என்னுடைய பழைய அலுவலக நண்பர் திரு.ஷேக் சுலைமானின் திருமணம் இன்று காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி மாவட்டம்) நடைப்பெற்றதை தெரிவித்துக் கொண்டு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
Saturday, December 25, 2010
திருமண வாழ்த்துக்கள் - ஷேக் சுலைமான்
Wednesday, December 22, 2010
தமிழ்நாட்டை முந்திய கேரளா
தமிழ்நாட்டை விட அதிகமாக படித்த மக்கள் கொண்ட கேரளா தேசமா இப்படி ஒரு காரியத்தை பண்ணியது. நான் தமிழ் நாட்டு வாலிப மக்கள் தான் வீண் என்று, நினைத்து இருந்த எனக்கு, அதை விட வீணான வாலிப மக்கள் இங்கு இருக்கிறோம் என்று நீருபித்து விட்டனர்.
அப்படி அவர்கள் செய்த காரியம் என்ன. இதோ இங்கே கிளிக் செய்யவும்.
டாக்டர் இளைய தளபதிக்கு ஒரு சிலை. என்ன கொடும சார் இது… படித்த உடனே தமிழ் நாடு வாழ்க என்று தோன்றியது.
Sunday, December 12, 2010
திருமண வாழ்த்துக்கள் - கார்த்திக் அருண்
எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பர் திரு. கார்த்திக் அருண் அவர்களின் திருமணன் இன்று மதுரையில் நடைப்பெறுவதை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Saturday, December 11, 2010
திருமண வாழ்த்துக்கள் - சனல் தேவ்
ஆர். ஆர். எம் இல்ல நண்பர் திரு.சனல் தேவ்வின் திருமணம் இன்று திருவனத்தபுரத்தில் நடைப்பெற்றதை தெரிவித்துக் கொண்டு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
உணர்வுமயமான பயணம் - நந்தலாலா
நந்தலாலா திரைப்படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் படித்துவிட்டதால், இப்படத்தை பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்துடன் இருந்தேன். தீடிர் என்று பொழுது போகாமல் பார்க்க ஆரம்பித்தேன். சுமார் ஒரு மணி நேரத்தில் "என்னடா இந்த படத்தை போயி இப்படி புகழ என்ன இருக்கு" என்ற எண்ணம். ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியில் படத்தின் உள்ளே செல்ல ஆரம்பித்தேன். திரைப்படம் முடிந்த பிறகும், மனதில் வசனங்கள் மற்றும் பயணத்தின் போது சந்தித்த மனிதர்களின் நினைவுகள். கமல் ஒரு படத்தில், பழமொழியை அனுபவிக்க வேண்டும் ஆராய கூடாது என்று கூறுவார். ஆம் அதே போல் இப்படமும். படத்தை பார்த்தால் மட்டுமே அதனோடு பயணிக்க முடியும்.
ஒரு சிறுவனும், ஒரு ஆளும் அவர்களின் தாயை தேடி போகிற கதை. அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் மற்றும் தாயை பார்த்தார்களா என்பதே மீதி கதை. நான் பதிவுலகில் படித்த விமர்சங்கள் பல திரைப்படத்தின் கதையை நோக்கி பயணம் செய்து இருந்தனர். ஆனால் நான் இப்படத்தில் ஈர்க்க பட்டது "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற பார்வையில். ஆம் பயணம் எனக்கு பிடித்த விஷயம். படத்தில் இருவரும் சேலம் அருகில் உள்ள இடங்களுக்கு சென்னையில் இருந்து பயணிக்கின்றனர். நாமே ஊருக்கு போகையில் நம்முடன் பயணிக்கும் நபர்களின் வேறுப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரம் என்று பார்க்கிறோம். அதை பார்க்கும் போது தான், நாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வரும் அதே போல் நாம் பரவாஇல்லை என்ற உணர்வும் வரும். மனிதர்களின் மற்றும் மக்களின் குணாதியசங்கள் பயணத்தின் போது தான் அறிந்துக் கொள்ள முடியும்.
ஒரு சிறுவனும், ஒரு ஆளும் அவர்களின் தாயை தேடி போகிற கதை. அவர்கள் எப்படி சேர்ந்தார்கள் மற்றும் தாயை பார்த்தார்களா என்பதே மீதி கதை. நான் பதிவுலகில் படித்த விமர்சங்கள் பல திரைப்படத்தின் கதையை நோக்கி பயணம் செய்து இருந்தனர். ஆனால் நான் இப்படத்தில் ஈர்க்க பட்டது "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற பார்வையில். ஆம் பயணம் எனக்கு பிடித்த விஷயம். படத்தில் இருவரும் சேலம் அருகில் உள்ள இடங்களுக்கு சென்னையில் இருந்து பயணிக்கின்றனர். நாமே ஊருக்கு போகையில் நம்முடன் பயணிக்கும் நபர்களின் வேறுப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் கலாச்சாரம் என்று பார்க்கிறோம். அதை பார்க்கும் போது தான், நாம் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு வரும் அதே போல் நாம் பரவாஇல்லை என்ற உணர்வும் வரும். மனிதர்களின் மற்றும் மக்களின் குணாதியசங்கள் பயணத்தின் போது தான் அறிந்துக் கொள்ள முடியும்.
இதே போல் தான் படத்திலும் வேறுப்பட்ட மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் எப்படி பட்டவர்கள் மற்றும் நம் நாயகர்களுக்கு உதவி செய்தனரா என்பதே எனது பார்வை. வழியில் சந்திக்கும் நபர்கள் திருடன், ஆட்டோக்காரன், போலீஸ், பள்ளி மாணவி, மாட்டு வண்டிக்காரர், நொண்டி மனிதன், புது மண ஜோடி, குடித்து விட்டி சுற்றும் வாலிபர்கள், இளநீர் விற்பவர், லாரி ஓட்டுனர், தொட்டியில் குளிக்கும் கிழவர், ஐஸ் விற்கும் மனிதர், இராணுவ நபர்கள், விபச்சாரி (ஸ்நிக்த), அவளை கடத்தும் மனிதர்கள்,
இதில் யாருக்கும் யாரும் குறை இல்ல பாத்திரங்கள். ஆனால் என் மனதில் நிற்கும் சில பாத்திரங்கள் போலீஸ், நொண்டி மனிதர், இளநீர் விற்பவர், மற்றும் ஸ்நிக்த. போலீஸ் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னுடன் முழித்து முழித்து பார்ப்பதும், நொண்டி மனிதனின் கை தடி வெட்டப்பட்ட உடன் 'என் கால் போச்சே' என்று அழுவதும், இளநீர் விற்பவர் விழுத்தவுடன் மூவரும் அதை குடிப்பதும், ஸ்நிக்தவின் வசனங்களும் மனதில் நிற்பவை.
"உடம்பெல்லாம் ஒரே நாத்தம். எங்க அம்மா பொணம் கூட இப்படி நாறல. முதல்ல உடம்பு தான் நாருச்சு இப்ப மனசு கூட நாறுது."
"போடா மெண்டல். இப்ப உனக்கு எப்படி இருக்கு. அதே போல தானே எனக்கும் இருக்கும்"
அதே போல் மிஷ்கினின் காட்சிகள் இதிலும் உண்டு. வெறும் கால்களை காட்டியே உணர்வை ஏற்படுத்துவது. முக்கியமாக அம்மாவை தூக்கிக் கொண்டு செல்கையில் கால்களுடன் சங்கிலியும் செல்வதையும் காட்டும் போது, அந்த காட்சி நூறு வசனங்களுக்கு சமம் என்பதை உணர முடியும். இதே போல் பல இப்படத்தில் பல காட்சிகள்.
வெறும் காட்சிகளை கொண்டு ரசிகர்களை ஈர்க்க முடியாது. அதற்கு இசை என்ற ஒரு முக்கியமான விஷயம் தேவைபடுகிறது. வசனம் இல்லா இடத்திலும், அக்காட்சிக்குரிய உணர்வை இசையால் கொடுக்க முடியும் என்பதை இசைஞானி காட்டி இருப்பார். இளையராஜா ஒரு இசைஞானி என்பதை இப்படத்தை பார்த்தே புரியும். அவரை தவிர இப்படத்திற்கு வேறு நபர் இசை அமைக்க முடியுமா என்பது கேள்விகுறி தான்.
நந்தலாலா - உணர்வுமயமான பயணத்தின் தொடக்கம்
முதலில் நான் சொல்லியதை போல, படத்தை பார்த்து அனுபவத்தை பெற வேண்டும். அமெரிக்காவில் குப்ப படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா இந்த உணர்வு சம்பந்தப்பட்ட திரைப்படத்தை போடா மாட்டங்க. என்ன கொடும சார் இது
Wednesday, December 08, 2010
திரைக்கலவைகள்
மைனா
வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் கண்டிப்பாக இப்படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்பதை மறுக்க முடியாத அளவிற்கு உள்ள படம். இத்திரைப்படத்தின் திரைக்கதையும், அதற்கு ஏற்றார் போல் திரைகதை நகரும் இடமும் (தேனி, மூணாறு மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்கள், காட்டு பகுதிகள்), வலுவான காதல் கதையும் வைத்து, திரைப்படத்தை நச் என்று கொடுத்து உள்ளார். இயக்குனரின் உழைப்பு இரண்டாம் பாதியில் நம்மை உட்காரவைத்துவிடும். இயக்குனர் பிரபுசாலமன் நிச்சியமாக திரையுலகில் ஒரு வலம் வருவர் என்பதில் சந்தேகம் இல்லை.
வ குவாட்டர் கட்டிங்
ஆசையே எல்லா துன்பத்திற்கும் அறிகுறி என்பதை மொக்கை நகைச்சுவையை கொண்டு காட்டிய படம். கதாநாயகன் வெளிநாடு செல்லும் முன், ஒரு கட்டிங் அடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஓர் இரவு முழுவதும் பயணிக்கும் கதை. "தமிழ்படம்" போல தான் இருக்கும் என்று நினைத்து பார்த்த ஏமாந்த பலபேர்களில் நானும் ஒருவன். ஒரு நாள் இரவில் இவ்வளவு விஷயங்கள் நடக்குமா என்ற லாஜிக்கை விட்டு படம் பார்க்க வேண்டும். நமக்கு பொழுது போகாமல், என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
உத்தமபுத்திரன்
தெலுகு திரைப்படமான "ரெடி"யின் தமிழ் ஆக்கம். இக்கதை தெலுகு மக்களின் ரசனைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட படம். இயக்குனர் கொஞ்சம் கூட யோசிக்காமல், இப்படத்தை அப்படியே கொடுத்து உள்ளார் என்பதை பார்த்தே தெரிந்துவிடும். தமிழ் மக்களின் ரசனை வேறு. அதற்கு ஏற்றாற்போல் சிலவற்றை மாற்றியமைத்து இருக்கலாம்.
படத்தில் சொல்லும்படியான விஷயம் விவேக்கின் காமெடி. ஆனால் அதுகூட தெலுகில் இருந்து சுட்டது. அதில் பிரம்மானந்தம் கலக்கி இருப்பார். முக்கியமாக அவருடைய முக பாவனைகள் அருமையாக இருக்கும். நம் தமிழ் திரைப்படத்தில், காமெடி பகுதி நன்றாக உள்ளத்தால், விவேக்கின் சுமாரான நடிப்பு கூட எடுத்து விடுகிறது.
என்னடா படம் நல்ல இல்லையா என்று கேட்பவர்களுக்கு, குடும்பத்துடன் இப்படத்தை கதைக்காக மற்றும் காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.
திரையுலகத்தினருக்கு ஒரு கேள்வி. தமிழில் வார்த்தை இல்லையா அல்லது உங்களால் யோசிக்க முடியவில்லையா. உத்தமபுத்திரன் என்ற நடிகர்திலகம் சிவாஜிகணேஷின் முக்கியபடத்தின் பெயரை, இப்படத்திற்கு சூட்டி, அவர் படத்தை அவமானபடுத்ததிர்கள்.
மந்திரப்புன்னகை
படம் ஆக ஓகோ என்று இல்லை என்றாலும், படத்தின் வசனத்திற்காகவே ஒருமுறையாவது இப்படத்தை பார்த்தே ஆக வேண்டும். ஒவ்வொரு வசனமும் நெத்தியடி போல் இருக்கும். இதோ சில வரிகள்
நான் தண்ணி அடிக்கறவன்னு உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு... சார் அவ தப்பா நினைப்பா?? நினைச்சா நினைச்சிட்டு போவட்டும் அவுங்க கொடுக்கும் நல்லவன் சர்ட்டிபிகேட்டை எங்க பரேம் பண்ணி மாட்டுவது..???
“உடம்ப கெடுக்கிற குவாட்டரை சத்தம் போட்டு கேட்குறோம். உடம்புக்கு பாதுகாப்பான காண்டமை ஏன் சத்தம் போட்டு வாங்க கூடாது?”
“காதல்னு ஒண்ணு இல்லவேயில்லை.. அரிக்குது சொரிஞ்சிக்கிறோம். அதுக்கு பேர் காதலா?”
“என் புள்ள மக்கா போயிட்டான்னா.. பேசாம சினிமாவுல ஹீரோவாக்கிக்கிறேன்.”
“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”
“பார்த்தசாரதி.. இனிமே கதிர் என்னை கூப்பிட்டான்னா அவனுக்கு என்னை அனுப்பாதே.. ஒரு நிமிஷம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி நினைச்சிட்டேன். அது எனக்கும் நல்லதில்லை.. அவனுக்கும் நல்லதில்லை”
“அவன் என்னை எங்க பார்த்து பேசினான்னு எனக்கு தெரியும்.. அதனால என் கற்பு ஒண்ணூம் கெட்டுப் போயிறாது”
“மொத்த புத்திசாலித்தனத்தையும் நாக்கில விஷம் மாதிரி வச்சிருக்கியே?”
கண்டேன் காதலை, பாஸ் என்கின்ற பாஸ்கரன் போன்ற படங்களை போலவே இந்த படத்திலும் சந்தானம் விளையாடி இருப்பார். மனுஷன் அல்டிமேட்
வல்லக்கோட்டை
ஆக்சன் மற்றும் மசாலாக்கள் நிறைந்த வழக்கமான அர்ஜுன் படம்.
Subscribe to:
Posts (Atom)