நான் முதன் முதலில் அமெரிக்கா சென்று இறங்கிய போது, என்னை விமான நிலையத்தில் வந்து அழைத்து கொண்டு, அவர் வீட்டிற்கு கூட்டி சென்று, டாலர் தேசத்தில் முதல் நாளே இந்திய உணவு கிடைக்க செய்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு மேல், அனைவரும் சேர்ந்து தான் இருந்தோம். தான் உண்டு, தன் வேலை உண்டு என இல்லாமல், அனைத்து உதவிகளையும் செய்து, டாலர் தேசத்தை புரிந்து கொள்ள உதவியவர். என்ன தான் பல பிரச்சனைகள் அவருக்கு இருந்தாலும், அவரின் பொறுமை மற்றும் மன வலிமையை பார்த்து அசந்து போனது உண்டு. இவரின் மூலமாக எனக்கு நான் இருந்த இடத்தில் பல தமிழ் மக்களின் பழக்கம் ஏற்பட்டது. அதனால் தான் இவர் சென்ற பிறகும், ஓரளவு சமாளிக்கும் நிலைமை எனக்கு கிடைத்தது. ஒரு வருட பழக்கமே (இரயில் சிநேகம்) என்றாலும், இந்த மாதிரியான மனிதரை பார்ப்பது அபூர்வம். நான் பழகின சிநேகங்களை, தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே வைத்து இருக்கும் பழக்கம் இவருக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment