குடும்பத்தை
பார்த்துக் கொள்ளும் பெண்கள் ஆகட்டும், வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள் ஆகட்டும்
இந்த சமுதாயத்தில் எவ்வாறு பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையும், அதை புறம் தள்ளிவிட்டு
அவர்கள் எவ்வாறு சாதிக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லும் படங்கள் இவை. அதில் முதல்
படமாக ENGLIஷ் VINGLIஷ்
குடும்பத்தில்
வேலை பார்க்கும் பெண்ணாக ஸ்ரீதேவி. பல வருடங்களுக்கு பின்பு திரையில் என் சிறுவயதில்
கண்ட அதே ஸ்ரீதேவியாக. பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து கொண்டாலும்,
அவர்களுக்கு என்று சுயமரியாதை, உணர்ச்சிகள் உண்டு. இவைகள் இரண்டும் கிடைக்கமால் போனதால், எப்படி மனதில் கஷ்டபடுகிறார்கள்
என்பதை பாமரனுக்கும் புரியும் விதத்தில் கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றி. குடும்பத்தில் அனைவருக்கும்
தெரிந்த ஆங்கிலம் என்ற மொழி தெரியாத காரணத்தால், பல இடங்களில் சுயமரியாதை இழக்க நேருகிறது.
சுவையுடன் கூடிய லட்டு செய்யும் திறமை இருந்தாலும், அங்கு மதிக்க படவில்லை. இந்த சூழ்நிலையில்
ஆங்கிலம் மட்டுமே பேசும் இடமான அமெரிக்காவிற்கு வர வேண்டிய சூழல் அதுவும் அக்காவின்
மகளுக்கு திருமணத்திற்காக. ஸ்ரீதேவி ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்கா சென்று, எவ்வாறு
அந்த சூழ்நிலையை கையாண்டார்
என்பதே மீதி கதை.
ஒவ்வொரு
முறையும் ஸ்ரீதேவியை அவர்கள் குழந்தைகள், கேலி செய்யும் நேரத்தில் அவருடைய மனநிலையை தன் நடிப்பில்
மூலம் வெளிகாட்டும் நேரத்தில்
தான், இது நாள் வரை ஸ்ரீதேவியை ஏன் தமிழ் திரையுலகம் மறந்தது என்ற கேள்வி எழுகிறது.
அஜித்
என்ற பெரிய மாஸ் நடிகர், சின்ன பாத்திரத்தில்
நடித்து இருக்கிறார் என்ற பெருமை இருந்தாலும் தூதரக அதிகாரி முன்பு பேசும் வசனங்கள்
என்னால் அதிகம் தான்.
அமெரிக்காவின்
நியூயார்க் அழகாய் கண் முன்னால் கட்டபடுகிறது. இதற்காக ஒளி இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து.
சின்ன
சின்ன கதாப்பாத்திரங்களாக பிரான்ச் நடிகர், ஸ்பானிஷ் பேசும் மெக்ஸிகோ பெண்மணி, ஆங்கிலம்
கற்று தரும் அமெரிக்கா ஆசிரியர், சைனீஸ் பெண்மணி,
தமிழ் பேசும் ஒரு நபர், இந்தி பேசும் நபர், கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு மனிதர். இவர்கள்
அனைவரும், தன் நிலைமையை அறிந்து நடித்து இருப்பார்கள். யாருமே தேவை இல்லை என்ற நிலை
வராமல் இயக்குனர் அவர்களை அமைத்து இருப்பார்.
பிரியா
ஆனந்த் - சில படத்தில் பார்த்து இருந்தாலும், இப்படத்தில் மட்டுமே ரசிக்கும் விதமாக
ஆடை அலங்காரம் அமைந்து இருந்த என்பது உண்மை.
குடும்பம்கறது
அன்பு மற்றும் மரியாதை... நம்மை நாமே நேசிக்கலனே எப்படி? நம்மை நாம நேசிக்க ஆரம்பிச்ச
நம்ம பழைய வாழ்க்கையை நேசிக்க தோணும் - இப்படி பல இடங்களில் வசனங்கள் ஷார்ப்.
மொத்தத்தில்
இப்படம் குடும்ப பெண்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும் ஒரு மருந்து தான்.
1 comment:
விமர்சனம் அருமை..படம் எனக்கும் ரொம்ப பிடித்தது..பகிர்வுக்கு நன்றி.
http://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html
Post a Comment