வினயகுடு - தெலுகு - 2008
கிருஷ்ணுடு, சற்று குண்டான எப்போதும் சந்தோஷமாக இருக்கும் நபர். வேலை கிடைத்து அக்கா வீட்டில் இருக்கும் அதே பிளாட்டில் தான் நம்ம நாயகியும் சோனியா தீப்தி. இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்க, முதலில் கிருஷ்ணுடு உடன் மோதலில் ஆரம்பித்து, மெதுவாக நட்பாக மாறுகிறது. நாயகனுக்கு மெதுவாக ஒரு தலை காதல் துளிர் விடுகிறது. இதே நேரத்தில் சோனியாவிற்கு என்று ஒரு மாப்பிள்ளை பெற்றோர் பார்த்து இருக்க, அவர்களும் ஒரு வித நட்புடன் பழகி கொண்டு இருக்கும் போது, கிருஷ்ணுடு இந்த விஷயம் தெரிகிறது. இதனால் கிருஷ்ணு தன் காதலை மறைக்கிறான். எதோ ஒரே பிரச்சனையின் காரணமாக சோனியா மற்றும் புது மாப்பிள்ளை பிரிய, கிருஷ்ணு மீது ஒரு மயக்கம் சோனியாவிற்கு விழுகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா என்பதே கதை.
ஒரு வானவில் வண்ணத்துடன், ஒரு காதல் கதை. எங்கேயும் ஒரு வறச்சி இல்லாமல், நம்மை சுற்றி நடக்கும் ஒரு காதல் கதை ஓர் அனுபவம். இந்த படத்தில் கதையை மெல்லிய நகைச்சுவையுடன் சொன்னது தான் படத்தின் வெற்றியே. கிருஷ்ணுடு, நாயகன் எப்படி தான் இதில் நடித்தார் என்று தெரியவில்லை. இவரை போல் நாமும், பல மனிதர்களை பார்த்து இருப்போம். சோனியா, ஒரு தைரியமான பெண்ணின் வடிவம். கதைக்கு ஏற்ற வேடம். பூனம் கூர், நாயகியின் தோழி. இவருக்கு என்று ஒரு தனி கதை சொல்லாமல், முக்கிய கதை காலத்திலேயே இருந்தது கூடுதல் பலம். எந்த வித பிரதிபலனும் பார்க்காமல், செய்த உதவிக்கு நன்றி என்று நாயகனை பார்த்து கூறும் இடத்தில், ஏற்படுகின்ற ஒரு மயக்கத்தை, அதன் பின் ஏற்படுகின்ற காட்சி அமைப்புகள், காதலை முழுமையாக நாம் உணர முடியும். இயக்குனர் சாய் கிரண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இதே படம் தமிழில் வந்ததாக நினைவு. ஆனால் அப்படத்தை பார்த்ததில்லை.
இன் கோஷ்ட் ஹவுஸ் இன் – மலையாளம்- 2010
படம் 70களில் ஆரம்பிக்கிறது. தன் கணவர், கள்ள காதலி மற்றும் ஓட்டுனரை கொலை செய்து விட்டு அங்கேயே பிணத்தை மறைப்பதாக தொடங்கிறது. இப்போது இந்த வீட்டை நான்கு நண்பர்கள் வாங்கி சுற்றலா வீடாக மாற்ற முயலுகின்றனர். நான்கு நண்பர்களாக முகேஷ், ஜகதீஷ், சித்திக் மற்றும் அசோகன். இந்த வீட்டை சுற்றி இருக்கும் பொது மக்கள், இதை பேய் வீடாகவே கருதுகின்றனர். அந்த பேய், பெண்களை தான் தீங்கு செய்யுமே தவிர, ஆண்களை ஒன்றும் செய்யாது என்று நிலைமை வர அவர்கள் தங்களின் மனைவிகளை வர சொல்கின்றனர். ஆனால் நிலைமை மேலும் தீவிரம் அடைய, அவர்களும் ஏதோ ஒரு இடத்தில் மாட்டி கொண்டதாக நினைப்பு வருகிறது.
பேய் இருப்பதாக நினைத்து, அவர்களும் அந்த வீட்டை மறுபடியும் வீட்டின் ஒனருக்கே விற்க முயல, அவரும் மறுத்து விடுகிறார். ஆனால் எதாவது பிரச்சனை என்றால், அருகில் இருக்கும் பாதிரியாரை பார்க்க சொல்கிறார். பாதிரியார் இவருக்கு உதவ முன் வருவதாக கூறி, பேயை விரட்ட வருகிறார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பேய் பிடித்து இருப்பதை கண்டு பிடித்து, விரட்ட முயல்கிறார். ஆனால் வெற்றி யாருக்கு என்பதை திரையில் காண்க. இதில் விஷயமே, இப்படம் நகைச்சுவை படம்.
பேய் இருப்பதாக நினைத்து, அவர்களும் அந்த வீட்டை மறுபடியும் வீட்டின் ஒனருக்கே விற்க முயல, அவரும் மறுத்து விடுகிறார். ஆனால் எதாவது பிரச்சனை என்றால், அருகில் இருக்கும் பாதிரியாரை பார்க்க சொல்கிறார். பாதிரியார் இவருக்கு உதவ முன் வருவதாக கூறி, பேயை விரட்ட வருகிறார். வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பேய் பிடித்து இருப்பதை கண்டு பிடித்து, விரட்ட முயல்கிறார். ஆனால் வெற்றி யாருக்கு என்பதை திரையில் காண்க. இதில் விஷயமே, இப்படம் நகைச்சுவை படம்.
என்னடா பழைய திரைக்கதை போல இருக்கிறதே என்று பார்த்தால், முடிவில் இருக்கும் ஒரு குழப்பத்தை அவிழ்த்து விடுகின்றனர். இப்படம் ஒரு அக்மார்க் முத்திரை பதித்த மலையாள படம் என்று முடிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பொழுது போகாமல் இருக்கும் போது பார்க்க வேண்டிய நகைச்சுவை படம்.
1 comment:
இரண்டு நகைச்சுவை படங்களை பற்றி அருமையாக விமர்சித்து விட்டீர்கள். சூப்பர்!
Post a Comment