Tuesday, April 26, 2011

The Silence of the Lambs – 1991 - ஆங்கிலம்



சிவாஜி கணேஷன் அவர்கள் நடித்த கர்ணன் படத்தில் ஒரு காட்சி. என்.டி. ராமராவ் மற்றும் சகுனி கதாபாத்திரம் அவையில் பேசும் போது, "பாம்பின் கால் பாம்பு அறியும். பலே" என்ற ஒரு வசனம் வரும். ஒரு மனிதனை வெற்றி கொள்ள, அம்மனிதனின் வழியிலே சென்றால் மட்டுமே முடியும். அது நல்லதோ அல்லது கெட்டதோ. ஆனால் அது தான் நிதர்சனம். ஒரு திரைப்படத்தை எடுத்து வைப்பதற்கு முன், அதனுடைய திரைக்கதை, ஒளிபதிவு, இசை, கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் நடிகர்களின் நடிப்பு என்று சில அம்சங்கள் வெற்றி நிர்ணயத்து விடும். கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த பாத்திரத்தை எடுத்த நடிகரின் நடிப்பை பொறுத்து மிக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக இந்த இரண்டுமே மனநோயாளி சார்புடைய பாத்திரம் என்றால் இன்னும் முக்கியத்துவம் பெறும். சரி, நம்ம கதைக்கு வருவோம்.


வரிசையாக பெண்கள் கொடூர முறையில் கொல்லபடுவதாக தெரிந்ததால், வழக்கு எப்.பி.ஐக்கு வருகிறது. இந்த கொலை வழக்கு, ட்ரைனிங் எடுத்து கொண்டு இருக்கும் "ஜோடி போஸ்டருக்கு" கொடுக்க படுகிறது. கொலை செய்யப்படும் முறைகள் பார்த்ததில், ஒரு மனநோயாளி தான் இந்த கொலையை செய்கிறான் என்ற முடிவில் தேடுதல் வேட்டை ஆரம்பம் ஆகிறது. அதே போல், கொலை செய்யும் மனநோயாளி அடுத்த முயற்சி என்னவாக இருக்கும் என்பதை அறியவும், அந்த மனநோயாளி யாராக இருக்கும் என்பதை அறியவும்,  மனித உறுப்பை தின்பதற்காக, பல கொலைகளை செய்து  எட்டு வருடமாக சிறைசாலையில் இருக்கும் "பிரியன் காக்ஸ்" என்ற இன்னொரு மனநோயாளி இடம் அவள் செல்கிறாள். பிரியன் காக்ஸ் என்பவர் யார், தற்போது கொலை செய்து கொண்டு இருக்கும் மனநோயாளியை கண்டுபிடிக்க உதவி செய்தானா, கொலை செய்யும் நோக்கம் என்ன, யார் கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே பல திருப்பங்கள் உடன் இப்படத்தை காணலாம்.


நமக்கு மனநோயாளிகள் என்றாலே நினைவுக்கு வருவது, தமிழில் ஆராரோ ஆரிரரோ மற்றும் மனசுக்குள் மத்தாப்பு தான். ஆனால் உண்மையான நிலைமை நமக்கு தெரியாது. ஆங்கில திரைப்படங்களில் தான் கொலை மட்டுமே செய்யும் மனநோயாளிகள் காட்டபடுவர்கள். இந்த திரைப்படத்தில் வரும் மனநோயாளிகள் மற்ற திரைப்படத்தில் வரும் மனநோயாளிகளை விட மாறுபட்டவர்கள் என்பதை முதலில் காட்டப்படும் சிறைசாலையே உதாரணம். படத்தில் மிக முக்கியமாக கருதபடுவது திரைக்கதை கொடுத்த விதம் தான். அதற்காக நாம் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும். படம் ஆரம்பித்து நேரம் ஆக ஆக, நாமும் இந்த திரைப்படத்தில் ஒரு நபராகவே மாறி இருப்பது உண்மை. அது தான் இப்படத்தின் வெற்றி. அதே போல் அதிகாரியாக வரும் ஜோடி போஸ்டர் மற்றும் பிரியன் காக்ஸ்ன் நடிப்பு அபாரம். இசை இல்லாமலே வெறும் நடிப்பால் சில இடங்கள் நம்மை மிரள வைக்கின்றன.


கமல் மற்றும் செல்வராகவன் எடுக்க நினைத்த திரைப்படம் இந்த படத்தின் சாயல் தான் என்று கேட்டதாக நினைவு. அதனால் தான் பலமுறை தேடி கண்டுபிடித்து பார்த்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.குறிப்பாக சைக்கோ கதாபாத்திரம் உடைய திரைப்படங்களை காணும் நண்பர்கள், தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம்.

Wednesday, April 20, 2011

யாதர்த்தமான திரைப்படம் – Dhobi Ghat – Hindi - 2011





கடந்த சில வருடங்களாக, மசாலா திரைப்பட உலகம் என்று கூறும் அளவு மாறி போன வடஇந்திய திரையுலகத்தில் ஒரு யாதர்த்தமான திரைப்படத்தை வெளியிட்டு உள்ளது. சில நண்பர்கள் கூறிய பேச்சை கேட்டு, இந்த திரைப்படத்தை பார்க்காமல் தள்ளி வைத்து இருந்தேன். சமீபத்தில் ஒரு பதிவரின் விமர்சனத்தை படித்து விட்டு,  படத்தை காண ஆரம்பித்தேன். படம் முடிந்தும் மனதில் ஒரு கணம். அது தான் படத்தின் வெற்றி. படத்தை பற்றி சொல்லி அதன் மதிப்பை குறைக்க விரும்பவில்லை.

இந்த திரைப்படத்தை முழுமையாக காண இங்கே சொடுக்கவும்

Monday, April 18, 2011

மருத்துவ வசதி - நான் பார்த்தது


மாடு இறந்தாலோ அல்லாத நாயிக்கு காலில் அடிப்பட்டலோ, சண்டைக்கு வர சில அமைப்புகள் எப்போதும் தயாராக இருக்கின்றன. ஆனால் மனிதன் இறந்தாலோ அல்லது அவனுக்கு அடிப்பட்டலோ, அவனை காப்பற்ற ஒரு மனிதன் கூட வர மாட்டன். எனக்கு நினைவு தெரிந்து கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் இதே நிலை. மனிதாபிமானம் என்ன என்று சில சமயம் நாம் கேட்கவேண்டிய சூழ்நிலை. ஆனால் அமெரிக்காவில் நான் கண்ட இரண்டு விஷயங்கள் என்ன மிரள வைத்தன.

அமெரிக்காவில் ஒரு நண்பருக்காக மருத்துவமனைக்கு சென்றோம். என்னை அழைத்து சென்ற நண்பர் அவர்களுக்கு, இடது கையில் சிறிது வலி. முதலில் சிறிய மருத்துவமனையில்  அந்த வலியை பற்றி கேட்க, ஒரு வாரமாக இருப்பதாக அவர் சொல்ல, அவசர உதவிக்கு சென்று விடவோம் என்று அவர்கள் கூற, வேறு இடத்தில் உள்ள அவசர உதவி பிரிவுக்கு சென்றோம். அவசர உதவி என்பதற்கு இங்கு ஒரு தனி சட்டமே உள்ளது. சட்டத்தின் முக்கிய அம்சத்தை உள்ளே வரும் வழியில் பார்க்கும் படி வைத்து உள்ளனர். அவசர உதவிக்கு வரும்  போது, நபரிடம் எந்தவித கேள்வியும் கேட்காமல் அனுமதித்து கொள்ள வேண்டும் மற்றும் உயிருக்கு உத்தர வாதம் வரும் வரை நபரிடம் கேள்வியே கேட்க கூடாது. வந்தவரின் உயிருக்கு பயம் இல்லை என்று தெரிந்த பிறகு தான், நோயாளின் அனுமதி பெற்று அனுப்பவோ அல்லது வைத்து கொள்ளவோ வேண்டும். பணம் என்ற விஷயம் எப்போதும் இடையில் வருவது இல்லை. என் நண்பருக்கு, எல்லா விதமான ஆய்வுகளும் செய்யப்பட்டன. தலை பகுதி கூட வட்ட வெளியில் பார்க்கபட்டது. இந்த கை வலியால் அவரின் உயிருக்கு பயம் இல்லை என்று தெரிந்த உடன் தான், அவர்களே மற்றொரு சின்ன மருத்துவரை பார்க்க எழுதி கொடுத்தனர். அவர்கள் எடுத்த ஆய்வுகளை என் கண்ணால் பார்த்தேன். கை வலிக்கே இந்த ஆய்வா என்று வியந்து போனேன். அந்த மருத்துவ அவசர உதவி சட்டம் பற்றி அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


இரண்டு வாரத்திற்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வை காணும் போது, இந்திய அரசாங்கம் சில சமயங்களில் இங்கு பிச்சை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது. இதுவும் மருத்தவத்தை தொடர்பு உடையது தான். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் எண்ணை தொடர்பு கொள்ளும் படிசொல்வார்கள். பிரச்சனையை பொறுத்து உடனே அதற்குரிய முடிவுகளை எடுப்பார்கள். பத்து வயது சிறுவன், எண்ணை தொடர்பு கொண்டு, தன் வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு மூச்சு விட முடியாமல் தவிப்பதாக தெரிகிறது. நான் என்ன செய்யட்டும். அப்பாவை அழைத்து சொல்லவா என்று கேட்க, எதிர் முனையில் இருக்கும் நபர் வேண்டும், எங்கே உடனே அழைப்பில் இரு என்று கூற, அந்த சிறுவன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறி கொண்டே இருக்கிறான். எதிர் முனையில் இருக்கும் நபர், பிரச்சனைக்கு உள்ளன நபர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்று அறிய சிறுவனிடத்தில் செய்ய சொல்லும் ஆய்வுகளும், அதற்கு சிறுவன் கூறும் பதில்களும், ஒரே பதட்டம் தான். ஆனால் சிறுவனுக்கு பதட்டம் இருந்தாலும், தொலைபேசியில் கூறி அனைத்தையும் சரியாக செய்து முடித்தான். எதிர் முனையில் பேசும் நபர், வீட்டின் தொலைபேசி எண்ணை வாங்கி கொள்கிறார். தற்போதைய தொலைபேசி தொடர்பு துண்டிக்க பட்டால், மீண்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த தொலைபேசி உரையாடல் ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கு நடக்க, அதற்குள் மருத்துவ அவரச உதவி குழு, அச்சிறுவனின் தொலைபேசி அழைப்பை வைத்து, வீட்டை கண்டுபிடித்து அவன் வீட்டிற்கு வந்து விடுகிறது.

ஒரு உயிரை காப்பற்றியதற்காக, அந்த சிறுவனுக்கு உயரிய விருது வழங்க படுகிறது. விருது வழங்க படுவது நம்மூரில் நடக்கும் என்றாலும், ஐந்து நிமிடத்தில் ஒரு மருத்துவ குழு வீட்டிற்கு வருவது என்றால், அது அமெரிக்கா அரங்கத்தால் மட்டுமே முடியும். இதற்காக அவரச மருத்துவ உதவி சட்டத்திற்கு தலை வணங்குகின்றேன்.

சிறுவனும், அவரச உதவியும் பேசிய தொலைபேசி உரையாடல் இங்கே.


இந்த செய்தியை முழுமையாக அறிய இங்கே.