Wednesday, December 08, 2010

திரைக்கலவைகள்


மைனா



வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் கண்டிப்பாக இப்படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை மறுக்க முடியாத அளவிற்கு உள்ள படம்.  இத்திரைப்படத்தின்  திரைக்கதையும், அதற்கு ஏற்றார் போல் திரைகதை நகரும் இடமும் (தேனி, மூணாறு மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள், காட்டு பகுதிகள்), வலுவான காதல் கதையும் வைத்து, திரைப்படத்தை நச் என்று கொடுத்து உள்ளார். இயக்குனரின் உழைப்பு இரண்டாம் பாதியில் நம்மை உட்காரவைத்துவிடும். இயக்குனர் பிரபுசாலமன் நிச்சியமாக திரையுலகில் ஒரு வலம் வருவர் என்பதில் சந்தேகம் இல்லை.

வ குவாட்டர் கட்டிங்



ஆசையே எல்லா துன்பத்திற்கும் அறிகுறி என்பதை மொக்கை நகைச்சுவையை கொண்டு காட்டிய படம்.  கதாநாயகன் வெளிநாடு செல்லும் முன், ஒரு கட்டிங் அடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஓர் இரவு முழுவதும் பயணிக்கும் கதை.  "தமிழ்படம்" போல தான் இருக்கும் என்று நினைத்து பார்த்த ஏமாந்த பலபேர்களில் நானும் ஒருவன். ஒரு நாள் இரவில் இவ்வளவு விஷயங்கள் நடக்குமா என்ற லாஜிக்கை விட்டு படம் பார்க்க வேண்டும். நமக்கு பொழுது போகாமல், என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.


உத்தமபுத்திரன்



தெலுகு திரைப்படமான "ரெடி"யின் தமிழ் ஆக்கம். இக்கதை தெலுகு மக்களின் ரசனைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட படம். இயக்குனர் கொஞ்சம் கூட யோசிக்காமல், இப்படத்தை அப்படியே கொடுத்து உள்ளார் என்பதை பார்த்தே தெரிந்துவிடும். தமிழ் மக்களின் ரசனை வேறு. அதற்கு ஏற்றாற்போல் சிலவற்றை மாற்றியமைத்து இருக்கலாம்.

படத்தில் சொல்லும்படியான விஷயம் விவேக்கின் காமெடி. ஆனால் அதுகூட தெலுகில் இருந்து சுட்டது. அதில் பிரம்மானந்தம் கலக்கி இருப்பார். முக்கியமாக அவருடைய முக பாவனைகள் அருமையாக இருக்கும். நம் தமிழ் திரைப்படத்தில், காமெடி பகுதி நன்றாக உள்ளத்தால், விவேக்கின் சுமாரான நடிப்பு கூட எடுத்து விடுகிறது.

என்னடா படம் நல்ல இல்லையா என்று கேட்பவர்களுக்கு,  குடும்பத்துடன் இப்படத்தை கதைக்காக மற்றும் காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

திரையுலகத்தினருக்கு ஒரு கேள்வி. தமிழில் வார்த்தை இல்லையா அல்லது உங்களால் யோசிக்க முடியவில்லையா. உத்தமபுத்திரன் என்ற நடிகர்திலகம் சிவாஜிகணேஷின் முக்கியபடத்தின் பெயரை, இப்படத்திற்கு சூட்டி, அவர் படத்தை அவமானபடுத்ததிர்கள்.

மந்திரப்புன்னகை



படம் ஆக ஓகோ என்று இல்லை என்றாலும், படத்தின் வசனத்திற்காகவே ஒருமுறையாவது இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும். ஒவ்வொரு வசனமும் நெத்தியடி போல் இருக்கும்.  இதோ சில வரிகள்

நான் தண்ணி அடிக்கறவன்னு உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு... சார் அவ தப்பா நினைப்பா?? நினைச்சா நினைச்சிட்டு போவட்டும் அவுங்க கொடுக்கும் நல்லவன் சர்ட்டிபிகேட்டை எங்க பரேம் பண்ணி மாட்டுவது..???

“உடம்ப கெடுக்கிற குவாட்டரை சத்தம் போட்டு கேட்குறோம். உடம்புக்கு பாதுகாப்பான காண்டமை ஏன் சத்தம் போட்டு வாங்க கூடாது?”

“காதல்னு ஒண்ணு இல்லவேயில்லை.. அரிக்குது சொரிஞ்சிக்கிறோம். அதுக்கு பேர் காதலா
?”

“என் புள்ள மக்கா போயிட்டான்னா.. பேசாம சினிமாவுல ஹீரோவாக்கிக்கிறேன்.”

“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”

“அவன் என்னை எங்க பார்த்து பேசினான்னு எனக்கு தெரியும்.. அதனால என் கற்பு ஒண்ணூம் கெட்டுப் போயிறாது”

“மொத்த புத்திசாலித்தனத்தையும் நாக்கில விஷம் மாதிரி வச்சிருக்கியே
?”

கண்டேன் காதலை, பாஸ் என்கின்ற பாஸ்கரன் போன்ற படங்களை போலவே இந்த படத்திலும் சந்தானம் விளையாடி இருப்பார். மனுஷன் அல்டிமேட்

வல்லக்கோட்டை



ஆக்சன் மற்றும் மசாலாக்கள் நிறைந்த வழக்கமான அர்ஜுன் படம்.

No comments: