Sunday, January 16, 2011

பொங்கல் – 2011


அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகள். 
 
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கேள்வி. பொருந்து இருந்து தான் பார்க்க வேண்டும். நமக்கு எதாவது வழி பிறக்குமா என்று.

முதன் முதலில் மதுரையை தாண்டி பொங்கல். மதுரைக்கு போய் என்ன பண்ண போறோம் என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றாலும், ஒரு சின்ன சந்தோசம் தான். ஆனால் இந்த பொங்கல் பண்டிகை அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு மூலையில். என்ன தான் மதுரையை விட்டு விட்டோமே என்று நினைத்தாலும், மனதில் ஒரு சின்ன மகிழ்ச்சி தான். என்ன குழப்புறேன் என்று யோசித்தால், அது மதுரை மக்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆம், நான் பேருந்தில் பயணத்தை விரும்ப மாட்டேன். அதனால் எப்படாவது பட்டு, இரயில் இடம் பிடிப்பேன். இதன் காரணமாக மூன்று மாதத்திற்கு முன்னால், அதிகாலை மூன்று அல்லது நாலு மணிக்கே பதிவு செய்யும் இடத்திற்கு சென்று காத்து நிற்பது. அதிலும் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. இடம் இல்லை என்றால், பொங்கலின் ஒரு மாதம் முன்னால், பேருந்திற்கு பயண சீட்டு கேட்டு அலைவது. இப்படி தான் கடந்த ஐந்து வருடமும் சென்று இருக்கிறது. இரயில் இடம் கிடைத்தால், மதுரைக்கு சென்று பொங்கல் முடிந்து திரும்பும் வரை சொர்க்கத்தில் இருப்பது போல் ஒரு எண்ணம். இந்த சொர்க்கத்தை பற்றி, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

சரி பொழப்ப தேடி, இங்கு வந்தாச்சு. நாம் தான் பொங்கலை கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில், காலையில் எழுந்து எலுமிச்சை சாதத்துடன் சாம்பார் செய்து ஒரு வழியை முடித்து விட, மனதில் ஒரு சிறு நெருடல். என்னடா பொங்கல் அன்று சக்கரை பொங்கல் சாப்பிடவில்லை என்றால் எப்படி என்று நினைத்து கொண்டு இருந்த போது, நண்பர் திரு. மோகன் சாப்பிட வீட்டிற்கே வந்து சக்கரை பொங்கலை கொடுத்தது தான் ஆச்சிரியமே. காலை வேலை முடிந்த பொழுதில், எப்போதும் போல் மடிக்கணினியுடன் மதியம் வரை சென்றது. நேற்றே நண்பர் அண்ணாமலை தனது வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்தது நியாபகம் வர, ஒரே ஓட்டத்தில் அவர் வீட்டு வாசலில்.

 

அவரின் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் தனியாக கொண்டாடும் பொங்கல் என்பதால், அவரும் அவருடைய திருமதியும் கஷ்டப்பட்டு சமைத்து நான் அவர்களின் வீட்டை அடையும் முன் எல்லாம் ரெடியாக இருந்தது. அவர்கள் காரைக்குடியை சேர்ந்த மக்கள் என்பதால், அவர்கள் பொங்கலை கடவுளுக்கு படைக்கும் விதம், அவ்வாறே இருந்தது. இதை பார்க்கும் போது எனக்கு புது அனுபவம் தான். மதிய உணவு ஒன்பது வகையான காய்கறிகளுடன் கூடிய குழம்பு மற்றும் நான்கு வகையான பொரியல் என்று சாப்பாட்டுடன் மதிய உணவு சுபிச்சமாக முடிந்தது.

ஒரு வழியாக நண்பர் திரு. மோகன் மற்றும் அண்ணாமலை உடன் பொங்கல் இனிதாகவே அமெரிக்காவில் முடிந்தது.

No comments: