குமார் வேகமாக தனது காரை ஆரோர கோவிலுக்கு ஒட்டி கொண்டு இருந்தான். அவன் கோவில் அடையும் முன்னால், அவனை பற்றி. குமார் மண்ணின் மைந்தன். இவன் மண்ணின் பெருமை பேசும் விதமே தனி. வளர்ந்தது எல்லாமே திருமங்கலத்தில் தான். அவர்களது பெற்றோர்களுக்கு ஒரே மகன். படித்ததும் முக்குலோத்தோர் பள்ளியில் தான். சொந்த பந்தங்கள் அனைத்திலும் அவனுக்கு சமமான ஆண்கள். அதனால் பெண்ணால் என்ற வாடையே இல்லாமல் வளர்ந்து இருந்தான். பெண்களிடம் பழகும் முறை என்றால் கூட தெரியாமல் இருந்தது. சென்னையில் முதல் முதலாக வேலைக்கு சேரும் போது, சென்னை தோழர்கள் கிடைத்ததும், அந்த தோழர்கள் உடனே அமெரிக்கா வந்ததும், பெரிய வித்தியாசத்தை பார்க்கவில்லை. அமெரிக்காவிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வாழ்வில் ஒரு மாற்றம் இல்லாமல் போகிறதே என்ற எண்ணம் உள்மனதில் இருந்தாலும், வெளியில் காட்டி கொள்ளமல், இப்போது காரை ஒட்டி கொண்டு இருக்க, காரில் நண்பர்கள் அனைவரும் பேசி கொண்டே இருந்தனர்.
இவர்கள் அக்கோவிலுக்கு செல்வதே இரவு உணவை முடிக்க தான் என்பது சொல்ல வேண்டியதில்லை. சிகாகோவில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். 90% மேல் அக்கோவிலுக்கு வருபவர்கள், அங்கு கிடைக்கும் தென் இந்திய உணவுக்காக மட்டுமே. குமாரும் கோவில் சென்ற காரணத்தினால், முதலில் பாலாஜியை பார்த்து விட்டு, மிக வேகமாக உணவு கிடைக்கும் இடத்தில் சென்று டோக்கன் வாங்க வரிசையில் நின்று கொண்டான். எப்போதும் போல் இல்லாத ஒரு மகிழ்ச்சி அதுவும் உள் மனதில். ஏதோ ஒரு நறுமண வாசம், ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தியது. யார் என்று திரும்பி பார்க்கும் போது, நண்பர்கள் அனைவரும் வரிசையாக நின்று இருந்தனர். இரவு உணவை முடித்து விட்டு வெளியே செல்லும் வேளையில், யாரோ தெரியாமல் இடித்ததிற்கு "சாரி" கேட்க, பரவா இல்லை என்று கூறுவதற்கு திரும்ப, கோவில் மணி அடிக்க, இவன் முகத்தில் ஒரு பளிச். ஆம் பார்த்தது அர்ச்சனா(வை). அந்த நறுமணம் அடித்து இவளிடத்தில் இருந்து தான் என்று முதலில் இழுக்கும் மூச்சிலேயே தெரிந்து கொண்டான்.
அர்ச்சனா, அமெரிக்கா வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. பல காலத்திற்கு முன்னர், தெலுகு தேசத்தில் இருந்தது தமிழ் நாட்டிற்கு குடியேறி வந்த மக்கள். வீட்டில் பேசுவது தெலுகு தான் என்றாலும், சென்னையை வீடாக கொண்டவர்கள். ஆனால் இவளுக்கும் தெலுகு பரம்பரையில் சாயல் இருக்க தான் செய்தது. ஆம் அமெரிக்காவிலேயே குடியேறி விட வேண்டும் என்பது தான். குமாரிடம் சாரி கேட்ட உடன், ஒரு வெட்கம் தன்னுள் வந்ததை உணராமல் இல்லை.இருவரும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே தங்கள் காரில் ஏறி சென்று விட்டனர். வீட்டு வந்த பின் அந்த எண்ணங்களை மறந்து, அவன் செயல்களை செய்துக் கொண்டு இருந்தான். சில சமயங்களில் மட்டும், தீடிர் என்று தேவதையின் முகம் நினைவில் வந்து செல்லும். எப்படியும் மறுமுறை அவளை பார்ப்போம் என்று நினைத்து, அடுத்த காரியத்து சென்று விடுவான். இரண்டு வாரம் கழித்து, இரவு பத்து மணிக்கு, கை தொலைபேசி அழைப்பு.
1 comment:
Maams yaruda indha kumar ?
Post a Comment