1954 ம் ஆண்டு காலத்தில் படம் ஆரம்பிக்கிறது. நாயகன் ஒரு அமெரிக்கா புலன் விசாரணை செய்யும் அதிகாரி. அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் மனநலம் குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவமனையில் இருந்து ஒரு நோயாளி தப்பி சென்றதை விசாரணை செய்ய தன் நண்பருடன் வருகிறார். அந்த தீவு முழுவதும் காடுகள் மற்றும் பயங்கரமான குகைகள் ஆக இருக்கிறது. மருத்துவமனையை சுற்றி மின்வளைய கூருள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பலர் இருக்கின்றார். தப்பி சென்றதாக கூறப்படும் பெண்ணின் அறை பூட்டியே இருந்ததும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அப்பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளை ஏரியில் போட்டு கொன்றதாகவும், அவள் பயங்கரமானவள் என்றும் அதனால் அவளை எப்படியாவது கண்டுபிடித்து ஆக வேண்டும் என்றும் விசாரணை ஆரம்பிக்கிறது. அதே போல் அவள் இத்தீவை விட்டு வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூற படுகிறது. ஆனால் அங்கு காண படும் செயல்கள் கொடுமையாக இருப்பதை உணர்கிறார். விசாரணை முடிவதற்குள், அப்பெண் கிடைத்துவிட்டததாக அங்கு இருக்கும் மருத்துவர்கள் கூற, சந்தேகம் வலுக்கிறது. அப்பெண்ணை விசாரணை செய்து விட்டு தன் நண்பனுடன் சேர்ந்து மேலும் விசாரணையை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்து வேகமாக செயல் படமுடிவெடுக்கிறார்.
காடுகள் மற்றும் மலைகள் ஆகியவற்றை பார்த்து விட்டு குகைகள் இருக்கும் இடத்திற்கு வரும் போது நண்பன் காணாமல் போகிறார். ஒவ்வொரு குகைக்கும் சென்று பார்க்கும் போது, ஒரு குகையில் காணாமல் போன பெண்ணை பார்க்கிறார். அவள் மூலம் பல உண்மைகளை அறிகிறார். அவள் நாயகனிடம் இத்தீவை விட்டு சென்று விடு என்றும், இப்போது இல்லையேல் எப்போதும் போக முடியாது என்று கூறி அவள் தப்பித்து கொள்ள வேறு குகைக்கு போவதாக கூறி கிளம்புகிறாள். நண்பன் இல்லாமல் திரும்பி போக கூடாது என்று முடிவெடுத்து, மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் இடம்
நாயகன்: என் நண்பன் எங்கே?
மருத்துவர்: யாரு உன் நண்பன். நீ இங்கு தனியாக தானே வந்தாய்.
நாயகன்: என்ன நான் தனியாகவ வந்தேன். ஆம் நான் மட்டும் தான் வந்தேன்.
இப்படி குழப்பம் ஆரம்பிக்கிறது. முடிவை நீங்களே பாருங்கள்
லானர்டோ டிகாப்ரியோ (நாயகன்) எப்படி தான் இப்படி நடிக்கிறார் என்று தெரியவில்லை. அதுவும் கனவிலும், நிஜத்திலும் கலக்குகிறார். அடுத்த தலைவர் இப்படத்தின் இயக்குனர் மார்டின். தண்ணி அடிச்சு போதையில் கூட இந்த மாதிரி குழப்பமாக பேச முடியாது. ஆனால் எப்படி இந்த மாதிரியான திரைக்கதையை எழுதி இயக்கினர் என்று புரியவில்லை. இந்த கதையில் மேலும் நாயகனின் இரண்டாம் உலக போரின் நினைவுகள் மற்றும் மனைவின் கடந்த கால நினைவுகள், மனைவியை கொன்றதாக கூற படும் கொலையாளியின் நினைவுகள் என்று பல குழப்பமான பலவற்றை ஒருசேர கொடுத்து, முடிவில் படம் பார்க்கும் நம்மையும் அதே மருத்தமனையில் அனுமதிக்கிறார்.
திரைஅரங்கில் இப்படத்தை புரிந்து பார்த்தல் பார்ப்பவர் அந்த மருத்தவமனையில் இருப்பது உறுதி…
திரைஅரங்கில் இப்படத்தை புரிந்து பார்த்தல் பார்ப்பவர் அந்த மருத்தவமனையில் இருப்பது உறுதி…
குழப்பமான படங்களை சில பேருக்கு பிடிப்பதில்லை. அவர்கள் இப்படத்திற்கு விதிவிலக்கு.
No comments:
Post a Comment