Wednesday, August 04, 2010

தொழில்நூட்பம்

எபிக் இணையுருவல்

முழுமையாக இந்தியாவில் தயாரிக்க பட்ட இணையுருவல் எபிக்.
இந்தியாவின்
உள்ள அனைத்து முக்கிய மொழிகளும் இதில் காணலாம். அதே போல் இந்தியாவின் உள்ள அனைத்து முக்கிய விஷயங்களும் இதனின் பின்புறமாக வைத்து கொள்ள முடியும். உதாரணமாக மதுரை கோவிலின் கோபுரத்தை பின்புறமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால்  உலக தரம் என்று பார்த்தல் சில குறைகள் உண்டு. அதை எப்படி அடுத்த பதிப்புகளில் நிவர்த்தி செய்கின்றனர் என்பதை பொறுத்து தான் இதனுடைய வெற்றியே.



ஐபோனில் தமிழ்

ஐபோனின் பழைய பதிப்புகளில் எனக்கு மிக பெரிய பிரச்சினையாக தெரிந்த பல்மொழி எழுத்து தெரிதல், புதிதாக வந்து உள்ள பதிப்பில் அருமையாக தீர்க்க பட்டு உள்ளது. சீனா, ஜப்பானிய மொழி மட்டும் இல்லாமல் இந்திய மொழிகள் கூட தற்போது படிக்க முடிகிறது.  ஐபோன் பழைய பதிப்புகளில் (3GS), புதிதாக வந்து உள்ள மென்பொருளை பயன்படுத்தி பழைய பதிப்புகளில் கூட இந்த வசதியை பயன்படுத்த முடிகிறது. 

தமிழ் படம் இணையதளங்கள்

தமிழ் திரைப்படங்களை இணையத்தில் காண பல இணைய தளங்கள் உண்டு. ஆனால் அந்த தமிழ் இணைய தளங்கள் சரியாக பராமரிக்க படுவதில்லை. அதன் காரணமாக அந்த இணைய தளத்திற்கு
  சென்றாலே நம்முடைய கணிப்பொறியில் வைரஸ் வந்து விடுகிறது. குறிப்பாக தமிழ் தளங்களை யின் வழியாக பார்க்க கூடாது. http://www.tamilflix.net சென்றதால் என்னுடைய கணிபொறி மட்டும் இல்லாமல் நண்பரின் கணிபொறிக்கும் வைரஸ் வந்து விட்டது. அதை எடுத்துவிடுவதற்குள் பிரணமே போய் விட்டது.

1 comment:

குடந்தை அன்புமணி said...

தாம்பரத்திற்கு அருகில் குமரன் குன்றம் என்ற முருகன் கோயில் உள்ளது. அடுத்த
முறை வந்தால் அவசியம் வாங்க. (இந்தக் கருத்துரை உங்கள் பழைய இடுகைக்கானது)