Tuesday, September 07, 2010

இனிது இனிது - திரைவிமர்சனம்


சாதாரண கல்லூரி வாழ்க்கை திரைப்படம் தானே என்று நினைத்து மாலைபொழுதில் பார்த்துவிட்டு சொந்த வேலைகளை பார்க்க சென்று விட்டேன். ஆனால் தூங்கும் போது மனதில் அந்த படத்தின் காட்சிகளும், நண்பர்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சந்தோஷங்கள் மற்றும் சண்டைகள் வரும் போது, அதே விதத்தில் உள்ள என்னுடைய நிஜ கல்லூரி வாழ்க்கை நினைவுகள் வந்து சிறு சிரிப்பை உதட்டில் கொண்டு வந்தது தான் இப்படத்தின் வெற்றி. 

பதிவுலகில் தெலுகு படம் இதை விட நன்றாக இருக்கும் என்று பல பேர் கூறி இருந்தனர். ஆம் அது உண்மை தான்.  தெலுகுகில் இப்படம் பாதி படம் தான் பார்த்து இருந்தேன். அந்த பாதி படமும் தமிழில் பார்க்கும் போது தெலுகு படத்தின் காட்சிகள் மனதில் வருவதை தடுக்க முடியவில்லை. 


இதில் உள்ள எந்த கதாப்பாத்திரமும், மற்ற கதாப்பாத்திரத்திற்கு குறை இல்லை. சித்தார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு, டைசன், ஸ்ர்ப்ஷ் என்று பல பேர் இருந்தாலும், ஒவ்வொருவரும் இப்படத்தின் நாடி துடிப்பு. பல பேர் அறிமுகங்கள் என்றாலும், அதை திரையில் கண்டுபிடிப்பது கஷ்டம் தான். 


இயக்குனரை பல இடங்களில் பாராட்டியே ஆகவேண்டும்.நடிகர்களை தேர்வு செய்த விதம், காட்சி அமைப்புகள்மற்றும் நடிகர்களின் உடை. எங்குமே ஒரு வறண்ட மற்றும் அழுக்கு காட்சியை காட்டாமல்எல்லா இடத்திலும் வண்ணங்கள் . நகைச்சுவை என்று தனியாக இல்லாமல், வசனங்களிடையே வைத்து தான் பலம். 

மொத்தத்தில் இனிமையான பயணம்

No comments: