Tuesday, March 22, 2011

ஆக்ரோஷ் – இந்தி - 2010



தன்னுடைய பிள்ளை ஊரை விட்டு வெளியே சென்று படித்தால், காதல் வலையில் விழுந்து தன்னுடைய ஊரின் மானத்தை கெடுத்து, தன்னுடைய குடும்ப கௌரவத்திற்கு களங்கம் வந்தது விடுமோ என்ற எண்ணத்தில் ஒரு தந்தை, மகனை படிக்க வைக்கவில்லை. இந்த விஷயம் தமிழ் நாட்டில் தான் நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது தந்தையே நீயா நானா நிகழ்ச்சியில் பேசியது. அவரின் ஊர் கிருஷ்ணகிரி என்று நியாபகம். இதே போல் ஊரின் மானம், மேல் ஜாதியினர் மற்றும் கீழ் ஜாதியினர் என்ற ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது என்பது நிதர்சனம். கௌரவ கொலைகளும் இதே காரணத்தால் தான் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடைப் பெற்று கொண்டு தான் இருக்கிறது. வடஇந்தியாவில் நடைப்பெறும் கௌரவ கொலைகளை அலசும் படம் தான் இது. இயக்குனர் பிரியதர்சன் உருவாக்கத்தில் வெளிவந்த தரமான திரைப்படத்தில் முக்கிய இடம் இப்படத்திற்கும் உண்டு.
டெல்லி மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை காணமல் போக, சி.பி.ஐ விசாரணைக்கு வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகளாக அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் கண்ணா. உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும் மேல் ஜாதி மக்களின் ஒருவராக இருக்க, தொடர் கௌரவ கொலைகள் மறைக்க படுகின்றன. அதே போல், கீழ் ஜாதி மக்கள், உண்மையை சொன்னாலோ மற்றும் மேல் ஜாதி மக்களை முறைத்தலோ, அவர்களின் குடும்பமே கொலை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் நபர்களின் துணை இல்லாமல், எப்படி இந்த கொலைகளைப் பற்றி வெளியே கொண்டு வர படுகிறது என்பதே கதை.

அஜய் தேவ்கன் நடிப்பில் அசத்தி இருப்பார். போலீஸ் அதிகாரிகளை முறைக்கும் காட்சிகள் ஆகட்டும் மற்றும் எப்படி இந்த கொலைகளை கையாள வேண்டும் என்பதை எடுத்து சொல்லும் இடத்தில், மனிதன் நிற்கிறார். அக்ஷய் கண்ணா எப்போதும் போல் நிதானமான நடிப்பு. ரீமா சென் மற்றும் பிபாஷா அவர்களின் எடுப்பு, கதைக்கு பிடிப்பு. இந்த மாதிரியான மக்களும், இந்தியாவில் வாழ்கிறார்கள் என்றால் நம்ப தான் முடியவில்லை.

இந்த படத்தின் அனைத்து காட்சிகளும், காரைக்குடியில் எடுக்க பட்டவை. பிரியதர்சனின் இந்தி படபிடிப்பு காரைக்குடியில் என்று அதிக நாளுக்கு முன் கேட்டதாக மற்றும் படித்தாக நியாபகம். எதோ ஒரு காட்சியில் எடுக்க படுகின்ற இடத்தின் சாயல் தெரிந்து விடும். ஆனால் எப்படி தான் தமிழ் நாடு என்ற விஷயத்தை முழுவதுமாக மறைத்து, வடஇந்தியாவாக காரைக்குடியை காட்ட முடிந்ததோ. வாழ்த்துக்கள் பிரியதர்சன் அவர்களுக்கு. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் தான்.

No comments: