருக்கு தெரியும் வகையில் சாதாரண நடுத்துற குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்கிறான். காவல் துறை தன் கடமையை செய்ய, தன் அரசியல் பலம் கொண்டு எல்லா சாட்சிகளையும் தன் கைக்குள் போட்டு வெளியில் வருகிறான். வித்யாபாலன், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி. அவள் எப்படியாவது தங்கைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் பல முறை சாட்சிகளின் வீட்டிற்கு சென்றும், நீதி மன்றம் ஏறியும், காவல் துறை அலுவலகம் சென்றும் நொந்து நூலகிறார். நீதி மன்றமும் சுமார் ஆறு வருடத்துக்கு மேல் இந்த கொலையை விசாரித்து, தன் சேவையை செய்கிறது. ராணி முகர்ஜி, தொலைகாட்சியில் பணி புரியும் ஒரு பெண். இந்த கொலை வழக்கை கையில் எடுத்து, மக்கள் முன் சாட்சிகளின் நிலைமையை விளக்கி மறு படியும் இந்த கொலை வழக்கை நீதி மன்றத்துக்கு கொண்டு செல்கிறார். இறந்து போன பெண்ணுக்கு நீதி கிடைத்ததா என்பதே முடிவு.
சில சமயத்தில் வடஇந்தியாவிலும் மசாலா இல்லாமல் மற்றும் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தி நல்ல படங்கள் வெளிவருது உண்டு. அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று. நீதி மன்றம் போவதும், சாட்சிகளின் அலச்சியமும் என்று வித்யாபலன், ஒரு சாதாரண பெண்ணை கண் முன்னால் கொண்டு வந்து இருப்பார். அதே போல் தொலைக்காட்சி என்பது எவ்வளவு பெரிய/முக்கிய சாதனம் என்பதை இப்படத்தை கண்டால் தெரியும். அதுவும் ராணி முகர்ஜி அந்த கதாப்பத்திரத்தை உணர்ந்து நடித்ஹ்டு இருப்பார். இந்த படத்திற்கு இன்னொரு முக்கிய பலம் இசை. கண்டிப்பாக இந்த படத்தை ஒரு முறை இந்திய மக்கள் காணலாம்.
The Mechanic 2011 - ஆங்கிலம்
பணத்தை வாங்கிக் கொண்டு கொலை செய்யும் ஒரு நபரின் கதை, அதுவும் மேல்நாட்டு பாணியில். கடைசியில் பணத்தை கொடுக்கும் நபரே, இன்னொரு ஆளை வைத்து நாயகனை கொலை செய்ய சொல்ல, அதை தெரிந்து பணத்தை கொடுக்கும் நபரை நாயகன் கொள்கிறார். இதற்கு நடுவில் தெரிந்த ஆளை துணைக்கு வைத்துக் கொள்ள, அவனால் ஏற்படும் பிரச்சனை தனி.
பொழுது போகாமல் இருக்கும் நேரத்தில் அதிரடி சண்டையுடன் ஒரு ஆங்கில படத்தை காண, இப்படத்தை எடுக்கலாம்.
Mirapakaya - தெலுகு
காவல்துறை அதிகாரி, கொலையாளியை கண்டுபிடிக்க அவனின் மகள் படிக்கும் கல்லூரிக்கு எதாவது ஒரு விதத்தில் உள்ளே நுழைந்து மகளுடன் பழகி, கொலையாளியை கண்டு பிடிப்பது தான் கதை. இதே கதையை நம்ம தல அஜித் ஏகன் படத்தில், தன் வடிவத்திற்கு ஏற்றவாறு கல்லூரியில் படிக்கும் மாணவனாக சேர்ந்து அப்பெண்ணுடன் பழகி, கொலையாளியை கண்டு பிடிப்பார். அதே நேரத்தில் மசாலாவுக்காக கல்லூரியில் ஒரு ஆசிரியர் உடன் காதல் மற்றும் பாடல். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது.
இதே கதையை இந்த வருடத்தில் நம்ம தெலுகு மசாலா ஹீரோ ரவிதேஜா செய்தால் எப்படி இருக்கும் அது தான் இப்படத்தின் கதை. இந்த கதையில் ஒரு ஹிந்தி ஆசிரியராக சேர்ந்து, மாணவி ஒருத்தியை காதலித்துக் கொண்டே, கொலையாளின் மகளை தன் பக்கம் திரும்ப வைத்து கொலைகாரனை கண்டு பிடிக்கிறார். அக்மார்க் முத்திரை கொண்ட வழக்கமான தெலுகு படம். ரவி தேஜா படங்கள் எப்போதும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதே போல் இப்படம் பொழுதுபோக்கு படம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை.