இந்தியாவில் இருக்கும் போது, அதுவும் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டை தவிர என்ற மற்ற மாநிலங்களுக்கு சென்றது இல்லை. ஆனால் வேலைபார்க்கும் போது தென் இந்தியாவில் இருக்கும் நான்கு மாநிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதை தவிர இந்தியாவில் வேறு எங்கும் செல்லவில்லை. ஆனால் டாலர் தேசத்தில் இருந்த ஒன்றரை வருடங்களில், எத்தனை மாநிலங்களுக்கு சென்று இருக்கிறோம், எந்த இடங்களை பார்த்து இருக்கிறோம் என்ற பட்டியலே தனியாக இருக்கும். சென்னை வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டதால், நான் சென்ற அனைத்து மாநிலங்களையும் நினைவு படுத்துவதற்குள் போதும் போதும் என்ற நிலை. இதோ நான் சென்று வந்த பட்டியல்.
1. அரிசோனா (Arizona)
2. அர்கன்சாஸ், (Arkansas)
3. இல்லினோயிஸ், (Illinois)
4. ப்ளோரிடா, (Florida)
5. ஜார்ஜியோ (Georgia)
6. இண்டியன, (Indiana)
7. கன்சாஸ், (Kansas)
8. மிஸ்ஸெளரி, (Missouri)
9. நெவட, (Nevada)
10. நியூ ஜெர்செரி (New Jersey)
11. நியூயார்க் (New York)
12. ஒக்ளஹோம, (Oklahoma)
13. டென்னிசி (Tennessee)
14. டெக்சாஸ் (Texas)
15. வாஷிங்டன் டி.சி. (Washington DC)
16. வெஸ்ட் விர்ஜினியா (West Virginia)
கீழே இருக்கும் மாநிலங்கள், வேறு மாநிலத்திற்கு செல்லும் போது கடந்து போன பாதை தவிர, அங்கு சென்று வேறு எதையும் பார்க்கவில்லை.
17. ஓஹயோ, (Ohio)
18. மேரிலன்ட், (Maryland)
19. பென்ன்ச்யல்வானியா, (Pennsylvania)
20. டெலவாரே (Delaware)
இங்கு இருக்கும் அனைத்து மாநிலங்களிலும், ஏதாவது சிறப்பு வாய்ந்த விஷயங்களை பார்த்து இருப்பேன். ஒரு வருடம், ஐந்து மாதங்கள் ஆகியும் நான் செல்ல நினைத்த இடம் நயாகரா நீர்விழ்ச்சி, அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், நயாகராவை பார்க்காமல் போகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை ஆட்டி படைத்து கொண்டே இருந்தது. அமெரிக்காவை விட்டு போய் விட்டால் மீண்டும் வருவோமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்ற நிலையில், இன்னும் கிளம்புவதற்கு மூன்று வாரமே என்று இருந்தாலும், பொறியியல் கல்லூரி நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் கட்டயபடுத்தியதலும், இரண்டு வாரங்கள் கழித்து நயாகரா செல்வதற்கு அனைத்து பணிகளும் முடிந்தது. நயாகரா சென்று வந்த பின், நான்கு நாட்களில் நான் அமெரிக்காவை விட்டு செல்கிறேன்.
நான் அந்த நீர்விழ்ச்சி செல்ல, எப்போதும் போல் பல இடங்களுக்கு சென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.
Bentonville, AR -> Little Rock, AR -> Memphsis, TN -> Cleveland, OH -> Buffalo, NY
Buffalo, NY -> Clevelan, OH -> Chicago, IL -> Little Rock, AR -> Bentonville, AR
நயாகராவை அடைந்த பின் தான், எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஆம் நான் அடைந்த இடம் இந்தியாவில் இருக்கும் எதாவது ஒரு சுற்றுலா பகுதியா என்ற கேள்வி, என்னை மட்டும் இல்லாமல் என்னுடன் வந்து இரு நண்பர்களுக்கும் தான். எங்கு பார்த்தாலும் இந்திய மக்கள், இந்திய மக்கள் நடத்தும் கடைகள், உணவு கடைகள். ஆச்சிரியம் தான். நாங்கள் சென்ற முதல் அன்று 65 சதவீதம் இந்திய மக்கள். மிச்சம் இருந்தவர்கள் சீனா, அமெரிக்க, கொரிய மற்றும் மற்ற உலக மக்கள்.
நீர்வீழ்ச்சியை அடையும் போது "உலகம் எவ்வளவு அழகானது என்பதை அறிய சிறந்த இடம் நயாகரா" என்று கூறுவது மிகையல்ல. அந்த அழகிய பகுதியின் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்னால் எடுக்கப்பட்ட சில இடங்கள்.
முதல் உச்சகட்டம்:
இதை பார்க்கும் போது, ஏற்பட்ட அனுபவங்கள் தவிர ஒரு கப்பலில் நயாகரா அருவின் பக்கத்தில் கொண்டு சென்றனர். இந்த பயணத்தில் முதலாவது உச்சகட்டம்
இரண்டாவது உச்சகட்டம்:
உலகமே பார்க்க துடிக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சியில், அருவின் ஒரு மூலையில் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அங்கே அருவியை கடந்து செல்ல முடியாது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் அங்கு தான் தெரிகிறது. அருவின் ஒரு புறத்தில் இருக்கும் மலையை குடைந்து, மலைக்கு அடியில் வழியை அமைத்து, மெதுவாக தண்ணீர் விழும் இடத்தில் கொண்டு இறக்கி விடுகின்றனர். அந்த பாதையில் நடந்து சென்று, தண்ணீர் விழும் பகுதிக்கு சென்ற உடன், உலகின் மிக அழகிய நீர்வீழ்ச்சியில் நம்மை குளித்துக் கொள்ள முடிகிறது.
நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் மட்டும் கட்டாய படுத்தாமல் இருந்து இருந்தால், நான் கண்டிப்பாக இந்த பயணத்தை உதறி, வாழ்நாளில் மிக பெரிய தவறை செய்து இருப்பேன். அமெரிக்கா சென்று வரும் மக்கள், நான் நயாகரா போனேன் என்பதை ஏன் பெருமையாக செல்கிறார்கள் என்பது அப்போது தான் புரிந்தது. நயாகரா சென்று வந்ததினால் நானும் பெருமை கொள்கிறேன்.
இத்துடன் மீண்டும் மீண்டும் தொடர் நிறைவுபெறுகிறது