Friday, August 27, 2010

ஹரி பிரவுன் – Harry Brown – 2009 - ஆங்கிலம் - திரைவிமர்சனம்


முதுமையான காலத்தில் தனியே வாழும் மைக்கேல் கினே, உடம்பு சரியல்லதா நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியை போய் கவனித்து கொள்வது தான் அவருடைய வேலை. மாலை பொழுதில் தன் நண்பர் டேவிட் பிராட்லி உடன் பாரில் அமர்ந்து செஸ் விளையாடுவது பொழுதுபோக்கு. மனைவி இறந்து போக, மேலும் தனிமை படுத்த படுகிறார். இந்த நிலையில் நண்பர் தற்காப்புக்காக ஒரு கத்தியை வைத்து இருப்பதை காட்டி, அவர் இருக்கும் ஏரியாவில் இளவயது மக்களால் தனக்கு என்று படும் பிரச்சனையை கூறுகிறார். அங்கு இருக்கும் இளம்வயதினர் துப்பாக்கி வைத்து இருப்பதையும், போதை பொருள் அடிமைகளாக இருப்பதையும் மற்றும் கொலைகள் கூட அங்கே சாதாரணமாக நடப்பதை கூறுகிறார். அந்த இடத்தை தாண்டும் போது பல பிரச்சனைகள் தனக்கு ஏற்படுவதாகவும், அதனால் கத்தியை தற்காப்புக்காக வைத்து இருப்பதை கூறுகிறார். ஆனால் இதை காவல் துறையிடம் கூறலாம் என்று கூறி சென்று விடுகிறார். 


அடுத்த நாள் காலையில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் வந்து நண்பர் இறந்து விட்டதாகவும், அவரை பற்றி விசாரித்தும் வருகின்றார். ஆனால் மைக்கேல் மனம் உடைந்து போகிறார். காவல் துறை அதிகாரிகளின் விசாரணை ஆரம்பிக்கிறது. ஆனால் விசாரணை முடிவில் என்ன நடந்தது மற்றும் மைக்கேல் என்ன செய்தார் என்பதை திரையில் காணலாம்.




முதுமை காலத்தில் உள்ள தனிமையை இங்கே பார்க்கும் போது மனதில் ஒரு வலி ஏற்பட தான் செய்கிறது. எப்படி இந்த வயதிலும் மைக்கேல் நடிக்கிறார் மற்றும் ஓடிகிறார் என்றே தெரியவில்லை. பழிக்கு பழி வாங்கும் கதைகள் பல இருந்தாலும், உண்மையான முதுமை காலத்தில் பழி வாங்குதல் என்பது கடினம் தான். திரைகதை மிக மெதுவாக சென்றாலும், முடிவில் ஓகே என்றே தோன்றும்.

இப்படம் இருப்பதே நமக்கு தெரியாது. நம்ம சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிக்குமார் இதே படத்தை "நகரம்" என்ற பெயரில் நம்மூர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சில மாறுதல்களை செய்து இயக்குவதாக கேள்வி பட்டதால் இந்த படத்தை தேடி கண்டுபிடித்து பார்த்தேன். இது உண்மையா என்று தெரியவில்லை. இருந்தாலும் இப்படம் ஓகே தான்

1 comment:

geethappriyan said...

படம் பார்த்திருக்கிறேன்,நன்றாக இருக்கும்,நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பா