Saturday, December 12, 2009

திரைவிமர்சனம்

சமீப காலமாக எனக்கு நேரம் கிடைக்கததால் திரைப்படத்தை பார்க்க முடிய வில்லை... அப்படியே பார்த்தாலும் விமர்சனத்தை வலைதளத்தில் கொடுக்க முடிவதில்லை... கடந்த மாதத்தில் பார்த்த படங்களின் ஒருவரி விமர்சனம்..

மதுரை சம்பவம்:


"மதுரைக்கு பல சந்து, ஓ மாமனுக்கோ ஒரே லந்து.." என்று மதுரை தொடர்பு உடைய பொன் மொழிகளுடன், மதுரையை மையப்படுத்தி உள்ள படம்...கண்டிப்பாக குறும் தட்டின் மூலமாக பார்க்க பட வேண்டிய நல்ல திரைகதை அம்சம் கொண்ட படம். நான் பார்த்த காரணமோ மதுரை... ஆனால் கதையின் நாயகனை விட்டு விட்டு கதைக்காக பார்க்கலாம்...

சிந்தனை செய்:


"நான் காக்கி நாடா கட்ட..." என்ற பாடலை பார்த்த பிறகு, கண்டிப்பாக இத்திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஏறக்குறைய இரண்டு மாதம் மேல் இதனுடைய குறும் தட்டை தேடி, கண்டுபிடித்து பார்த்த படம்..

நடிகர்கள் மற்றும் இப்படத்துக்கு வேலை பார்த்தவர்கள் என்று பார்த்தல் அனைவரும் புதிது தான்... ஆனால் நல்ல கதை மற்றும் திரைக்கதை உள்ள படம்.. இன்றைய நாகரீக பெண்களின் தவறை சுட்டி காட்டி, நடு வகுப்பில் அமர்ந்து இருக்கும் மாணவர்களின் வாழ்க்கை காட்டி, திரைக்கதையை நன்றாக அமைத்து இருக்கிறார்... "ஆம்பிலேன சொத்து தரனும் அல்லது சுகத்தை தரனும்" என்னும் வசனத்தின் போதும், அதற்கு கடைசியில் நாயகன் பதில் சொல்லும் போது இயக்குனர் நிற்கிறார்.

கண்டிப்பாக குறும் தட்டின் மூலமாக பார்க்க பட வேண்டிய படம்..

கண்டேன் காதலை:


ஜப் வே மேட் என்ற இந்தி திரைப்படத்தை மூன்று முறைக்கு மேல் பார்த்தாகி விட்டது... அதே படம் தமிழில் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம்..கதையை தவிர இப்படத்திற்கு பலம் சந்தானம் மட்டும் தான்... சொல்கின்ற அளவு வேறு எந்த விஷயமும்இல்லை..

சாட் பூ திரி


இளைய தலைமுறைகள் மட்டும் வீட்டில் ஆள் இல்லாத போது தனியாக அமர்ந்து பார்க்க பட வேண்டிய மோசமான நகைச்சுவை படம்... சொல்ல போனால் இத்திரைப்படத்தில் வரும் கதா பாத்திரங்கள் நம்முடன் தினமும் பழகும் நண்பர்கள், உறவினர்கள்... படத்தை பார்க்கும் போது கண்டிப்பாக அந்தபாத்திரங்கள்  நினைவுக்கு வரும்... நகைச்சுவையாக தான் இருக்கும்.. என்ன குடும்பத்துடன் பார்க்க முடியாது...


2012


கதையை பார்த்தல் ஒன்றும் இல்லை.. உலக தலைவர்கள் ஒன்று கூடுவது, உலக அழிவில் இருந்து அவர்கள் தப்புவதற்காக வழி ஏற்படுத்தி கொள்வது என்று சென்றாலும்..கணினிப் பயன்படுத்தி உலகம் அழிதலை பிரம்மாண்டமாக காட்டி விமர்சனத்தை கட்டி போடுகிறார்.. இந்த படத்திற்கு வெற்றி எது என்றால், சென்ற வாரத்தில் நமது பிரதமர் ரஷ்யாவில் உலக வெப்ப தடுப்பு மாநாட்டிற்கு செல்லும் போது இத்திரைப்படத்தின் உலக தலைவர்கள் ஒன்று கூறுவது காட்சிகள் கண் முன்னே வந்து நின்று, நமது உண்மையான உலகமும் இதே போல் அழிந்து விடும் என்ற பயத்தை மனதில் உருவாக்கி விட்டதே..

No comments: