Wednesday, April 13, 2011

திரைவிமர்சனம் - Source Code – 2011 - ஆங்கிலம்



அமெரிக்காவில் இருக்கும் பல இயக்குனர்கள் அதி புத்திசாலிகள். நான் இன்னும் Inception, Matrix, Shutter Island போன்ற படங்களை வியந்து கொண்டு இருக்கின்றேன். படம் பார்க்கும் போது ஒரு மனிதனின் மூளை சலவை செய்ய முடியும் என்பதை நீருபித்த படங்கள் இவை. சலவை செய்யவில்லை என்றால், படம் பார்த்தும் பயன் இல்லை. அந்த விதத்தில் மீண்டும் ஒரு கதை. கண்டிப்பாக யோசிக்காமல் இந்த கதையை புரிந்து கொள்ள முடியாது.


கதைக்கு வருவோம்: "கால்டர் ஸ்டீவென்ஸ் அமெரிக்கா இராணுவத்தில் பணிபுரியும் நபர். ஆனால் தீடிர் என்று சிகாகோவில் பயணித்து கொண்டு இருக்கும் உள்ளூர் பயண இரயில் தூக்கத்தில் இருந்து விளிக்கின்றார். சிறிது நேரத்தில், அவர் அடுத்த நபரின் மனித உடலில் இருப்பத்தை கண்டுபிடித்து பிடித்து கொள்கிறார். எட்டு நிமிடத்திற்கு பிறகு அந்த இரயில் வெடித்து விட, ஒரு இருண்ட அறையில் விழித்துக் கொள்கிறார். அங்கு ஒரு குட்வின் என்ற பெண்ணிடம் பேச, அவள் மீண்டும் அவனை அதே இரயிலுக்கு அனுப்பி, வெடிகுண்டு வைத்து, இரயிலை தகர்த்திய ஆளை கண்டுபிடிக்க சொல்கிறாள். இப்படியே இவனை பலமுறை அதே நிகழ்வுக்கு அனுப்பி, வெடிகுண்டு வைத்தவனை கண்டுபிடிக்க அனுப்ப, அவனால் முடியாமல் திரும்ப அதே இருண்ட அறைக்கு வருகிறான்.  இப்போது ஸ்டீவென், நான் எங்கு இருக்கிறேன் என்று குட்வின் மற்றும் ரூட்லேது (ஆய்வாளர்)  இடம் கேட்க, அவர்கள் இவனிடம் "ஒரு ஆய்வில் நீயும் ஒரு நபர் என்றும், இறந்து போன ஒரு மனிதனின் கடைசி எட்டு நிமிடத்தில், அவனுக்கு பதில் உன்னை அனுப்பி இருப்பதாகவும் கூறி, வெடிகுண்டை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்". மீண்டும் மீண்டும் ஸ்டீவென் கண்டு பிடிக்காமல் வர, அதே நேரத்தில் தான் எங்கு இருக்கின்றேன் மற்றும் எப்படி இங்கு வந்தேன் என்று அந்த எட்டு நிமிடத்தில் கண்ட பிடிக்க முயல, அப்போது ஸ்டீவென் கூட இறந்து போன நபர் என்று அறிய வர" இப்படி பல குழப்பங்கள். 




முழு படத்தையும் இங்கு நான் சொல்லவில்லை. காரணம் கதையை பார்த்து மட்டுமே வியக்கக்கூடிய விஷயங்கள் நிறைய உண்டு. அதை நீங்கள் பார்த்தல் மட்டுமே நன்றாக இருக்கும். படத்தில் பல முக்கிய அம்சங்கள் உண்டு. இக்கதை கொடுத்த விதம் கடந்த காலத்திற்கு சென்று ஒரு நிகழ்ச்சியை ஆராய்ந்து அதை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக கொடுத்து இருப்பார். ஒளிபதிவு செய்யப்பட்ட விதம் சிகாகோவின் அழகை நம் மனதில் கொள்ளை போகும் அளவிற்கு கொண்டு சென்று, நம்மை கட்டிபோட்டது. 


முடிவு: கடந்த காலத்திற்கு சென்று, நடந்து முடிந்த நிகழ்வை, நடக்காமல் தடுத்து, இன்றைய காலத்தில் அதனுடைய தாக்கம் இல்லாமல் கொண்டு வர முடியும். அது தான் Source Code. கண்டிப்பாக காண வேண்டிய படங்களில் ஒன்று. 

Monday, April 11, 2011

இறைவனை வேண்டுகிறேன்

வாழும் கடவுள்களாக காணபடும் மருத்துவர்களும், மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வாளர்களும் தயவு செய்து cancer என்ற நோய்க்கு மருந்து கண்டுபிடியுங்கள். எனது உற்றார் மற்றும் உறவினர் எழு பேர்கள், இந்த நோயால் அவதிபடுவதை நான் என் கண்களால் கண்டு இருக்கிறேன். அவர்களுக்கு இந்த நோய் வந்துவிட்டதே என்ற வலியை விட, அந்த வலியில் அவர்கள் படும் வேதனை தான் அதிகம். அதே போல் அதை பார்க்கும் போது ஏற்படும் வலிகள் நமக்கும் அதிகம்.

எனது தொழில்நூட்ப கல்லூரி நண்பரின் தாயார் அவர்களின் உடல் நிலை சரியாக இறைவனை வேண்டுகிறேன். இத்தனைக்கும் அவர்கள் தினசரி பூஜை செய்யும் பழக்கம் உடையவர்கள். இந்த நிலையில் நான் தெய்வம் என்ற சொல் கேள்வி குறி ஆகி விடுகிறது.

Thursday, April 07, 2011

அஞ்சலி: நடிகை சுஜாதா


நல்ல நடிகையை தமிழ் திரையுலகம் இழந்தது. அவருக்கு என்னுடைய கண்ணீர் அஞ்சலி.


Monday, April 04, 2011

ப்ராஞ்சியெட்டன் & தி செயின்ட் – மலையாளம்- 2010 - Pranchiyettan & The Saint – Malayalam



மறுபடியும் அலட்டல் இல்லாமல், தரமான மலையாள திரைப்படம். இப்படத்திலும் கதை மற்றும் மம்மூட்டியின் அசத்தல் நடிப்பு என்று வைத்துக் கொண்டு, மற்றொரு உயிரோட்டம் உள்ள படம். இயக்குனர் பல விஷயங்களை ஒரு சேர ஒரே படத்தில் கொடுத்து இருந்தாலும், அனைத்து விஷயங்களும் முழுமையாக யோசிக்க பட வேண்டியது மற்றும் உணர பட வேண்டியது.  கதை என்றால் ஒரு பெரிய மனிதரை சுற்றி நடக்கும் சம்பவங்கள். அப்பெரிய மனிதர் மம்மூட்டி. இவர் ஒரு காரியம் செய்வதற்காக, தன்னுடைய முன்னால் சொந்த பந்தகளின் உத்தரவுகளையும், சார்ச்க்கு சென்று இறைவனின் ஆசியையும்  பெறுவதற்கு செல்லும் இடத்தில், இறந்து போனவர்களை காண்கிறார். அதே போல் இறைவனையும் நேரில் காண்கிறார். இறைவனிடத்தில் தன்னுடைய வாழ்க்கையை விளக்கி ஆசியையும் பெறுகிறார். ஆனால் இயக்குனர் இதற்கு திரைக்கதை அமைத்த விதம் தான் படத்தின் பலம்.


அரிசி கடை வைத்து இருக்கும் மம்மூட்டி, பல தொழில்கள் செய்து வெற்றி பெற்று, பல பேருக்கு உதவி செய்து கொண்டு இருந்தாலும் பெயர் மற்றும் புகழ் இல்லை என்று வருத்தபடம் நபர். பெற்றோர், உற்றார் மற்றும் உறவினர் இல்லை என்பதால், இவரை சுற்றி தண்ணி அடிக்கும் மற்றும் புகழ்/பெயரை வாங்க  உசுபேத்தி விடும் கூட்டம்.
 
புகழ் வேண்டும் என்று அவர் கிளப் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் போகும் இடம் ஆகட்டும், பணத்தை செலவு செய்து மற்றொருவருக்கு விழ எடுக்கும் போது அவருக்கு அமர்வதற்கு இடம் கூட கிடைக்காமல் போகும் காட்சி ஆகட்டும், பத்மஸ்ரீ வாங்கினால் பெயர் கிடைக்கும் என்று நம்பி அதை பெற குறுக்கு வழியில் சென்று
  பணத்தை இழந்து, பட்டம் கிடைக்காமல் போகும் காட்சி ஆகட்டும், மம்மூட்டிக்கு நிகர் மம்மூட்டி தான் என்பதை காட்டி இருப்பார். படத்தில் பல சீரியஸ் காட்சிகள் வைத்து இருந்தாலும், படம் முழுவதும் நகைச்சுவை இருக்கும். தன் வாழ்வில் கூறுக்கிடும் குஷ்பு மற்றும் ப்ரியாமணியின் கதைகளை லேசாக சேர்த்து, அதற்குரிய விஷயத்தையும் இயக்குனர் விளக்கி இருப்பார். குஷ்பு மற்றும் அவரது கணவரின்  வசதி படைத்த வாழ்க்கையை காட்டி, உட்புற  வாழ்க்கையை காட்டி இருப்பார்.



கடைசியாக தன்னை வளர்த்த ஆசிரியரின் ஆசையை நிறைவேற்ற, படிக்காமல் இருக்கும் ஒரு பள்ளி மாணவரை தேற்றி காட்டுகிறேன் என்று அழைத்து சென்று அதிலும் தோற்று போகிறார். ஆனால் அம்மாணவனின் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, சந்தேகத்தால் மகன் அறியும் படி, மனைவியை கொலை செய்த குடிக்கார கணவன். மாணவனின் தந்தை திருந்தும் போது, மாணவனின் வாழ்க்கை என்ன ஆகிறது, அதே போல் தந்தையின் நிலைமை என்ன ஆகிறது என்பதை தெளிவாக விளக்கி இருப்பார் இயக்குனர்.


இறைவன் கடைசியில் விளக்கும் போது, மம்மூட்டி இழந்த/ ஏமாற்றப்பட்ட போது, ஏமாற்றியாவரின் நிலைமையை எடுத்து சொல்லி, நிலைமையை விளக்குகிறார். எதற்கு வந்தோமோ, அதற்குரிய ஆசியை பெற்று மகிழ்ச்சியுடன் சார்சில் இருந்து கிளம்புகிறார். படம் முடியும் போது, நம் மனதில் ஒரு உணர்வு/நிம்மதி/மகிழ்ச்சி கிடைத்தது என்றால், அது தான் இப்படத்தின் வெற்றி. ஒரு முறையாவது கண்டிப்பாக காண வேண்டிய திரைப்படம்.

Friday, April 01, 2011

தேர்தல் பற்றி ஒரு விவாதம்

எந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று நினைத்து தேடி கொண்டு இருந்த போது, எழுத்தாளர் ஞானி அவர்கள் இந்த தேர்தலை பற்றி விவாதித்த கருத்துகளை பார்த்தேன். ஒரு இந்திய குடிமகனாக, தேர்தலை பற்றி தெரிந்து கொள்ள பட வேண்டிய விஷயங்கள். சிறிது நேரம் செலவழித்து பார்த்தாலும், மதிப்புடைய விஷயங்களை பார்த்தோம் என்ற உணர்வு.