Sunday, August 15, 2010

விமர்சனம்

ஒரு சிபிஐ டைரி குறிப்பு - மலையாளம் - 1988

1988 ம் ஆண்டு மெகாஹிட் படவரிசையில் இது முதல் இடம்


ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு போலீஸ் விசாரணையுடன் படம் ஆரம்பிக்கிறது. அப்பெண்ணோ நடுநிலை வர்க்கத்தை சேர்ந்த பெண். ஆனால் கணவர் வீடோ பணக்கார குடும்பம். தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்னவென்று தேடி முதலில் வரும் நேர்மையான அதிகாரி விசாரிக்கிறார். ஆனால் அந்த அதிகாரி மாற்றம்              செய்யபட்டு, கணவர் வீட்டுக்கு தேவையான வேறொரு அதிகாரி வந்து அது தற்கொலை என்று விசாரணையை முடிந்து விடுகிறார். ஆனால் அப்பெண்ணின் அப்பா மற்றும் தங்கை ஊர்வசி விடாமல் முயற்சி செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐக்கு போகிறது. இதில் சிபிஐ அதிகாரியாக நம்ம தலைவர் மம்மூட்டி. அவருக்கு துணை அதிகாரியாக சுரேஷ் கோபி. அப்பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை நடந்து இருக்கிறது, அக்கொலையை செய்தது யார் என்பதை தன் விசாரணையின் மூலமாக கண்டுபிடிக்கிறார். 


மலையாள படம் என்பதாலோ அல்லது 1988 ம் படம் என்பதாலோ, எந்த வித அலட்டலும் இல்லாமல் செருப்பு போட்டு கொண்டு, சட்டையை டக்கின் கூட செய்து கொள்ளாமல் வெறும் நடையில் மற்றும்  நடிப்பில் கலக்கி இருப்பார். இவர் வந்த உடன் படம் செல்லும் வேகம் அதிகமாகிறது. ஒரு பொம்மையை வைத்து கொண்டு, அது விழும் தூரம் பார்த்து கணக்கிட்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று முடிவெடுக்கின்றனர். நமக்கு இப்போது சிரிப்பு வந்தாலும் கூட, அக்காலத்தில் யோசிப்பது பெரிய விஷயம் தான்.

மம்மூட்டிக்காக பார்க்க படவேண்டிய படம் தான்

I hate luv storys – 2010 - ஹிந்தி


நாயகன் - காதலை முழுவதுமாக வெறுப்பவன். நாயகி - காதலை முழுமையாக நம்புபவள். 
ஏற்கனவே இன்னொரு நபருக்கு பேசப்பட்ட நாயகி, தன்னுடம் வேலை செய்யும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். நாயகி தன் காதலை வெளிபடுத்தும் போது, நாயகன் ஏற்காமல், நாம் நண்பர்கள் என்று கூறி மறுக்க, நாயகியும் ஒப்புகொள்கிறாள். முடிவு செய்யபட்ட நபருடன் கல்யாணத்திற்கு ஒப்பு கொள்ள அதே நேரத்தில் நாயகனுக்கும் காதல் பிறக்கிறது. முடிவில் அவர்கள் இணைந்தார்களா அல்லது பிரிந்தார்களா எனபதே கதை. 

படம் இழுவை என்றாலும், மனதில் நிற்கவே இல்லை. அதனால் நாமும் இப்படத்தை பற்றி எழுதவில்லை.

No comments: