Saturday, October 03, 2009

இந்தவாரம்: பார்த்தது: கடைசி 20 நிமிடங்கள்


ஒரு மனிதனின் கடைசி 20 நிமிடங்கள் என்பது இறப்பதற்கு முன்பாக உள்ள நிமிடங்களை பற்றி இங்கு குறிப்பிட இல்லை. வெறும் உடல் என்று இருக்கும் சடலம் சாம்பல் ஆகும் வரை.


நெருங்கிய உறவினரின் தகனதிரியின் காரணமாக தத்தனேரிக்கு சென்று இருந்தோம். குருக்கர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் செய்து கொண்டு இருந்தபோது வரிசையாக நான்குக்கும் மேற்பட்ட சடலங்கள் வந்து சேர்ந்தன. இத்தனைக்கும் அன்று சரஸ்வதி பூஜை வேறு. அனைத்து ஐதீக காரியங்களும் முடிந்த உடன், சடலம் எரிவாயு மூலமாக நெருப்ப வூட்டப்படும் இடத்திற்கு சிலபேருடன் கொண்டு செல்லபட்டது.  இன்னும் சிலர் முதல் மற்றும் இரண்டாம் நாள் செய்யும் மண்டபத்திற்கு சென்று விட்டனர். எரிவாயு அறை மிக பெரியது. உடலை இரு கம்பியின் நடுவே வைத்து எரியும் இடத்திற்கு ஒரு கம்பியின் மூலமாகவே அனுப்பி வைத்தனர். அக்கம்பியை மெதுவாக அழுத்த உடல் தானாக மேலிருந்து கீழ் எரியும் இடத்தில் அழுத்தபட்டது. அதற்கு மேல் சொல்லும் எழுத்துக்கள் என்னிடம் இல்லை.


நாங்கள் மண்டபத்தில் பூஜை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க சரியாய் 20  முதல் 25 நிமிடங்களில் குடுவையில் சாம்பல் எங்களுக்கு வந்து சேர்ந்தது. அதுவும் நெருப்பு கங்கு இல்லாமல் மெதுசூடாக உள்ள நிலையில். அந்த 20 நிமிடத்தில் உடல் எரிந்து நெருப்பு கங்கும் அணைந்து சாம்பல் சாதரண நிலையில். மனிதனின் வாழ்க்கை அவ்வளவு தான்.


இதிலும் லஞ்சம்: அரசு ஆணைப்படி ஒவ்வொரு எரிவாயு காரியங்களுக்கும் ரூ. 750. ஆனால் அங்கு உள்ள ஊழியர்கள் உற்றார், உறவினர்களின் தகுதியைப் பார்த்து பல நூறுகள் வாங்கிக் கொள்கின்றனர். நாங்கள் கொடுத்த தொகை ரூ. 600. நம்நாடு திருந்தவே திருந்தது என்பதற்கு இந்த உதாரணமே போதும்...


No comments: