மலையாள திரைப்படங்கள் இன்றும் பலசமயங்களில் நல்ல கதை, திரைக்கதை, நடிப்பு என்ற ஏதாவது ஒரு வடிவத்தில் உயர்ந்த இடத்தை பெறும். அதற்கு காரணம் என்று பார்த்தால் அந்த திரைப்படத்தில் இருக்கும் ஒரு உயிரோட்டம. பணம் செலவு செய்யாமல், எந்த வெளி நாட்டிற்கும் செல்லாமல்,நடிப்பு மற்றும் திரைக்கதையை மட்டுமே கொண்டு ஒரு திரைப்படம் என்றால் மலையாள திரைப்படம் தான். 1980ல் நடித்த நாயகர்கள் மட்டுமே இன்றும் நடித்து, நாமும் ரசிக்கிறோம் என்றால் அது தான் மலையாள திரைப்படங்களின் வெற்றி. இப்படத்திற்கு வருவோம்.
1950ம் ஆண்களில் ஒரே நாளில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண், கொலை செய்யப்பட்ட நங்கோதிரி இனத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் அதே நாளில் பிறக்கும் ஒரு குழந்தை என்று படம் ஆரம்பிக்கிறது. கொலை நடந்த இடம் தான் பாலரி. கொலை செய்யபட்ட பெண் தான் மணிக்யம். அதே ஆண்டு இக்கொலை வழக்கிற்கு நீதிமன்றம் வழியாக திசை மாறுகிறது. மம்மூட்டி 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கொலை வழக்கை தனியாக ஆராய்ந்து குற்றம் செய்தவர் யார் என்று கண்டு பிடிக்கிறார்.
மம்மூட்டி ஒரு கதை ஆசிரியர். ஒரு உண்மை கதையை ஆராய்ந்து அதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாக கூறி வந்தாலும், கொலை செய்யப்பட்ட நேரத்தில் பிறந்த குழந்தை. மெகா ஸ்டார் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர் என்று பெயர் இருந்தாலும், இம்மாதிரியான கதையில் நடிக்க ஒரு தைரியம் வேண்டும். இப்படத்தில் மூன்று வேடத்தில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகர் என்று நீருபித்து இருப்பார்.
படத்திற்கு பலமே, இப்படத்தின் திரைக்கதை. ல் இருந்த மக்களின் வாழ்க்கை, மேல் மற்றும் கீழ் ஜாதியினரின் வித்தியாசம் மற்றும் கம்யூனிஸ்டுகள் வளர்ந்த விதம் என்று எல்லாவற்றையும் தெளிவாக கொடுத்து திரைக்கதையை நகர்த்தியது தான் படத்தின் வெற்றி. செல்லப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று, ஒளிபதிவு செய்யப்பட்ட விதம். கடவுளின் நாடு என்பதை ஒளிபதிவாளர் மனோஜ் நீருபித்து இருப்பார். பல காட்சிகள் இரவு பொழுதில் வந்தாலும், அழகை நாம் கண்ணில் நிறுத்தி இருப்பார்
கேரளா நாட்டின் மாநில விருது இப்படத்திற்கு ஐந்து கிடைத்தது. அதே போல் மம்மூட்டி அவர்கள் தனது 50வது சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் பெற்றார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
கேரளா நாட்டின் மாநில விருது இப்படத்திற்கு ஐந்து கிடைத்தது. அதே போல் மம்மூட்டி அவர்கள் தனது 50வது சிறந்த நடிகருக்கான விருதை இப்படத்தில் பெற்றார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
2 comments:
nice review. I would like to see this movie too. :-)
Nirmal..Nice Review...Will see the movie..
Post a Comment