Sunday, May 15, 2011

கலவைகள்


அரசியல்:

மக்கள் சந்தோஷ படுவதற்கு காரணம், தி.மு. தோற்றது தான். .தி.மு. வென்றதற்கு அல்லஒட்டு போட்ட மக்கள், தி.மு..வின் தோல்வியை காண, மிகவும் ஆர்வம் கொண்டார்கள் என்பதை, தேர்தல் முடிவை வெளியிட்ட இணைய தளங்கள் செயல் படாமல் போனதில் இருந்தே தெரிந்துக் கொள்ள முடிகிறது.காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தமிழக மக்கள், மத்திய அரசிற்கு தமிழன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை காட்டி, இரண்டு கன்னத்திலும் அறைந்து வெளியே அனுப்பி உள்ளனர். இருந்தாலும் அவர்கள் எப்படி ஐந்து தொகுதிகளை வென்றனர் என்று ஒரு கேள்வி மிச்சம் உள்ளது. வெற்றி பெற்ற அம்மாவிற்கு வாழ்த்துக்கள். அம்மாவிடம் இருந்து எதிர்பார்ப்பது உடனடியாக அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி குறைவு மற்றும் ஈழதமிழனுக்கு ஒரு நம்பிக்கை.

============================

சமீபத்தில் படித்தது:

பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்று இரண்டு காவியங்கள் படித்து இருந்தாலும், பார்த்திபன் கனவு என்ற இன்னொரு காவியம் மிச்சம் இருக்கிறதே என்ற எண்ணம் உள்மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது. இப்போது தான் அதை படித்து முடித்தேன். பா.கவும் மிக அருமையான கதை மற்றும் விவரித்த விதம் நம்மை கட்டி போட்டுவிடும்

ஒரு கதை எப்படி எல்லாம் சொல்ல முடியும் என்பதற்கு ஒரு படலத்தை படித்தாலே போதும். அதே போல் சில கதைகள் படிக்கும் போது, அக்கதையில் வரும் கதாபத்திரங்களாகவே நம்மை மாற்றி, நாமும் கதையுடன் பயணிப்போம். அந்த மாதிரியான கதைகள் தான் இம்மூன்றும். பா.கவில் இருக்கும் முதல் சாரம். இதை படிக்கும் போது, கதை விவரித்த விதம் தெரிந்து விடும். படிக்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை.


காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவா கத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோ டொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களின் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற் கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன.

கண்ணுக் கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று

==========================

சித்த மருத்துவம்:

காரணமே இல்லாமல் இதில் ஒரு ஆர்வம்



=====================

அனுபவம்:

ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்னால், வெளிநாட்டில் இருந்து ஒருவர் இந்தியா/தமிழ்நாடு வருகிறார் என்றால், அவரிடம் மளிகை கடை சீட்டு போல், அனைவரும் ஏதாவது ஒரு பொருளை வாங்கிவர சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலைமை வேறு. வெளிநாட்டில் கிடைக்கும் அனைத்து பொருட்களும், நம்மூரில் கிடைக்கிறது. இது 90 சதவீதம் உண்மை. அது என்ன மீதம் உள்ள பத்து சதவீதம் என்று கேட்டால் தொலைக்காட்சி பெட்டி போன்ற சாதனங்கள். இங்கு கிடைக்கும் தொலைக்காட்சி நம்மூரில் விலை என்ன வென்று கேட்டால், மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது அமெரிக்காவில் Sony Bravia 40 Inch Led 3D தொலைக்காட்சி சுமார் $750 - $950 இருக்கும். ஆனால் இந்தியாவிலே 1.2 லட்சம். ஏன் இந்த வித்தியாசம் என்று இன்றும் என்னால் புரிந்துக் கொள்ளவில்லை. நான் கண்ட காட்சி இது தான். அமெரிக்கா மக்கள், தக்காளி மற்றும் வெங்காயம் வாங்கும் அதே இடத்தில், அதே நேரத்தில் இந்த தொலைக்காட்சியும் சேர்த்து வாங்கி கொண்டு செல்கிறார்கள். ஆனால் நம்மூரிலோ வேறு விதம். தீபாவளி, பொங்கல் என்று எதாவது ஒரு விஷேச காலத்தில் மட்டுமே தொலைக்காட்சி வாங்கும் பழக்கும் உடையவர்கள். இந்த வித்தியாசம் தான் காரணமா என்று கேட்டால் இல்லை. என்ன வென்று தெரிந்தது கொள்ள முயற்சிக்கிறேன். சரி விசயத்திற்கு வருவோம்.

நண்பர் ஒருவர், இந்தியா செல்லும் போது இங்கிருந்து தொலைக்காட்சி பெட்டியை, FedEx மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் போது தொலைக்காட்சியும் வர, அதை எடுத்து படம் பார்க்கும் போது தான், தொலைக்காட்சி உள்ளே உடைந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது. உடனே அழைத்து கேட்டால் சரி செய்ய 34 ஆயிரம் ஆகும் என்று கூற மிரண்டு போய் இருக்கிறார். இந்தியாவில் அவர் வாங்கின தொலைக்காட்சியின் விலை 1.2 லட்சம். ஆனால் அமெரிக்காவில் வாங்கின விலையோ 40+ ஆயிரம். அவர் செய்த நல்ல காரியம், FedEx போடும் போது இன்சூரன்ஸ் எடுத்தது தான். தொலைக்காட்சி உடைந்தது வரும் வழியில் என்பதால், இன்சூரன்ஸ் பணம் கொடுப்பதற்கு வழி இருக்கிறது. நண்பர் இன்சூரன்ஸ் நபரை அழைத்து பேசி, விளக்கி இருக்கிறார். பணம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் நண்பரும், நானும்.

============================

நான் ரசித்த காட்சி:

இந்த ஒரு காட்சியில் இயக்குனரின் திரைக்கதை உத்தி, இசை, ஒளிபதிவு மற்றும் காட்சி அமைப்பு என்று அனைத்துமே தெரிந்துவிடும்


======================

பயணம்:

அமெரிக்காவின் பெரிய நகரமான நியூயார்க் மற்றும் அமெரிக்காவின் ஆட்சி நடைபெறுகின்ற வாஷிங்டன் டி.சி ஆகிய நகரங்களுக்கு ஒருவழியாக பயணம் முடிந்தது.  சொல்லும்படியாக அவ்வூரின் முக்கிய நினைவுகள் என்று பார்த்தால் நியூயார்க்கில் பலதரப்பட்ட (உலக மக்களின்) வாழ்க்கை, புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்,சுதந்திர தேவி மற்றும் இரவு உல்லாச வாழ்க்கை. இதே போல் வாஷிங்டனில் வெள்ளை மளிகை, அனைத்து மத்திய அரசின் அலுவலகங்களின் ரோமானிய அமைப்பு படி மற்றும் அவர்களின் சாதனையை விளக்ககூடிய நினைவு ஆலயங்கள்மிச்சம் இருப்பது மேற்கு பகுதி தான். நேரம் கிடைக்காமல் சென்று விடுமா என்ன அதற்கு.

புதிதாக கட்டப்படும் இரட்டை கோபுரம்

இரவு வாழ்க்கையின் ஒரு பகுதி

சுதந்திர தேவி

வெள்ளை மளிகை

குறிப்பாக வெள்ளை மளிகை பார்க்கும் போதும், இந்தியாவில் இருக்க கூடிய பாராளுமன்றத்தை பார்த்தது கிடையாது. ஏன் தென்இந்தியாவை தாண்டுனதே கிடையாது.  நான் இருப்பதோ மத்திய அமெரிக்காவில். அமெரிக்க வந்த உடனே வெள்ளை மளிகை. இது உனக்கு தேவையா? என்ற உள் மனது கேள்வி எழாமல் இல்லை. இந்த நாட்டிற்கு வந்த உடன், இந்த ஊரின் மக்கள் நிலை நமக்கு வந்து விடுவதால் தான், நாமும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறோம் என்ற வரிகளுக்கு நான் ஒத்துக் கொள்ள போவதில்லை. நம்மூரிலும் மக்கள் பல இடங்களுக்கு சென்று பலவற்றை காண்கின்றனர் என்று சென்று பார்த்தால் தான் தெரியுமே தவிர, பேசினால் வேலைக்கு ஆகாது என்பது நிதர்சனம்.

No comments: