முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது தான் படத்தின் ஒருவரி கதை. அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே முடிவு. இதே மாதிரியான கதைகள் பல இருந்தாலும், இதை கொடுத்த விதம் தான் நம்மை அமரசெய்கிறது. முதலாம் ஆண்டு மாணவனாக கான காணும் காலங்கள் பாலாஜி. சின்ன பையன் என்றாலும் அதே மாதிரி கதை என்பதால் அமைந்து விட்டது. பரவில்லை என்றே கூறலாம். ஆனால் என்ன நடிப்பில் இன்னும் தேற வேண்டும். இவனுடன் நண்பனாக வரும் சபேஷ் கார்த்திக் தான் கலக்கல். அதுவும் கஜினி இசையுடன் வரும் அந்த இடம் கலக்கல் தான். காமெடி என்று தனியாக இல்லாமல், கதையின் வசனத்திலேயே வைத்து, அதையும் படம் முழுவதும் செய்து உள்ளனர்.
நாயகியாக மேக்னா. கதைக்கு ஏற்ற நாயகி என்று கூறுவதை விட, கதைக்கு ஏற்ற முதிர்ந்த முகமும் மற்றும் தேறிய உடல் அமைப்பும் உள்ள பெண் தான். என்ன தான் நாயகன் ஜூனியர் பையன் என்றாலும், பழக்கமே இல்லாத ஒரு பெண் தீடிர் என்று நெருக்கமாக பழகினால், காதல் வர தான் செய்யும். நன்றாக பழகி விட்டு, அக்கா கூப்பிட சொன்னால், கஷ்டம் தான்.
படத்தின் இன்னொரு முக்கிய நபர் என்று கூறினால், அது இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். பாடல்கள் கேட்கும் ரகம் தான் என்றாலும், பின்னணி இசை கூட நன்றாக அமைத்து இருக்கிறார்.
மொத்தத்தில் இப்படம் டைம் பாஸ் படம். ஒரு முறை சின்ன திரையில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகத்திற்கு: அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த 'வில்லன்' திரைப்படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் கையில் இருந்ததால் பார்க்க போனோம். அப்போது ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த நபர்கள், கிட்டதட்ட ஐந்து லிட்டர் பாலை, திரைஅரங்கத்தின் முன்னால் இருந்த அஜித்தின் அட்டையில் ஊற்றினார். இதை விட, படையப்பா வெளிவந்த பொழுதில், இரண்டாம் நாள் காலையில் திரை அரங்கில் முன்னால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு படத்தை காண வரிசை. இடையில் நிற்கும் ஒரு நபருக்கு கையில் அடிபட்டு ரத்தம் வருகிறது. ஆனால் ரத்தத்தை துடைத்துக் கொண்டே, படத்தினை காண வரிசையில் நின்றான்.
இப்படி பட்ட ரசிகர் மக்கள் கொண்ட தமிழ் நாட்டில், இந்த மாதிரியான வயதுக்கு மீறிய காதல் என்று வந்தால், தமிழ் நாடு சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த படத்தை, நம்ம தலைவர்களின் படத்துடன் ஒப்பிடவில்லை. ஆனால் நம் ரசிகர்கள் திரை படத்தை அவர்களின் நண்பராக, உயிராக நினைப்பார்கள். திரைப்படத்தில் வரும் நடிப்பை/கதையை/கருத்தை அப்படியே சில பேர் எடுத்து கொள்ளுபவர்கள். சிலநாட்களுக்கு முன் வெளியான இனிது இனிது திரைப்படத்திலும் இதே மாதிரியான ஒரு காதல் உண்டு. இந்த மாதிரியான படத்தை பார்த்தல், கண்டிப்பாக கல்லூரி மாணவர்கள் மட்டும் இல்லாமல், பொதுவாகவே இளவயதினர் தவறாக இதை எடுத்து கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டு. இயக்குனர்கள் மற்றும் தாயரிப்பளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல திரைப்படத்தை கொடுத்தல் சரி.
No comments:
Post a Comment