இன்னுமும் தமிழில் அருவாள், மண்வாசனை, அம்மா/அப்ப/தங்கை பாசம் போன்ற படங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காட்டும் படமே எடுக்கபடுகிறது மற்றும் ஓட்டவும் படுகிறது. அதை மீறி படங்கள் எடுத்தால் கஷ்டம் தான். மக்களின் ரசனை அவ்வளவு தானா? அல்லது ரசனையை வெளிபடுத்த மறுக்க படுகிறதா அல்லது தமிழ் என்ற உணர்வின் காரணமா என்ற கேள்வி இன்னும் தமிழ் திரைஉலகத்தில் இருக்கிறது. இதை அனைத்தையும் உடைத்து விட்டு, மக்களின் வேறு ரசனையை தட்டி எழுப்பிய படம் என்று இத்திரைப்படத்தை கூறலாம். வெறுமனே ஜாலியான திரைக்கதை மற்றும் இளசுகளை கட்டி போடும் காட்சி மற்றும் வசன அமைப்புகள் வைத்து கொண்டு இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படம் என்றால் இது தான். அனைத்து காட்சிகளும் மற்றும் வசனங்களும் தமிழ் நாட்டை பொறுத்த வரை கெட்ட காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் என்றால் யூகித்து கொள்ளுங்கள்.
இம்ரான்கான் ஒரு செய்திமைப்பாளர். அவரின் காதலி விமானத்தில் பணிபுரியும் ஒரு நங்கை. இம்ரான் உடன் குன்னால் மற்றும் அருப் தங்கி இருப்பார்கள். கள்ள கடத்தல் செய்யும் கும்பல், காதலி வழியாக ஒரு பார்சலை கொண்டு வந்து இருப்பார்கள். அவள் அந்த பார்சலை அனுப்புவதற்கு இம்ரானை கேட்க, இம்ரான் குன்னலை கேட்க, குன்னால் அருப்பை கேட்க, கடைசியில் பார்சல் மாறி சென்று விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காதல் என்ன ஆனது என்று எல்லா கேள்விகளுக்கும் முடிவில் பதில்.
இம்ரான் உடன் வேலை பார்க்கும் பூர்ணவின் மறுவாழ்க்கை, குன்னலின் குறுக்கு புத்தி, அருப்பின் காதல், கள்ள கடத்தல் கும்பல் என்று பல கிளைகள். இத்தனையும் இரண்டு மணி நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் அதுவும் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுடன். உச்ச கட்டமாக, குன்னால் தன்னுடைய வீட்டு சொந்தகாரரை மிரட்ட, அவர் போட்டோ எடுக்க செல்லும் இடமும், காசு கொடுத்த பின் கை வைக்கும் இடமும், முடியல. அதே போல் இம்ரான் தன் காதலி உடன் இருக்கும் காட்சிகள் படத்தின் வரம்புக்கு உச்சகட்டம். அருப் தன் காதலில்லை பற்றி குறை சொல்வதாக காட்டும் காட்சிகள் வசனத்தின் வரம்பு. இதற்கு மேல் கெட்ட வார்த்தைகளுடன் எழுத முடியாது. இதே போன்ற காட்சிகளை தமிழில் கற்பனை செய்ய முடியவில்லை.
வறச்சி இல்லாமல் கண்கள் முழுவதும் பல வண்ணங்கள். காரணம் அதற்கு காரணம் ஒளிபதிவாளர் ஜசோன். அருமையான காட்சி அமைப்புகள். பாடல்கள் தான் ஏனோ மனதில் நிற்க மறுக்கிறது. அதே போல் பின்னணி இசை சுமார் ரகம் தான். மொத்தத்தில் டெல்லி பெல்லி வயது வந்தவர்களுக்கு ஒரு அருமையான படம். தமிழில் இதே படத்தை எடுத்தால், கண்டிப்பாக மெகா ஹிட் தான்.
2 comments:
தமிழில் எடுத்தால் வசனம் இருக்காது., வெறும் பீப் சவுண்ட் தான் இருக்கும்.
சிறப்பான விமர்சனம்..ஹிந்தி படங்களின் மீது எனக்கு அதிகமான விருப்பங்கள் உண்டு..ஆனால், பார்ப்பது குறைவு..இந்த படத்தை பார்த்து விடுகிறேன்.நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்
Post a Comment