Saturday, January 01, 2011

கடந்து வந்த பாதை - 2010

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத முடிவில், அந்த முழு ஆண்டின் கடந்து வந்த பாதை பார்க்க சொன்னால் அனைத்து நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வர கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனால் கஷ்டம் கூட ஒரு மகிழ்ச்சி தான். எதோ என்னால் முடிந்த அளவு மனதில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை இந்த பதிவு செய்கிறேன்.

கணிபொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் உள்ள ஒரே ஆசை டாலர் தேசத்திற்கு போய் வருவது. அது எனக்கு இந்த ஆண்டு நிறைவேறும் என்று தெரிந்து இருந்தாலும் எப்போது என்பதே கேள்வியாக இருந்தது. எனது கெட்ட நேரம் என்னவோ மூன்று முறை டிக்கெட் எடுத்து, கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்து என்று பெரிய போராட்டமே நடந்தது. கடைசியாக மார்ச் மாதம் டாலர் தேசத்தில் கால வைத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. அதை விட முக்கியமாக நான் இறங்கும் போது, எனது இடம் முழுவதும் வெள்ளை பனி பரவி இருந்தது. என் கண்ணால் என்னையே நம்ப முடியாமல் போன தருணம் அது.

என் தங்கையின் திருமணம் இந்த ஆண்டின் மிக முக்கிய நிகழ்வு.

நான் எனது தங்கையின் திருமணத்திற்கு சென்னை வந்து இறங்கிய உடன், எனக்கு எங்கு சொல்லலாம் என்று யோசித்தால் யாருமே நினைவில் வரவில்லை. என் நண்பர்கள் அனைவருக்கும் திருமண ஆகி விட்டது அல்லது அவர்கள் அவர்களது பெற்றோர்கள் உடன் தங்கி இருந்தனர். அதனால் என்னால் எங்கேயும் எல்லா இயலவில்லை. ஆனால் இப்போது சென்னையில் போய் தங்க ஒரு இடம். அது அமைந்ததும் இந்த ஆண்டு தான்.

சென்னையில் இருந்த கடந்த ஆறு வருடத்தில் பழகியது தமிழக மக்கள் மற்றும் சில தென் இந்தியா மக்கள். ஆனால் இங்கு கிடைத்த புது நண்பர்கள் சில தமிழ் மக்களும் அதிக வட இந்தியா மக்களும். இந்தி பேசும் மக்களின் பழக்கம் முக்கியமாக அவர்களின் உணவு முறையில் இருந்து கூட புது அனுபவம் தான். எப்படி நல்ல மக்களை கண்டேனோ அதே போல் மற்றவர்களுடன் எப்படி பழக கூடாது என்பதற்கு கூட மோசமான கிறுக்கு குண மக்களையும் கண்டேன்.

அமெரிக்காவில் உள்ள முக்கிய ஊர்களை (மியாமி, லாஸ் வேகஸ், டாலஸ், லிட்டில் ராக், மெம்பிஸ்) என்று பார்த்தும் இந்த ஆண்டு தான்.

எனக்கு தெரிந்த வரை என்னில் உள்ள ஒரு முக்கிய குணம் உறவினர்களின் மற்றும் நண்பர்களின் அனைத்து திருமண வைபவத்திற்கு செல்வது. ஆனால் இந்த ஆண்டு தான் மார்ச் மாதம் முதல், பல உறவினர்களின் மற்றும் நெருங்கிய நண்பர்களின் திருமண/வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிக பெரிய வருந்தம் தான்.

சென்னையில் இருக்கும் வரையில் குப்பை படத்தை கூட வெளியாகும் அன்றே பெரிய திரையில் பார்த்து பழகிய எனக்கு, பல வாரம் கழித்து கூட படத்தை என்னால் இங்கு பார்க்க முடியவில்லை. என்னத்த சொல்ல.



எனக்கு பல நல்வித்தையை விதைத்த போல் புது வருடம் எல்லோருக்கும் நல் வாழ்க்கையை கொடுக்க, அதை வரவேற்போம்.

1 comment:

Balaji said...

Little Rock - America-vin mukkiyamaana oora ??