எங்கள் அண்ணன், மதுரையின் ஆண்டாள் புறம் சிங்கம் என்று எங்களால் அழைக்கப்படும் மற்றும் எனது பொறியியல் கல்லூரி நண்பர் செந்தில் குமாரின் திருமணம் இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பொறியியல் கல்லூரி வாழ்க்கையில், அரசு பேருந்து பயணத்திற்கு கூட முக்கியமான இடம் உண்டு. மூன்று வருட அந்த வாழ்க்கையில் என்னுடன் வந்த நண்பர் இவர் மட்டுமே. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் காலை ஏழு மணிக்கு வந்து, பேருந்தில் புத்தகத்தையோ அல்லது கை துண்டையோ போட்டு, இடத்தை பிடித்து ஒருவர், இன்னொரு நண்பருக்காக காத்து இருந்தது மற்றும் மாலையில் கல்லூரி டீ கடையில் சேர்ந்து நடத்திய கூத்துக்கள் என்று பல. கல்லூரி வாழ்க்கை முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட தொடர்பு விடாமல் அதே போல் என்னுடன் பேசி கொண்டு இருக்கும் ஒரே நபர் இவர் தான். கண்டிப்பாக இவரது திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இப்போது பலிக்காமல் போய் விட்டது என்ற வருத்தம் இப்போது உண்டு.