அதீத வேலைப்பளுவும், இந்திய பயணமும் இந்த பதிவு உலகம் என்ற இடத்திற்கு என்னை வர இயலாமல் செய்து விட்டது. இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் அளவிட முடியாதவை. அது மன மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்தாலும் சரி அல்லது கெடுப்பதாக இருந்தாலும் சரி. அதே போல் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்த அதீத வேலை எனது கெட்ட நேரத்தின் காரணமாக நான் இந்தியா கிளம்பும் நாள் வரை என்னை தொடர்ந்தது. மிக மோசமாக விமானத்தில் இருக்கும் போது கூட தொலைபேசி அழைப்பு வந்தது தான் கூட வேலை பார்க்கும் நபரின் இன்னொரு முகத்தை அறிந்துக் கொள்ள முடிந்தது. இந்த மாதிரியான மக்கள் உடன் வேலை பார்க்கும் மானங்கெட்ட பொழப்பு தேவையா என்று நினைத்து முடிப்பதற்குள் இந்தியா
இந்தியா (சென்னை மற்றும் மதுரை): எட்டு மாதங்களுக்கு பிறகு எதுவுமே மாறாமல் அப்படியே இருந்தது சென்னை. முதல் முதலாக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம். நான் இந்தியா சென்று இருந்த நேரம் தீபாவளி. நான் சென்னையில் இருந்த ஆறு வருடத்தில் பஸ் மற்றும் ரயிலை தவிர காரிலோ அல்லது பைக்கிலோ கூட சென்றது கிடையாது. விமான பயணம் என்பதால் ஒரு மணி நேரத்தில் மதுரை பார்க்க முடிந்தது அதுவும் தீபாவளி நேரத்தில். மதுரையில் இறக்கியவுடன் முதலில் டீ. சொர்க்கத்திற்கு மீண்டும் வந்த எண்ணம். என்ன தான் வருத்தம் இருந்தாலும், நம்மக்களை கண்டவுடன் எங்கிருந்தோ உற்சாகம் வந்தது என்று தெரியவில்லை. மதுரையில் இருந்த அந்த பத்து நாட்கள், மீண்டும் கிடைக்காத கானகாலங்கள்.
மீண்டும் மதுரைக்கு பிறகு சென்னை. சென்னை இறங்கிய உடன் மீண்டும் அதே வேலை தூரத்த ஆரம்பித்தது. தொலைபேசி அழைப்பு என்னை எந்த அளவு டென்ஷன் பண்ண முடியுமோ அந்த அளவு டென்சனை உருவாக்கியது. அதை செய்தது என்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர்கள் தான். என் நிலைமை அவர்களுக்கும் புரியாமல் போனது தான் பெரிய சோகம். சென்னையில் இருந்த வேலை காரணமாக அவர்கள் சென்னதை செய்யமுடியவில்லை. இத்தனைக்கும் நடுவில் மதுரையில் இருந்த வந்த உறவினர்கள் சென்னையின் உள்ளூர் ரயிலை ஏற தெரியாமல், தம்பி கீழே விழ, அதே போல் அண்ணன் ஒருவர் ரயில்வே நிலையத்தில் பையை மறந்து வைத்துவிட்டு வர ஏகபட்ட குழப்பங்கள் மற்றும் தேவையில்ல பிரச்சனைகள்.
எனது இந்த பயணத்தில் போது இருந்த நல்ல நினைவுகள்
அக்டோபர் மாதம் 29ம் தேதி பெரியப்பா மகளான ஷைலஜாவிற்கு திரு. விக்னேஸ்வரன் உடன் திருமணம் நடைப்பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தது கொண்டு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் தான், நான் இந்தியாவிற்காக விமானத்தில் இருந்தேன்.
அமெரிக்காவில் இருந்தாலும், எப்போதும் போல் இந்த வருட தீபாவளியை மதுரையில் கொண்டமுடித்தது.
நவம்பர் மாதம் 8ம் தேதி என் தங்கையான யாமினிக்கு திரு. சரவணகுமார் உடன் திருமணம் நடைப்பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று வாரத்தில் மீண்டும் அமெரிக்கா பயணம். வந்த மூன்று நாட்களில் அதீத வேலை. முடியலே. யாரவது காப்பத்துங்களேன் என்று கத்தும் நிலைமை. அதோடு இல்லாமல், இந்தியாவில் இருந்து இப்போது வந்தேன் என்பதை நம்ம மெட்ராஸ் ஐ காட்டி கொட்டுவிட்டது. ஒரு வாரம் மேல் ஆகியும் போகாமல் உயிரை எடுக்கிறது. இந்த மெட்ராஸ் ஐ, எனக்கு முதல் முதலாக வருகிறது. அதனால் இதை பார்த்து பயந்து போய் இங்கு உள்ள மருத்துவ மனையில் காட்டினால் அவர்கள் கண்ணை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அதற்கு மேல் பயமுறுத்துகின்றனர். இவர்கள் இடம் மெட்ராஸ் ஐ காட்டி $100 மேல் செலவழித்தது தான் மிச்சம். இதே வலி சென்னையில் இருந்தால் ரூ.8 உடன் முடிந்து இருக்கும்.
கடந்த இரண்டு மாதத்திற்கு மேல், பதிவு உலக பக்கம் செல்லாததால் 600 மேற்ப்பட்ட பதிவுகள் மிச்சம் உள்ளன. அதே போல் எந்த திரைப்படத்தையும் பார்க்க முடியவில்லை. இப்போது படிக்க மற்றும் பார்க்க ஆரம்பித்து உள்ளேன். பதிவுகளை மீண்டும் என்னால் தொடர்ந்து போட முடியும் என்ற நம்பிக்கையில்
வைகையின் சாரல்

No comments:
Post a Comment