சென்னையில் இருந்து பொதிகை, நெல்லை, அல்லது பாண்டியன் விரைவு ரயில்களில் மூலமாக, மதுரைக்கு புறப்பட்டு எழும்பூர் அல்லது தம்பரத்தை விட்டு செல்லும் போது, எதோ ஒரு நிம்மதி...
அதுவே, "மதுரை சந்திப்பு" என்று மதுரை ரயில் நிலையத்தில் அந்த பலகையை பார்க்கும் போது, நமக்கே தெரியாமல் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி, முகத்தில் ஒரு புன் சிரிப்பு.. இந்த மகிழ்ச்சிக்கும், சிரிப்புக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு ஆகாது... இத்தனைக்கும் தலைநகர் சென்று ஐந்து ஆண்டுகள் மேல் ஆகி விட்டது..அதுக்கு உரிய காரணம் அனுபவித்தல் மட்டுமே புரியம்..
ஞாயிறுக்கிழமை அன்று நெல்லை அல்லது பாண்டியன் விரைவு ரயில்களில் மூலமாக சென்னைக்கு செல்லும் வழியில், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து மதுரையை விட்டு, வைகை பாலத்தை தாண்டும் போது இருக்க கூடிய முகம் சொல்லில் அடங்க சோக முகம்...இதையும் அனுபவித்தல் மட்டுமே புரியம்..
இந்த பதிவு எந்த அளவு உண்மை என்பதில் எனது நண்பன் செந்தில் அவர்களுக்கு தெரியும்...
1 comment:
ஆனால் இந்த கொடுமை தற்பொழுது பழகி விட்டதாகவே தோன்றுகிறது.. எனக்கு மதுரையில் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் இருக்க முடியவில்லை. பொழுது போக மாட்டேன் என்கிறது..சென்னை பழகிவிட்டது...
Post a Comment