Monday, February 09, 2009

எப்போது மாறும் இந்த அவலம்

மதிய வேளையில் அலுவகத்தில் உள்ள உணவு அருந்தும் அறையில் கிடைக்கக் கூடிய தென்இந்திய உணவு என்ற பெயரில் சாப்பிட முடிய சாப்பாட்டை வடஇந்திய நண்பர்களுடன் சேர்த்து சாப்பிடும் போது சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையான வாடகையை பற்றி விவாதித்து கொண்டு இருந்தோம். வடஇந்திய நண்பர்களில் ஒருவர் அடையாரில் குடிஇருப்பதாகவும், மாத வாடகை ரூ. 20,000 என்றும், இப்போது அதே வீட்டிற்கு ரூ.30,000 வரை மக்கள் வர தயாராக இருப்பதாகவும் கூறிக் கொண்டே இருந்தபோது, மற்றொரு நண்பர் வேளச்சேரியில் ரூ. 30,000 முதல் ரூ.40,000 வரை உள்ளது என்றும், சென்னை கூடிய விரைவில் மும்பையை விட வந்து விடும் என்றும் விவாதம் சென்று கொண்டு இருந்தது. மதுரை, சேலம், நெல்லை, கன்னியாக்குமரி மற்றும் நாகர்கோவில் போன்ற நகரங்களில்/ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவந்து கொண்டு இருப்பவர்களின் நிலை இப்போது மிக பெரிய கேள்விக்குறி. அரசாங்கம் பல இலவச சலுகைகள் அறிவித்து இருந்தாலும், மக்களின் அடிப்படை பிரச்சனையான வாடகையை பற்றி கவலை கொள்ளவில்லை. நாடேடுகளில் இதை பற்றி விரிவாக விவரித்து இருந்தாலும், அரசியல்வாதிகள் அதைவைத்து அரசியல் பண்ணுக்கின்றனர் தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, தமிழ்நாட்டில் கூட பல தொழிற்சாலைகள் மூடப்படுகிறது என்று செய்திகள் பலவண்ணம் வந்து கொண்டு இருந்தாலும், வாடகைப் பிரச்சினை சிறிதளவு கூட குறையவில்லை என்பது எனது வருத்தம் மட்டும் இல்லாமல், சென்னையில் தங்கி இருந்து வேலை பார்க்கும் அனைத்து மக்களின் கவலை...

No comments: