2008ம் வெளிவந்த "Death Race" படத்தின் கதை: சிறைச்சாலையில் கைதிகளிடையே நடக்கும் கார் ரேஸ்ஷை, உலகுக்கு ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் சிறைஅதிகாரி. மக்கள் இதில் அதிக பணம் கட்டி ஆட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கைதிகளை கொல்வது. ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் போது விபத்து போல தெரியும். கடந்த வருடத்தில் முதல் நிலை வகிக்கும் நபரை சிறை அதிகாரி கொன்று விட, அந்த இடத்திற்கு நாயகனை கொண்டு வருகிறார். அதுவும் நாயகனுக்கே தெரியாமல், அவனது மனைவியை கொன்று, அந்த பலியை அவன் மேல் செலுத்தி, சிறை சாலைக்கு கொண்டு வர படுகிறான். கார் ரேஸ் துவங்க, சிறை அதிகாரிக்கு பணம் கொட்டுகிறது. இந்த ரேசில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர, கண்டிப்பாக அடுத்தவனை கொல்ல வேண்டும். ஜெய்த்து வந்தால் அவனுக்கு பரிசு மற்றம் விடுதலை. முடிவில் நாயகனுக்கு உண்மை தெரிந்து விளையாட்டில் எப்படி வென்றார் மற்றும் சிறை அதிகாரியை எப்படி பழி வாங்கினர் என்பதே மீதி கதை.
அதே வடிவில் இன்னொரு உயிர் விளையாட்டு படம்: எழு வருடங்களுக்கு ஒரு முறை, ஊரில் வசிக்கும் பணக்காரர்கள் இரத்த விளையாட்டை ஆடுகின்றார். பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு, மணி நேரத்தில் அனைவரையும் கொன்று முதலில் வர வேண்டும். வென்று வந்தவர்களுக்கு பண மழை பரிசு. கடந்த வருடத்தில் வென்ற ஒருவனை இந்த வருடத்திலும் விளையாட வைக்க, அவனது மனைவியை அவர்களே கொன்று மீண்டும் இந்த போட்டிக்கு அவனை வர வைக்கின்றனர். அவன் மேல் பணத்தை கட்ட பல பேர் முன் வருவார்கள் என்ற காரணம். இதிலும் விளையாட்டு ஆரம்பிக்கிறது. உண்மை விஷயம் அவனுக்கு தெரிய வர, அதே மீதி கதை.
கதைப்படி பார்த்தல் அதே தான். ஆனால் இங்கு ஒரு பாதரியார் தெரியாமல் இந்த விளையாட்டில் மாட்டி கொள்கிறார். அதே போல் நாயகியாக வரும் பெண், அப்பாவிகளை கொல்லாமல் விடுவது மற்றும் இன்னொரு நபர் விளையாட்டில் இருந்து தப்பித்து, ஆனால் மற்றவர்களை கொல்வது என்று பல திருப்பங்களை இயக்குனர் வைத்து உள்ளார். உயிர் விளையாட்டு ஆரம்பிக்கும் போது, நாம் சீட்டின் முனியில் வருவது உண்மை தான். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
No comments:
Post a Comment