Sunday, December 27, 2009

விக்டோரியா எட்வர்டு மன்றம்

மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம், 1907ல் உருவாக்கபட்டது. தற்போது தியேட்டராக இருக்கும் இம்மன்றம், வனவிலங்கு மியூசியமாக இருந்தது. இதையொட்டி நூலகமும் இருந்தது. இம்மன்றத்தை, 'ராபர்ட் பிஷர் எஷ்கொயர்' என்ற ஆங்கிலேயர் உட்பட 25 பேரும் சேர்ந்து உருவாக்கினர். இங்கிலாந்து ராணி எலிசபெத், மதுரை வரும் போது இங்கு விஜயம் செய்திருக்கிறார். இதன் நினைவாக, இம்மன்றத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அரசின் அனைத்து கெஜட்டுகளும் இங்குள்ளது சிறப்பு.  இந்நூலகத்தில், 18ம் நூற்றாண்டு முதல் 200 ஆண்டுகள் பழமையான நூல்கள் இங்குள்ளன. தற்போது 'மைக்ரோ பிலிம் பிராசிசிந்' மூலம், இதன் பழமை அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.  உறுப்பினர் கட்டணம் ஒரு ரூபாய் தான். இரு புத்தகங்களுக்கு உறுப்பினர் கட்டணம் ஐந்து ரூபாய். அனால் யாரும் எளிதில் இங்கு உறுப்பினர் ஆக முடியாது. மொத்தம் 1700 நிரந்தர உறுப்பினரகளாக உள்ளனர். இம்மன்றத்தின் மூலம் ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர். மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக இம்மன்றம் கருதப்படுவது சிறப்பு.

No comments: