நாம்
வாழ்க்கையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை படம் எடுத்தால், எப்படி இருக்கும் என்பதை
இப்படத்தை காண்பதின் மூலமாக அறியலாம். எந்த வித ஆர்பாட்டம் இல்லாமல், தினசரி வாழ்க்கை
எப்படி இருக்குமே, அதே நிலையில் திரைக்கதை அமைத்தது தான் இப்படத்தின் வெற்றி.
திருமணமே
வேண்டாம் என்று இருந்த விஜய் சேதுபதிக்கு, தொழிலிலும் பல பிரச்சனை. ஓர் ஆண்டிற்கு முன் அறிமுகமாகி காயத்ரி
உடன் காதல். எப்போதும் போல் காதலில் பிரச்சனை. எல்லாவற்றையும் சமாளித்து திருமணத்திற்கு
இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போகிறார்.
ஏதோ ஒரு நிலையில் கிழே விழுந்து தலையில் அடி பட, கடந்த ஒரு ஆண்டின் நிகழ்ந்த அனைத்து
விஷயங்களும் மறந்து போகிறது. அதே நேரத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் அப்போது நடந்த
நிகழ்வுகளும் மறந்து போகிறது. சொன்ன ஒரே வாக்கியத்தை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் வருகிறது.
·
நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப்
போனேன்.
அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம்
என்னாச்சி? என்று கேட்டபடியே "பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? மெடுலாவில அடிபட்டிருக்கும்
அதான். இப்ப ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்"
இந்த
சூழ்நிலையில் நண்பர்கள் ஆன ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் மூன்று பேரும் எப்படியாவது
திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து, சேதுபதியை அவருடைய வீட்டிற்கு
கூட்டி செல்கின்றனர். திருமணம் நடந்ததா இல்லையா? சேதுபதி குணமணர இல்லையா? என்பதே மீதி
கதை. சொல்ல போனால் இப்படத்தின் நாயகர்கள் மொத்தம் நான்கு
பேர் இவர்களையும் சேர்த்து. ஒவ்வொரு இடத்திலும் சேதுபதியை
விட, இந்த மூன்று பேரும் தான் இக்கதையின் தூண்கள். மேல
சொன்ன வாக்கியத்தை தவிர இன்னும் இரண்டு வாக்கியங்கள் மறுபடி மறுபடியும் வருகிறது.
·
அப்ப ... யாருடா இந்த பொண்ணு...பேய் மாதிரி இருக்கு makeup போட்டுகிட்டு....
·
நான் சொன்ன,நீ கேப்பிய கேக்கபாட்டிய - இந்த டைலாக்கின்
அடிப்படை என்னவென்று பார்த்தால், நமக்கு செம டென்ஷன் ஆயிடும்.
இதை தவிர ரொம்ப சீன் போட்டு சொல்லும் பக்சின் டயலாக்:
·
காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும்
மறக்காது!..
ஆனால் இந்த டயலாக் வீணாகி போகும் நிலையில்,கட்டும் இடம் அருமை.
மிக
சீரியஸ் ஆனா கதையை, நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் கொடுத்த இயக்குனர் பாலாஜி
தரணிதரணுக்கு என் வாழ்த்துக்கள். தமிழ் திரைவுலகில் இப்படம் முக்கிய இடத்தை
பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.