Wednesday, December 05, 2012

ஒ மை கோட் (Oh My God) - 2012 - ஹிந்தி - திரைவிமர்சனம்



சமீபத்தில் என்னை பெரிதும் கவர்ந்த பட்டியலில் முதலாவதாக இருந்த திரைப்படம் இது. கதை என்று பார்த்தால், பூகம்பத்தால் இடிந்து போன தான் கடைக்காக கடவுள் மீது வழக்கு பதிவு செய்து எவ்வாறு வெல்கிறார். முதல் இருவது நிமிடம் பழைய ஹிந்தி படங்களை காணும் பிம்பம் இருந்தாலும், அடுத்த நிமிடம் முதல் சரவெடியாய் வெடிக்கும். திரைப்படம் முழுவதும் கடவுள் மீது வைத்து இருக்கும் மூடநம்பிக்கையும், கடவுள் பெயரை சொல்லி கொண்டு ஏமாற்றும் போலி சாமியார்களை சுத்தியலை தலையில் வைத்து அடித்தார் போல் ஒவ்வொரு வசனமும் அமைக்கப்பட்டு இருக்கும்.


இயற்கை சம்பவங்களால் ஏற்படும் நஷ்டத்திற்கு, இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பாக முடியாது என்று கூறுகின்றனர். சரி, அப்படி என்றால் கடவுளிடம் இருந்து எனக்கான இழப்பீட்டு தொகையை வாங்கி கொடுங்கள்.

கடவுளுக்கு அளிக்க படும் சேவை வியாபாரம் என்று கூறுகிறார்.
ஆம் அது வியாபாரம் தான்.. நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும்  முதலில் பார்க்கிங் செலவு, துரித தரிசனத்துக்கு ஒரு செலவு, பூ, விளக்கு, உண்டியல் என்று பல செலவுகள். கடவுளை காண்பது என்பது, கண்காட்சிக்கு சென்று ஒரு பொம்மை காண்பது போல் வியாபாரம் ஆகி விட்டது. கடவுளை பெயரை சொல்லி கொண்டு இருக்கும் இவர்களுக்கு வரிகள் கிடையாது. இதில் எங்கு சேவை உள்ளது? இந்த வியாபாரத்திற்க்கு மட்டும் தான் சுணக்கம் என்பதே கிடையாது. சொல்ல போனால், உலக அளவில் பொருளாதார சுணக்கம் வந்த போது, செழிப்போடு வாழ்ந்தார்கள்.

நானும் இன்சூரன்ஸ்க்கு பணம் செலுத்துவது போல், கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் செலுத்தி உள்ளேன்.

உங்கள் பிரச்சனை கடவுளிடம் தானே? 
ஆம். 
அப்படி என்றால் கடவுளிடம் சென்று இழப்பிட்டு தொகையை கேளுங்கள். ஏன் கோவில் நிர்வாகத்திடம் கேட்கிறீர்கள்... 
அப்படியா? சரி நீங்கள் வீட்டிற்கு என்ற நிர்வாகம் மின் விநியோகம் செய்கிறது? 
ரிலையன்ஸ். 
சரி, உங்கள் வீட்டில் மின் பிரச்சனை என்றால் அம்பானியிடமா முறை இடுவிர்கள் அல்லது மின் விநியோக நிர்வாம்/அதிகாரி இடம் தான் முறை இடுவீர்கள்.

இவர்கள் சாமியார்கள். 
ஆம் இவர்கள் சாமியார்கள் தான், அதிகாரிகள் அல்ல. அதிகாரிகள் படித்தவர்கள். இவர்கள் வியாபாரிகள். ஏன் என்றால் இவர்கள் கடவுளுக்கு பல இடத்தில் பல்வேறு நிறுவனங்களை நடத்துபவர்கள் 

கடவுள் என்று கூறுகிறிர்கள், எப்படி ப்ளேசர்? 
நீங்கள் மட்டும் தான் காலத்தின் படி மாறுவீர்கள? நானும் தான் காலத்தின் படி மாறுகிறேன்.


இதே போல் திரைப்படம் முழுவதும் சிந்திக்க வைக்கும் வசனங்கள். ஒரு நாத்திகவாதியாழும் சிந்திக்க முடியாத மற்றும் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதே மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கூர்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள் வசன இயக்குனருக்கு. இவர் தான் படத்தின் முதல் பலம். கடவுளிடம் இழப்பிட்டு தொகை கேட்டு வழக்கு தொடும் நபராக பரேஷ் ராவல். அருமையான நடிப்பு. நம்மூர் பிரகாஷ்ராஜ் போல்  எல்லாவிதமான உணர்ச்சிகளும் நினைத்த மாத்திரத்தில் மாற்றும் நடிகர். இவர் படத்தின் இரண்டாவது பலம். அக்ஷய்  குமார் கடவுளாக. இவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். எப்போதும் போல் நம்ப முடியாத ஒரு சில காட்சிகளுடன். படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், இப்படி அருமையான கதையின் முன்பு, அது பெரிதாக தெரியவில்லை.


இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இப்படம் வெளிவந்த உடன், எப்போதும் கதையின் நாயகருக்கும், தயாரிப்பளருக்கும் பல மிரட்டல்கள். காவல் துறை பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு சென்றது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இக்கதையை தேர்ந்து எடுத்து இயக்கியவருக்கும், தயாரித்தவருக்கும் என் பூங்கொத்து.

No comments: