நேற்று இரவு தீடிர் என்று எங்கள் பகுதியில் என்ற சூறாவளி காற்று வர போகிறது என்று தெரிந்த உடன், பதற்றம் தொற்றி கொண்டது. அதற்கு காரணம் மூன்று தினங்களுக்கு முன்னால், எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ஜோப்ளின் இடத்திற்கு வந்து சென்ற கொடுரமான வலுவான சூறாவளி தான். அமெரிக்கா வரலாற்றில் முதல் பத்து இடங்களில் உள்ள மோசமான சூறாவளி இடத்தில் மூன்று தினத்திற்கு முன்னால் வந்த ஜோப்ளின் சூறாவளியும் சேர்ந்து கொண்டது என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். அதே போல் ஜோப்ளின் நகரத்தின் 20% முழுவதுமாக அழிந்து விட்டது. இதே போல் இன்னொரு சூறாவளி நேற்று என் வீட்டிற்கு அருகில் வருவதாக அறிந்த உடன், இந்தியாவில் இது போன்ற வார்த்தையை கூட கேள்வி படாத நிலையில், என் மனநிலையை பற்றி என்ன சொல்ல. எத்தனை மணிக்கு என்று பார்த்தல் இரவு 10 முதல் 10:45 வரை. தொடர்ந்து வானிலை செய்திகளை பார்த்துக் கொண்டு, எங்கள் பகுதிக்கு அருகில் வந்து விட்டது என்ற அறிந்த கொண்ட உடன், எங்கே போய் அமர்ந்து கொள்ளலாம் என்று பார்த்து வருவதற்குள், அந்த சூறாவளி வலுவிழந்து போய்விட்டதாக அறிய நிம்மதி வந்து விட்டது. .
ஜோப்ளினில் வந்த சூறாவளி வீடியோ
ஆனால் கொடுமையே, 11 மணிக்கு தான் புயல் மழை ஆரம்பித்தது. பத்து நிமிடம் கழித்து புதிதாக மீண்டும் சூறாவளி எங்கள் அருகில் வருவதாக கூற அதுவும் 12 மணி முதல் 12:45 வரை எச்சரிக்கை கொடுக்க, என்ன கொடுமட என்ற நிலை வந்து விட்டது. 12 மணிக்கு முன்னதாகவே சூறாவளி வர, பயம் தொற்றி கொண்டது உண்மை தான். ஆனால் எங்கள் அதிஷ்டமோ சூறாவளி வலுவிழந்து வந்தது தான். 12 மணி 12:30 வரை காற்று பலமாக தான் அடித்து கொண்டு இருந்தது.
எந்த வித பதிப்பும் இல்லாமல், நிம்மதி மூச்சு விடவே 12:45 இரவு ஆகிவிட்டது. இந்தியாவில் இருக்கும் போது பத்து மணிக்கு தூக்கும் நான், என் நிலைமையை பார்த்து சிரிக்காத குறை.
இந்த மாதிரியான நிலை இந்தியாவில் கிடைக்காது என்பதால், என் அனுபவத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சி தான் இது.
2 comments:
Where are you now? We got a Tornado warning, last night too.
Am in staying in Bentonville, AR.
Post a Comment