எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பர் திரு. T.A. மணிகண்டன் அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு,என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
Sunday, August 22, 2010
திருமண வாழ்த்துக்கள் - திரு. T.A. மணிகண்டன்
Wednesday, August 18, 2010
பெருமூச்சு - ஹைக்கு
நண்பர்கள் சொல்லியும்
பெற்றோர்கள் சொல்லியும்
கேட்காத நான்
உன்னை பார்த்த உடன் செய்கிறேன்
பெருமூச்சு விடும் யோகாசனத்தை
Tuesday, August 17, 2010
Date Night – 2010 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்
அமெரிக்காவில் நகரத்திற்கு வெளியில் வசிக்கும் ஒரு சாதாரண குடும்பம். கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். கணவனுக்கும், மனைவிக்கும் வாழ்க்கையில் ஒரு சந்தோசம்/பொழுது போகாமல் இருப்பதால் அதை சரி செய்ய இருவரும் முடிவு எடுக்கின்றனர். குழந்தைகளை வீட்டில் விட்டு, நகரத்திற்கு வெளியே ட்டே செய்ய வருகின்றனர். முதலில் இரவு உணவு அருந்த முடிவு செய்து ஒரு உணவகத்திற்கு செல்ல அங்கே அமருவதற்கு இடம் இல்லாமல் திண்டாடும் போது, ஏற்கனவே அங்கே யாரோ பதிவு செய்த இடத்தை பயன் படுத்தி உணவை முடிக்கின்றனர். பிரச்சனையே அங்கு தான் ஆரம்பிக்கிறது. இரண்டு பெரும் தலைவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவன் தான் இந்த உணவகத்தில் பதிவு செய்து விட்டு, வாராமல் போனது. கணவன் மற்றும் மனைவி அங்கு அமர, ஒரு தலைவனுடைய அடியாட்கள் அவர்கள் இரண்டு பேரும் தான் அவர்கள் தேடும் நபர்கள் என்று நினைத்து விரட்ட ஆரம்பிக்கின்றனர். இரண்டு தலைவர்களின் பிரச்சனை என்ன, கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் எப்படி அவர்கள் இடம் இருந்து தப்பித்தனர் என்பதே இப்படத்தின் கதை.
இரண்டு தலைவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை என்றால் பொதுவாக சீரியஸ் ஆக தான் இருக்கும். ஆனால் இப்படம் இரவு வேளையில் ஆரம்பிப்பதால் அமெரிக்காவின் இரவு விடுதியின் ஆட்டங்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் என்னவென்பதை காட்டி, படத்தை ஒரு நகைச்சுவை படமாக கொடுத்து உள்ளனர். படத்தினுடைய ஒவ்வொரு வசனத்தையும் அறிந்தோம் என்றால், தானாகவே சிரிப்பு வருவது உறுதி. படத்தை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
Monday, August 16, 2010
Inglourious Basterds – 2009 – ஆங்கிலம் - திரைவிமர்சனம்
இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனியர்களால் யூத மக்கள் பலர் கொல்லபட்டனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை மையபடுத்தி அதற்கு காரணமான ஜெர்மன் தலைவர்களை கொல்வதே இப்படத்தின் ஒரு கதை அதுவும் கற்பனை கதை. ஒரு யூத பெண், நாசிக் (ஜெர்மன்) படை வீரர்கள் இடம் இருந்து தப்பிப்பதாக கதை ஆரம்பிக்கிறது. நாசிக் தலைவர்களை கொல்ல அமெரிக்காவில் இருந்து எட்டு போர் கொண்ட ஒரு யூத படை வருகிறது. இந்த யூத படை குழு என்ன என்ன செய்கிறது, அப்பெண் என்னவாகிறாள், ஜெர்மன் தலைவர்களை கொல்வதற்கு என்ன திட்டம் தீட்டபடுகிறது, கொல்லும் சதி நிறைவேறியதா என்பதை திரையில் கொடுத்து உள்ளனர்.
திரைக்கதையில் முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்த்தால் நாசிக் படை தலைவரின் கதாபாத்திரம் மற்றும் கண்டுஅறியும் செயல்கள், மெல்லிய காதல் கதை, நாட்டுபற்றை கட்டும் விதம். இத்தனை இருந்தும் மனதில் நிற்க மறுக்கிறது. 20 நிமிடங்கள் தொடர்ந்து கதாபாத்திரங்கள் பேசுகின்றனர். அதன் பின் ஒரு சண்டை காட்சி. அனைவரும் இறந்து விடுகின்றனர். ஆனால் அவர்கள் பேசிய வசனங்களில் ஒரு உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நமக்கு அனுதாபம் இல்லாமல் போகிறது.
நம்ம ஏற்கனவே இங்கிலீஷ் படத்துக்கே கீழ சப்டைட்டிளோட தான் பார்க்கிறது. இதில் என்னவென்றால் பிரெஞ்சு, ஜெர்மன் என்று பல மொழிகள். படம் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.
Sunday, August 15, 2010
விமர்சனம்
ஒரு சிபிஐ டைரி குறிப்பு - மலையாளம் - 1988
1988 ம் ஆண்டு மெகாஹிட் படவரிசையில் இது முதல் இடம்
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு போலீஸ் விசாரணையுடன் படம் ஆரம்பிக்கிறது. அப்பெண்ணோ நடுநிலை வர்க்கத்தை சேர்ந்த பெண். ஆனால் கணவர் வீடோ பணக்கார குடும்பம். தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்னவென்று தேடி முதலில் வரும் நேர்மையான அதிகாரி விசாரிக்கிறார். ஆனால் அந்த அதிகாரி மாற்றம் செய்யபட்டு, கணவர் வீட்டுக்கு தேவையான வேறொரு அதிகாரி வந்து அது தற்கொலை என்று விசாரணையை முடிந்து விடுகிறார். ஆனால் அப்பெண்ணின் அப்பா மற்றும் தங்கை ஊர்வசி விடாமல் முயற்சி செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐக்கு போகிறது. இதில் சிபிஐ அதிகாரியாக நம்ம தலைவர் மம்மூட்டி. அவருக்கு துணை அதிகாரியாக சுரேஷ் கோபி. அப்பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை நடந்து இருக்கிறது, அக்கொலையை செய்தது யார் என்பதை தன் விசாரணையின் மூலமாக கண்டுபிடிக்கிறார்.
மலையாள படம் என்பதாலோ அல்லது 1988 ம் படம் என்பதாலோ, எந்த வித அலட்டலும் இல்லாமல் செருப்பு போட்டு கொண்டு, சட்டையை டக்கின் கூட செய்து கொள்ளாமல் வெறும் நடையில் மற்றும் நடிப்பில் கலக்கி இருப்பார். இவர் வந்த உடன் படம் செல்லும் வேகம் அதிகமாகிறது. ஒரு பொம்மையை வைத்து கொண்டு, அது விழும் தூரம் பார்த்து கணக்கிட்டு, அது கொலையா அல்லது தற்கொலையா என்று முடிவெடுக்கின்றனர். நமக்கு இப்போது சிரிப்பு வந்தாலும் கூட, அக்காலத்தில் யோசிப்பது பெரிய விஷயம் தான்.
மம்மூட்டிக்காக பார்க்க படவேண்டிய படம் தான்
I hate luv storys – 2010 - ஹிந்தி
நாயகன் - காதலை முழுவதுமாக வெறுப்பவன். நாயகி - காதலை முழுமையாக நம்புபவள்.
ஏற்கனவே இன்னொரு நபருக்கு பேசப்பட்ட நாயகி, தன்னுடம் வேலை செய்யும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். நாயகி தன் காதலை வெளிபடுத்தும் போது, நாயகன் ஏற்காமல், நாம் நண்பர்கள் என்று கூறி மறுக்க, நாயகியும் ஒப்புகொள்கிறாள். முடிவு செய்யபட்ட நபருடன் கல்யாணத்திற்கு ஒப்பு கொள்ள அதே நேரத்தில் நாயகனுக்கும் காதல் பிறக்கிறது. முடிவில் அவர்கள் இணைந்தார்களா அல்லது பிரிந்தார்களா எனபதே கதை.
படம் இழுவை என்றாலும், மனதில் நிற்கவே இல்லை. அதனால் நாமும் இப்படத்தை பற்றி எழுதவில்லை.
Subscribe to:
Posts (Atom)




