Band Baaja Baraat – ஹிந்தி
மீண்டும் இனிமையான ஒரு நகைச்சுவை கலந்த காதல் கதை. படிப்பை முடிப்பதற்குள் தொழில் ரீதியாக நட்புடன் பழக்கம் ஆரம்பித்து, நாயகனுக்கு தெரியாமல் நாயகி மனதில் காதல் கொண்டு, ஒரு சிறு பிரச்சனைக்காக பிரிந்து மீண்டும் எப்படி சேர்கிறார்கள் என்பதே கதை. அறிமுக நாயகன் ரன்வீர் சிங்க், குறை கூற முடியாதபடி இயல்பான நடிப்பு. நான் இப்படம் பார்த்தே இப்படத்தின் நாயகிக்காக தான். ஆம் வடஇந்தியாவில் பிடித்த நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா. பாடல்களில் இரண்டு பாடல் கூட கேட்கும் ரகம். முக்கியமாக சொல்லப்பட வேண்டியவர் ஒளிபதிவாளர். கல்யாண விஷேசம் மற்றும் பாடல் ஆகட்டும், அவரது திறமை நம் கண்ணால் காணலாம். கதாநாயகிகளை எப்படி தான் இப்படி அழகாக கட்டுகின்றனர் என்பதே தெரியவில்லை. அனுஷ்கா அனுஷ்கா தான். தமிழ் திரையுலக ஆடை அலங்கார தொழில் செய்பவர்கள் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்பதை இப்படத்தை பார்த்தாலே தெரியும்.
Brindaavanam – தெலுங்கு
தெலுகில் வெளியான 2010ல் ஹிட் படங்களில் இப்படம் இருந்ததால் படத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஹீரோ யாருன்னா சின்ன என்.டி.ஆர். இவரும் நிஜ மசாலா ஹீரோ. அத இந்த படத்தில அறிமுக சீன்ல தெரியும். முடிலப்பா.
உண்மை சொல்ல போனால் நான் பார்க்க ஆரம்பித்ததே இப்படத்தில் இருக்கும் இரண்டு நாயகிகள் தான் காரணம். சமந்த மற்றும் காஜல். படம் முழுவதும் மொக்கை தனமாக போனாலும், இந்த இரண்டு பேருக்காக தான் படம் முழுவதும் வண்ண கோலமாக தெரிகிறது. காஜல் இப்படத்தில் வீணடிக்கப் பட்டு இருப்பார். காஜல் என்ற பதுமையின் அழகை காட்டிய மகதீராவின் படத்தின் பத்து சதவீதம் கூட இப்படத்தில் இருக்காது என்பதே உண்மை.
கதை என்று பார்த்தால், சமந்த காதலி சொன்ன காரணத்தால் காஜல் வீட்டிற்கு போய் சமாளிக்க, வீட்டில் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுக்க படுகிறது. முடிவில் யாரை கை பிடித்தார் என்பதே ஒரு ஆச்சி மசாலாவுடன் பார்க்கலாம்.
பொழுது போகமால் இருக்கும் போது, அப்ப அப்ப இப்படத்தை காணலாம்.
Daylight Robbery – ஆங்கிலம்
எந்த வித அடையாளமும் இல்லாமல் ஒரு வங்கியை கொள்ளை அடித்து விட்டு, அதுவும் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியுமா. முடியாது என்றால் இந்த ஓடத்தை பாருங்கள்.
கதை என்னவென்று பார்த்தால், இங்கிலாந்தில் இருந்து ஜெர்மனுக்கு உலககோப்பையை காண வரும் கூட்டத்தில் ஒரு கும்பல் வந்து, உலககோப்பை முடிந்து ஊருக்கு கிளம்பும் நேரத்தில் “லண்டன் உலக வங்கி”யில் பல கோடிகளை சில மணி நேரத்தில் கொள்ளை அடித்து விட்டு அடையலாம் எதுவும் இல்லாமல் அவர்கள் ஊருக்கு கிளம்பி செல்கின்றனர். இப்படியும் கொள்ளை அடிக்க முடியுமா என்பதை, நாமும் சேர்ந்து யோசித்து பார்ப்போம்.
இப்படம் ஆக ஓகோ இல்லை என்றாலும், ஒரு முறை பார்க்கலாம்.
No comments:
Post a Comment