Saturday, October 31, 2009

திருமண வாழ்த்துகள் - முரளி கிருஷ்ணா கொன்ரகுண்ட

எனது பழைய அலுவலக நண்பர் திரு. முரளி கிருஷ்ணா கொன்ரகுண்ட அவர்களுக்கு இன்று 31ம் தேதி ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் தெனாலி என்றும் இடத்தில்  திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

Sunday, October 25, 2009

திருமண வாழ்த்துகள் - சங்கரநாராயணன்

எனது உற்ற உறவினர் திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கு இன்று 25ம் தேதி மதுரையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

திருமண வாழ்த்துகள் - ஜெய்சன்

எனது பழைய அலுவலக உற்ற நண்பர் திரு. ஜெய்சன் அவர்களுக்கு இன்று 25ம் தேதி திருச்சியில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

முன்பே ஒரு பதிவில் கூறி இருந்ததை போல, இன்று மட்டும் 3 திருமண வைபவங்கள் என்பதால் என்னால் சென்று சிறப்பிக்க வைக்க முடியவில்லை என்று மிகுந்த மன வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

Saturday, October 24, 2009

திருமண வாழ்த்துகள் - ரமேஷ் பாபு

எனது பொறியியல் கல்லூரி நண்பர் திரு. ரமேஷ் பாபு அவர்களுக்கு இன்று 25ம் தேதி இந்தியாவின் குட்டி ஜப்பான் ஆனா பரமகுடியில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்...

முன்பே ஒரு பதிவில் கூறி இருந்ததை போல, இன்று மட்டும் 3 திருமண வைபவங்கள் என்பதால் என்னால் சென்று சிறப்பிக்க வைக்க முடியவில்லை என்று மிகுந்த மன வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

Sunday, October 18, 2009

பொற்றாமரைக்குளம் - மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 165அடி நீளம், 120 அடி அகலத்துடன் சதுபட்ட வடிவிலான போர்ராமரைக்குலமும், தென்மேற்கு மீலையில் கம்பீரமான தெற்கு கோபுரமும் சேர்ந்து காட்சித் தருவது மதுரையின் அடையாளம்.

இக்குளத்தை சுற்றி நான்கு கரைகளிலும் மடைபாதை மண்டபங்கள் உண்டு. வடகரை மண்டபம் அம்மன் சன்னதிக்கு நேராக அமைந்துள்ளது. இம்மண்டப தூண்களில் சங்க புலவர்கள் சிற்பம் உள்ளது. கடைசங்கபுலவர்கள் 49 பேரில் 24 புலவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நடுவில் பொற்றாமரைக்குளக்கரையில் உள்ள தூண்கள் இரண்டில், ஆதியில் இக்கோயிலை கட்டிய குலசேகரபாண்டிய மன்னர் உருவமும், கடம்ப வனத்தில் சிவலிங்கத்தை பார்த்த வணிகர் தனஞ்ஜெயன் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளன. இக்குளத்தை சுற்றி திருக்குறள்களும், 64 திருவிளையாடல் ஓவியங்களும் இடம் பெற்று உள்ளன.

Saturday, October 17, 2009

பேராண்மை - திரைவிமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு த்ரில் ஆன மற்றும் நல்ல படத்தை பார்த்த மனதிருப்தி. கம்யூனிச கருத்தை நெற்றியில் அடித்தார் போல் கூறி இயக்குனர் திரு. ஜனநாதன் நல்ல சிந்தனைவாதி என்று மீண்டும் நீருபித்து இருக்கிறார்.

வெள்ளிமலையில் இந்திய அரசாங்கத்தால் விண்வெளிக்கு செலுத்த தயாராக இருக்கும் ஏவுகணையை வைத்து கதை ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் கொல்லிமலைக்கு கல்லூரி பெண்கள் என்.சி.சி. பயிற்சிக்காக வருகின்றனர்.  அவர்களுக்கு பயிற்சியாளராக அதே மலையில் தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்து படித்து ஜெயம் ரவி வன காவலராக பணிபுரிகிறார். அவருக்கு உயர் அதிகாரியாக தாழ்த்தபட்ட இனத்தை கேவலமாக நடத்தும் கதாபத்திரத்தில் பொன்வண்ணன். போலீஸ் அதிகாரிகள் எப்படி பட்டவர்கள் என்று தோலுரித்து காட்டுவது போல் அவரது பாத்திரம். ஐந்து பெண்களுடன் பயிற்சிக்காக காட்டிற்கு செல்லும் போது சர்வதேச தீவிரவாதிகள் ஏவுகணையை தகர்க்க வருவதை அறிந்து அவர்களை ஜெயம் ரவி அப்பெண்கள் உதவியுடன் எப்படி தகர்க்கிறார் என்பது கதை.


கதைப்படி இப்படத்தில் மூன்று கதாநாயகர்கள். மூவருக்கும் இணையான வேலை.
ஜெயம் ரவி: இவருக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு/உழைப்பு தெரிகிறது. மலை ஏறுவது, பெண்களுக்கு பாடம் எடுப்பது, கோவணத்துடன் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து இருப்பது என்று வாழ்ந்து இருக்கிறார்.
இயக்குனர் ஜனநாதன்: ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் தன்னுடைய கம்யூனிச கருத்துகளை பொறித்து தள்ளுகிறார். உதாரணமாக இரண்டாம் பாதியில் "சொந்த நாட்டு மக்களை விரட்டி விட்டு, வெள்ளை காரங்களை விட போரிங்களா" என்று கொதிக்கிறார். இரண்டாம் பாதியில் கதை எடுத்து செல்லும் வேகம், த்ரில் உடன் கொடுத்த விதம், கொடுரமான கொலைகளை காட்டிய விதம், மலைகளை பற்றியும் வனவிலங்குகளை பற்றியும் நன்கு படித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த விதம் நல்ல இயக்குனர் என்று காட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார்: கொல்லிமலை, ஒக்கனேகல் என்று பலவித மலைகளின் அழகை மேற்புரமாகவும், அடர்ந்த காடுகளையும் ஒவ்வொரு காட்சிகளாக வியக்கவைக்கிறார். தென் இந்தியாவில் கூட இவ்வளவு அழகான இடங்களை இருப்பதே தெரியாமல் இருப்பது பிரம்மிப்பான விஷயம் தான்.

ஐந்து அல்லது ஆறு கல்லூரி பெண்கள் சேர்ந்தால் அவர்களின் நடைமுறைகளை அபட்டமாக காட்டி இருக்கிறார். அவர்கள் பேசும் இரட்டை அர்த்த வசனமும் கேளியட்டங்கள் இளமை துள்ளல். அவர்களின் ஒருவருக்கு ஒருதலை காதல், மற்றும் அவர்களின் நாட்டுப் பற்று என்று சின்ன சின்ன உணர்வுகள் படத்தில் நிறைய உள்ளன.


இப்படத்துள் குறைகளே இல்லையா? ஏன் இல்லை... கல்லூரி பெண்கள் கனரக தூப்பக்கிகளை இயக்குவது, காட்டில் பயம் இல்லாமல் தனியாக ஓடுவது, தமிழ் கடவுளின் பெயரை சக்திகளாக காட்டுவது என்று சில விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் படத்தின் வேகம் மற்றும் த்ரிலின் காரணமாக தெரியாமல் போய் விடுகிறது.

பேராண்மை: திரைஅரங்கில் மட்டுமே காணப்பட கூடிய த்ரில் ஆன நல்ல படம்.

அரவான் - மகாபாரதம்

மகாபாரத்தில் பல கதாபாத்திரங்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன. அதில் முக்கிய கதாபாத்திரம் அரவான். அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்த போது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியை கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனால் பிறந்த மகனானதால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்த அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைங்கன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்று பேச்சு வந்த போது, "இதோ நான் இருக்கிறேன். என்னை களபலியாக கொடுங்கள்" என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாத படியால் தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று. இப்படிப் பட்ட மகாவீரனை நினைந்து பாண்டவர்கள் சொர்கத்தில் இடம் வாங்கி கொடுத்தனர்.

மம்மி - தயாரிக்கப்பட்ட விதம்

எத்தனை நாட்கள் தான் இட்லி, தோசை மற்றும் கோழி குழம்பு (ஐயோ இது புரட்டாசி மாதம்.. அசைவத்தை பற்றி நினைக்க கூடாது.... நாராயண.. நாராயண...) என்று தயாரிக்கும் விதங்களை பார்ப்பது. வித்தியாசமாக நினைத்த போது எண்ணத்தில் உதித்த ஒரு பொருள் தான் இந்த மம்மி.

இறந்தவர் உடலில், வயிற்றில் முதலில் துளைபோட்டு நுரையீரல், குடல் பகுதிகளை வெளியே எடுத்து ஜாடிகளில் வைத்து விட்டு பட்டிலைகளை வயிற்றுக்குள் நிரப்பி உடலைத் தைப்பார்கள். இதயம் மட்டுமே உடலுக்குள் விட்டு வைக்கப்படும். அடுத்ததாக மூக்கு விழியாக மூளை ஜாக்கிரதையாக உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயம் கண்கள் அகற்றப்பட்டு செயற்கைக் கண்கள் பொருத்தப்படும். அடுத்தபடி ஒருவை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு உடல் அமிழ்த்தி வைக்கப்படும். உடலில் இல்ல திரவங்கள் பூராவும் இதனால் வெளியேறிவிடும். பிறகு உடலை எடுத்து அதன் மீது மெழுகு போன்ற ஒரு பசியைப் பூசுவார்கள். கசைசியாக அந்தஷ்துக்கேற்ப தங்க, வைர, வைடூரிய அலங்காரங்கள் செய்யப் படும்.

கொசுறு: கி.மு.கி.பி. புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

சோழ வாரிசுகள்

சேர, சோழ மற்றும்  பாண்டிய  மன்னர்கள் தான் தென்இந்திய நாட்டை ஆண்டார்கள். ஆனால் சேர மற்றும் பாண்டிய மன்னர்களை பார்க்கும் போது வளமுடன், அதிக படையுடன் செல்வ செழிப்பு மற்றும் அதிகாரத்துடன் இருந்தது சோழ மன்னர்கள் தான் என்று கல்கியின் பொன்னியின் செல்வன் கூறுகிறது. பரகேசரி விஐயாலயன் தான் முதல் மாமன்னர். அவருக்கு பிறகு ராஜகேசரி ஆதித்த சோழன். அதற்கு பின் பரகேசரி பராந்தகன் சக்கரவர்த்தி. இவருக்கு மூன்று புதல்வர்கள் (அவர்களின் புதல்வர்கள் அவர்களுக்கு கீழே).  ராஜகேசரி கண்டராதித்த தேவர் ஆட்சி செய்தாலும், ஆட்சியை நடத்துபவர் ராஜகேசரி அரிஞ்சயன்.  ராஜகேசரி கண்டராதித்த தேவர் இறை பக்தியால்
ராஜகேசரி அரிஞ்சயன் அரியணை ஏறுகிறார். அரியணை ஏறிய பின் ராஜகேசரி கண்டராதித்த தேவருக்கு மதுராந்தகன் பிறக்கிறான். ராஜகேசரி கண்டராதித்த தேவர் மதுராந்தகனையும் இறை பக்தியில் வழி நடத்துகிறார். ராஜகேசரி அரிஞ்சயன் பிறகு ஆட்சி அவருடைய மகன் ஆதித்த கரிகாலனுக்கு என்று அறிவிக்க படுகிறது. ஆனால் ராஜகேசரி கண்டராதித்த தேவர் அவர்களின் பாதுகாவலர்கள் மதுராந்தகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சதியில் ஈடுபடுகின்றார். 

1) இராஜாதித்யன்
2) ராஜகேசரி கண்டராதித்த தேவர்.
                    $) மதுராந்தகன்
3) ராஜகேசரி அரிஞ்சயன்
                    #) ஆதித்த கரிகாலன்
                    #) அருள்மொழிவர்
                    #) குடந்தை பிராட்டி

இப்படிப் பட்ட சோழ மன்னர்களின் வாரிசு பகைமைகளை பார்த்தல், மகாபாரத போர் தான் நினைவுக்கு வருகிறது. யாருக்கு வெற்றி என்று வரலாற்றை தான் பார்க்க வேண்டும். ஏன் என்று காரணம் அறிய மகாபாரதத்தை புரட்டுங்கள்...

இன்றைய சிந்தனை

சித்தப்பன் பாக்கெட்டுலே சில்லறைய எடுத்து நாட்டாம திண்ணையிலே சீட்டு ஆடலாம்

கொசுறு: சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த மற்றும் ரசித்த பாடலில் இருந்த வரிகள் ஒன்று

கி.மு.கி.பி - மதன்

வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகத்தின் மூலமாக வரலாற்றை நினைந்து பிரம்மித்துக் கொண்டு இருக்கும் வேளையில், அடுத்த பிரம்மிப்பு கி. மு. கி. பி என்ற புத்தக வாயிலாக... அனைவருக்கும் மனதில் பதியும் மாதிரியாக கொடுத்தது மதனின் சிறப்பு தான்...  இப்புத்தகத்தை பற்றி பலர் கருத்து தெளிவாக கூறி இருந்தாலும், என்னுடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு சேர இங்கே கொடுத்து உள்ளேன்...

450 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியதிலிருந்து புத்தகம் தொடங்குகிறது.

உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்று வரலாற்று ஆதாரங்களோடு சொல்கிறார் ஆசிரியர். ஆப்பிரிக்காவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றிய மனித இனம் 3 லட்சம் ஆண்டுகளில் நடை பயணமாக உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றது.

நாடோடியாகவே வாழ்ந்த மனிதர்கள் கிமு 8000ல் தான் பாலஸ்தீனில் ஜெரீகோ என்ற இடத்தில் முதன்முதலில் ஒரு குடியிருப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

நாகரிகத்தின் தோற்றத்தையும், அதன் பல்வேறு படிநிலைகளையும் விவாதித்துவிட்டு, பூசாரிகள், மன்னர்கள் தோன்றிய வரலாற்றையும் சொல்கிறார். கிமு 2334ல் மெசொபடேமியாவில் ஆட்சிக்கு வந்த 'ஸார்கான்' தான் உலகின் முதல் மன்னன் என்று சொல்லப்படுகிறான். 1764ல் பாபிலோனியாவில் மன்னனான 'ஹமுராபி' உலகின் முதல்பெரும் சக்கரவர்த்தி.

ஹமுராபியைப் பற்றி விளக்க ஆசிரியருக்குச் சில அத்தியாங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. உண்மைதான்! உலகின் முதல் பேரரசனின் அரசு அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய மன்னன் ஹமுராபி தான்.

'
கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபியின் சட்டங்களின் ஆதாரமாக இருந்தது. அடித்தவனுக்கு அடியே தண்டனை! கலப்படம் செய்தால் தண்டனை! கொள்ளை, கொலை, கற்பழிப்பு செய்தவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மரண தண்டனை!

திருட்டுப்போன பொருளைக் காவல்துறை கண்டுபிடிக்காவிட்டால் அந்தப் பொருளின் இழப்பை அரசே ஈடு செய்தது. மேலும், குறிப்பிட்ட காவல் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரை வேறெந்த அரசிலும் இப்படி ஒரு சட்டம் இருந்ததே இல்லை.

ஹமுராபியை தொடர்ந்து ஆட்சி செய்த அரசர்களைப்பற்றி சொல்லிவிட்டு இலக்கியத்தில் நுழைகிறார் ஆசிரியர். கிமு 2100ல் எழுதப்பட்ட கில்கெமெஷ் காப்பியம் இலியத், ராமாயண மகாபாரதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது.

பாபிலோனியர்களின் மத நம்பிக்கை பற்றி பேசும்போது நம் மனதைக் கவரும் ஒரு பாத்திரம் 'லிலித்'. இவள் பாதி பெண்ணாகவும் பாதி பறவையாகவும் நிர்வாணமாக அலையும் ஒரு செக்ஸ் தேவதை. கலவியின் போது தெறித்து விழும் ஆணின் உயிரணுக்களைக் கொண்டு சாத்தான்களை உருவாக்குவது அவள் வேலை என்று நம்பப்பட்டது.

நம்மைக் கவரும் இன்னொரு பாத்திரம் 'ஆமன் ஹோடப்' எனப்படும் 'ஆக்நெடான்' என்னும் மன்னன். ஓவியத்தில் உண்மயைச் சொல்லுங்கள் என்று கலைஞர்களுக்குக் கட்டளை இட்டவன் இவன். மதங்களில் நம்பிக்கை இல்லாமல் சூரிய வழிபாட்டை மேற்கொண்டவன்.

எகிப்தின் வரலாறு சொல்லும்போது, மன்னர்கள் தங்கள் இனத்தில் கலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் மகள்களையே மணந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

சற்று ஹரப்பா, மொஹஞ்சதாரோவைப் பார்வை இட்டுவிட்டு ஏதென்ஸின் வரலாறு சொல்லத்தொடங்குகிறார் ஆசிரியர். ஏதென்ஸ் மற்றும் பாரசீக நாடுகளின் சுகந்திர சண்டைகளை படிக்கும் போது ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வுகள்... குறிப்பாக ட்ராய் அல்லது கிளடிநேட்டர் கண் முன்னால் இருப்பதாக ஒரு உணர்வு....இதில் தெரிந்த பல விஷயங்களையே குறிப்பிட்டுள்ளார். புது விஷயங்கள் என்றால், நல்ல நாகரிகம் பெற்றிருந்த கிரேக்கத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர். 'ஹோமோ செக்ஸில்' ஈடுபட்டவர்கள் அதிகம். சொல்லப்போனால் 'ஹோமோ செக்ஸில்' ஈடுபடாதவர்களுக்கு மதிப்பு இல்லை. 'மகிழ்ச்சிக்கு விலைமாதர்கள்; குழந்தைக்கு மனைவி; காதலுக்கு நண்பன்' என்று குறிப்பிடுகிறார் டெமஸ்தனிஸ்.

வரலாற்றின் தந்தை ஹெரோடோடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேடஸ், நையாண்டி நாடகங்கள் எழுதிய அரிஸ்டோஃபனீஸ், தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்ஸாந்தர் பற்றியெல்லாம் பேசிவிட்டு இந்திய வரலாற்றில் நுழைகிறார் மதன்.

இந்தியாவின் முதல் பேரரசர் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், சந்திரகுப்தரின் மகன் பிந்து சாரர், அவரின் மகன் அசோகர் என்று வரலாறு சொல்லி மௌரிய வம்சம் கிமு 188ல் வீழ்ச்சி அடைவதோடு முடிக்கிறார்.

வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 'வந்தார்கள்; வென்றார்கள்' முன்னுரையில் சுஜாதா சொல்வது போல, மதன் வரலாற்றுப்பாடங்களை எழுதினால் யார் வேண்டுமானாலும் நூற்றுக்கு நூறு வாங்கலாம்.

தீபாவளி 2009

அனைவருக்கும் என்னுடைய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்

Monday, October 05, 2009

அம்பை – பீஷ்மர் - மகாபாரதம்

மகாபாரதத்தில் அனைத்து கதாபத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். மிக சிறந்த அரசியல், சிக்கலான விஷயங்கள் என்று பல இருக்கும். அதே போல் அனைத்தும் ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக குருசேத்திரத்தில் தொடர்பு இருக்கும். சிக்கலான நிகழ்வுகளில் முக்கியமாக எனக்கு சமீபத்தில் பட்டது அம்பையின் குறிப்பு தான். மகாபாரதத்தில் இவளது பத்திரம் சிறிது எனறாலும் கனமானது என்று தான் கூற வேண்டும். தேவவிரதன் மற்றும் கங்கை மைத்தர் ஆன பீஷ்மரை குருசேத்திரத்தில் இருந்து அகற்ற காரணமாக இருக்கும் அம்பையை பற்றி நினைத்து பர்ர்த்த போது மனதில் சில கேள்விகள்... அதற்கு முன்னர் அம்பை யார்? அவளுக்கும் பீஷ்மருக்கும் என்ன தொடர்பு.

காசி நாட்டு இளவரசிகள் தான் அஷ்தினபுரத்து ராணிகளாக வருது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக காசி நாட்டு மன்னன், அப்போதைய மூன்று இளவரசிகளுக்கும் சுயம்வரம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அம்பை அம்மூன்று இளவரசிகள் ஒருத்தி. இதை அறிந்த பீஷ்மர் இளவரசிகளை அபகரித்து செல்ல அஷ்தினபுரத்து பிரதிநிதியாக வந்து சுயம்வரத்தில் இருக்கும் அனைத்து மன்னர்களையும் தோற்கடித்து மூவரையும் கூட்டி செல்கின்றார். சுயம்வரத்தில் கண்ட சால்வ அரசனை தனது மனதில் அம்பை வைத்து இருந்தால். கூட்டி செல்லும் வழியில் வரும் பீஷ்மருடன் போருக்கு வரும் சால்வ அரசனும் தோற்று போகிறான். இதனால் சால்வ அரசனுக்கு அவமானம் ஏற்படுகிறது. அஷ்தினபுரத்து அரண்மனையில் குந்தி மாதா மூவரையும் வாழ்த்தும் போது அம்பை தனது ஆசையை சொல்கிறாள். இதை அறிந்த பீஷ்மர் அம்பையை சால்வ அரசன் மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார். தனது அவமனத்து காரணமாக இருந்த பீஷ்மர் அனுப்பி வைத்த அம்பையை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் அம்பை காசி நாட்டுக்கும் செல்ல இயலாமல் அஷ்தினபுரத்துக்கும் செல்ல இயலாமல் அவமான படுகிறாள். இந்த அவமானத்துக்கு பீஷ்மர் தான் காரணம் என்று நினைத்து, அவமானத்தை போக்க பீஷ்மர் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று அஷ்தினபுரத்து அவையில் முறை இடுகிறாள். தனது பிரம்மசாரி சபதத்தை மேற்கொள் காட்டி அம்பையை மறுத்து விட, அம்பை பீஷ்மரின் மரணத்துக்கு கண்டிப்பாக காரணம் ஆவேன் என்று கூறி வெளியே செல்கிறாள். தனது அவமானத்துக்கு பதில் தேடி பீஷ்மரின் குருவான பரசுராமிடம் முறையிடுகிறாள். பரசுராமர் அம்பையை மணக்க சொல்லியும் பீஷ்மர் மறுத்து விட இருவரும் மோதிக் கொள்கின்றனர். அப்போட்டியில் பரசுராமர் தோற்று போகிறார். இதைப் பார்த்த அம்பை தவம் தான் சிறந்த வழி என்று நினைத்து பீஷ்மரை பலி வாங்க தவம் செய்து கடைசியில் அடுத்த ஜென்மத்தில் குருசேத்திர போரில் அர்ஜுனுடன் சிகண்டியாக சென்று பீஷ்மரை கொல்கிறாள்.

மேற்சொன்ன கதையின் படி பீஷ்மரின் தவறு என்ன? அதே போல் அம்பை செய்தது சரியா?

எனக்கு தெரிந்த வரை பீஷ்மர் செய்த ஒரே ஒரு தவறு,  அபகரித்து செல்லும் போது அம்பையிடம் மனதில் உள்ள ஆசையை கேட்காதது தான். ஆனால் அம்பை பீஷ்மரிடம் கூறி இருக்கலாம். இதனால் பீஷ்மர் எப்படி அம்பையின் அவமானத்திற்கு பொறுப்பு ஏற்க முடியம். கடைசியில் பீஷ்மரின் சாவுக்கு காணரமாக இருந்த அம்பை செய்து தான் தவறு என்பது என் வாதம்.

Sunday, October 04, 2009

திரு திரு துரு துரு - திரைவிமர்சனம்


சென்னையில் வாரயிறுதி நாட்களில் பொழுது போகாமல் இருக்கும் நிலைமை ஏற்பட்டால், கண்டிப்பாக இத்திரைப்படத்தை மடிக்கணினியில் காணலாம். சத்யம் சினிமாஸ் தயாரிப்பு என்ற விஷயத்தை தவிர முக்கியமான விஷயம் நடிகர் மெளலி... பழம்பெரும் நடிகர் என்று பல காட்சிகளில் காட்டி விடுகிறார். ரூபா மஞ்சரிக்கும், அஜ்மலுக்கும் நடிப்பை மட்டும் அல்லாமல் இயல்பான நகைசுவையான கதாபத்திரத்தை  தந்து இருக்கும் படம்... 


      - தவறாமல் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நகைச்சுவை திரைப்படம்
 


இன்றைய சிந்தனை



சினம் கொண்ட சிங்கதுடனும், அவமானம் பட்ட பெண்ணுடனும் மோத கூடாது.
                                 - அம்பை (மகாபாரதம்)



மழை - ஒவ்வொரு விதம் : திருப்பங்கள் - சிறுகதை

பல திடுக்கிட்டும் திருப்பங்கள் நிறைந்த "திருப்பம்" சிறுகதை போலவே இன்னொன்று எழுத வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு இந்த மழை. மழை பெய்யும் போது ஒவ்வொருக்கும் ஒரு விதமான எண்ணங்கள் இருக்கும். இதே இங்கு நான் எழுத போகிறேன் அதுவும் சில திருப்பங்கள் உடன்

சென்னையில் அப்போதும் சுட்டெரிக்கும் வெயில் இருக்கும் நிலையில் இன்று மட்டும் இருண்ட மேகத்துடன் இருந்தது நான் நாயகனுக்கு ஒரு சின்ன மன மகிழ்ச்சி. காரணம் இன்று தான் முதல் முதலில் வேலைக்கு போகும் நாள். அதிகாலையிலே அலுவகத்திற்கு சென்று வாயிற்படியில் காலை வைக்கும் போது நினைவில்...
                       மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டியில் இருந்து பிறந்து வளர்ந்து விவசாயத்தை நம்பி உள்ள  பெற்றோர்கள் கஷ்டபட்டு படிக்க வைத்து, நாயகனுக்கும் படிப்பு வராமல்  அவனும் கஷ்டபட்டு படித்து நான்கு வருட படிப்பை ஏழு ஆண்டுகள் படித்து சென்னையில் ஒரு வருடம் வேலை தேடி நண்பன் மூலமாக அவன் மூன்று ஆண்டுகளாக பணிபுரியம் இடத்திலே...

மீண்டும் சென்னையில்...

நாயகன் வலது காலை வைக்கும் போது இதோ ஒரு பெண் (அதாவது நமது நாயகி) அவனை இடித்து கொண்டு உள்ளே செல்ல, மழை பெய்ய ஆரம்பிக்கிறது.... கொட்டாம்பட்டியில் மழை சாரல் அடிக்க அவனது பெற்றோர் மகன் வேலை செல்லும் நேரத்தில் மழை என்பதால் நல்ல நேரம் என்று நினைக்க...

கற்பனை செய்யும் நானும் தமிழன் தான் அதனால்.. சென்னையில் அதே நேரத்தில்  நாயகனின் வாழ்க்கையில் ஒரு திருப்பம்... மகிழ்ச்சியுடன் அவள் அழகை எண்ணிக் கொண்டே ஒரு காதல் பாடல் அவனது எண்ணத்தில்.. பாடல் முடியும் போது... மீண்டும் அவள் அலுவக வாயிற் வெளியில் செல்ல, நம்ம நாயகனின் கண்ணும் வெளியே பாய்கிறது..

மீண்டும் ஒரு திருப்பம்....

நாயகியின் நான்காவது வகுப்பில் படிக்கும் குழந்தை தோளில் புத்தக பையுடன் அம்மா என்று நாயகியை கூப்பிட... மழை இடியுடன் பெய்ய ஆரம்பிக்கிறது. அப்போது அவனது கண்ணீர் மழையில் கலக்க, அத்துடன் தன்னக்க உலகமே அழுவதாக நினைக்க....

சற்று தூரத்தில் இருந்த வந்த அவனது நண்பனும் அவர்களுடன் பேச... நண்பனின் மனைவி என்று நினைத்து வெட்கத்தில் திரும்பி இருக்கைக்கு செல்கின்றான்.  நண்பன் நமது நாயகி உடன் வந்து நாயகனுக்கு மனைவி அல்ல  காதலி என்று அறிமுகம் செய்ய..நண்பன் திடுக்கிட...

மீண்டும் ஒரு திருப்பம்...

அக்குழந்தை அனாதை என்றும் நாயகி தத்தெடுத்து வளர்பதகவும் கூற நாயகனின் கண்ணீர் மேலும் அதிகரிக்கிறது. நண்பன் அதை ஆனந்த கண்ணீர் என்று நினைக்க, ஆனால் அக்கண்ணீர் தான் செய்த தவறுக்காகவும்,  உண்மையில் அக்குழந்தை நாயகனுக்கும் நாயகிக்கும் அவர்களின் சொந்த ஊரில் இருந்த நட்பின் போது பிறந்த குழந்தை என்று நினைக்க அவனது உடலில் மின்னல் பாய்கிறது

Saturday, October 03, 2009

இந்தவாரம்: கேட்டது: ஐதீகம்

பல நூறு ஆண்டுகளுக்கு சில மனிதர்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காக சில வரைமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதை ஐதீகம் என்று ஏற்று அதையே நடைபடுத்தி கொண்டு இருக்கிறோம். ஆனால் மாற்றம் ஒன்று தான் இவ்வுலகில் மாறாமல் இருப்பது என்பதை நிருபிக்கும் வகையில் ஐதீகமும் மாறிக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு நான் கேட்ட சில முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த வருடம் கும்பாவிஷேகம் நடைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சித்திரை திருவிழா நடந்தது உலகம் அறியும். ஆனால் இந்து மதத்தின் ஐதீகப் படி நடைப் பெற்றது சரியானத என்பது கேள்வி. கும்பாவிஷேகம் நடைப் பெற்று 45 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் வரை எந்த விழாவும் நடக்க கூடாது என்பது முறையாம் (நான் கேட்டது வரை). சித்திரை திருவிழா நடைப் பெறவே கும்பாவிஷேக வேலைகள் வேகமாக முடிக்க பட்டன என்பது நிதர்சன உண்மை. வேதங்களை படித்தவர்கள், ஆன்மிக வாதிகள், பெரிய குருக்கர்கள் என்று பல பேர் இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர் என்றால் அவர்கள் ஐதீகத்தை மதிக்க வில்லை என்று அர்த்தம்.

தகனதிரி செய்ய இப்பொழுது நடைமுறையில் மரக்கட்டையில் (சாதரண), மின்சார, மற்றும் எரிவாயு என்று மூன்று முறைகள் உள்ளன. இந்து மதத்தின் வழக்கப்படி சாதரண தகனம் தான் முறை. அது தான் நாம் முன்னோர்கள் சொன்னது. ஆனால் இப்போது யாரும் உபயோக படுத்துவது இல்லை. எரிவாயு முறை தான் எல்லா ஊர்களிலும் இருப்பது. குறிப்பிட்ட காரணங்களுக்காக ஐதீக முறைப்படி நடைப்பெறும் தகனத்தை, குருக்கர்கள் காசுக்காக அதுவும் நம் தொழில் அவசரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு தவறான முறையை கற்று கொடுக்கின்றனர். இந்த தவறான முறையே இப்போது தொடர்கிறது..

கிறித்தவர்கள் உடல்களை மண்ணில் புதைப்பது தான் வழக்கம் (பைபிளில் குறிப்பு உள்ளதாக கேட்டது). ஆனால் மக்கள் எண்ணிக்கை அதிகமா இருப்பதால், அரசு அவர்களுக்கான இடத்தை வழங்க முடியாததால் எரிவாயு தகனத்தை செய்ய அறிவுரை கூறுகிறது/வற்புறுத்துகிறது. அவர்களில் சில பேர் அப்படியே செய்து விடுகின்றனர். அப்படியானால் பைபிளில் கூறிய விஷயமும் பொய் தான என்ற கேள்வி சிறிது நாளுக்கு பிறகு வந்து விடும்.

குருக்கர்களே பயன்படுத்தாமல் இருக்கும் போது ஐதீகம் என்பது பொய் என்று நினைப்பு வந்து விடுகிறது. இதே நிலை தான் வேதத்துக்குமா?