அர்கன்சாஸ், இயற்கையின் மாநிலம் என்ற இடத்தில் இருப்பதால், பெருநகரத்தில் அல்லது வெளி மாநிலத்தில் இருந்து மனஅமைதியை தேடி வரும் அனைத்து மக்களுக்கும் தேவையான மலைகள் , காடுகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என்று அனைத்தும் எனக்கு மிகஅருகில். டெவில் டென் என்ற மாநில பூங்கா என்று எங்களுக்கு அருகில் இருப்பத்தை அறிந்து, பயணத்தை ஆரம்பித்தோம்.
அந்த பூங்காவில் உள்ள அரசாங்க அலுவலம் போய் சேருவதற்கு காட்டு பாதையில் இருபது நிமிடம் காரில் பயணம் செய்ய வேண்டிருந்தது. செல்லும் வலி எங்கும் அடர்ந்த காடுகள். தொலைபேசி தொடர்பு சில நிமிடங்களிலே தொடர்பு காணாமல் போனது. அன்று நல்ல வெயில் இருந்தாலும் காட்டு பகுதியில் சிறு தூரம் சென்ற உடன் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. காரின் கண்ணாடி ஜன்னல்களை திறக்கலாம் சென்றால், பூச்சிகள் வந்து விடும் என்ற பயம் காரணமாக மூச்.
ஒரு வழியாக அலுவகத்தை அடைந்து பார்த்தல், காரை நிறுத்த இடம் இல்லை. அவ்வளவு கூட்டம். வெளியில் வந்து பார்த்தல் அந்த இடம் முழுவதும் சிறுவர்கள் கூட்டம். போச்சுட சின்ன பசங்க இடத்திற்கு வந்துட்டோம் போல என்று நினைத்து கொண்டே, உள்ளே போய் விசாரித்து விட்டு சுற்றி பார்க்க கிளம்பினோம். எங்கு போனாலும் சிறுவர்கள் கூட்டம், அவர்களின் பெற்றோர்கள் அதுவும் அந்த அடர்ந்த காட்டில். ஒன்றும் இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பலாம் என்ற முடிவின் போது, மலை மேல் செல்வதற்கு படி போன்ற அமைப்பு உடைய கற்களை கண்டோம். மேலும் அந்த சில மக்கள் மலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தனர். அங்கு என்னவென்று விசாரித்ததில், மலையின் மேல் பல குகைகள் இருப்பதாகவும் அதை பார்க்க மலை ஏற வேண்டும் என்றும், ஒவ்வொரு மலை ஏறும் வழியும் இரண்டு மைல் முதல் பதினைந்து மைல் வரை இருப்பதாவும், நம்முடைய உடல் நிலைமையை பொறுத்து செல்லலாம் என்றும் கூறி விட்டனர்.
முதல் முறையாக இங்கு வருவதால், அருகில் உள்ள குகைக்கு மலை ஏறி சென்று வரலாம் என்று புறப்பட்டோம். முதல் குகையை பார்க்கவே குறைந்தது இரண்டு மணிநேரமாவது மலை ஏறவேண்டும். மலை ஏறி சில காலம் ஆகி விட்டதால் முதல் பத்து நிமிடத்தியிலே கண்ணை கட்ட ஆரம்பித்து விட்டது. வந்தாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டே முடியாமல் மேலும் ஏற ஆரம்பித்தோம். ஏறும் பாதையில் மரங்களில் சிவப்பு நிற வண்ணம் காண முடிந்தது. சிவப்பு நிறம் நம்மை அழகாக வழிநடத்தி சென்றது. குகையில் வவ்வால்கள் வந்து தங்க ஆரம்பித்து விட்டதாலும், புது வகையான பூச்சிகள் சிலவற்றை சில பேர் குகையில் கண்டதாலும், குகைக்கு உள்ளே செல்லும் வழி அடைத்து விட்டதாகவும் வெளியில் இருந்து பார்க்க முடியும் என்று பலகை ஒன்று காண முடிந்தது. மலை ஏறும் போது, சில கற்களுக்கு அடியில் பனிக் கட்டிகளை காண முடிந்தது.
நீண்ட நாளைக்கு பிறகு மலை ஏறுதல் என்பதால், அப்ப அப்ப முடியல. ஆனால் நல்ல இயற்கை கண்ட மனநிறைவு மற்றும் வித்தியாசமான அனுபவம் தான்.
2 comments:
அழகான அனுபவம், அழகான இடம், அழகான பதிவு....
BEST..
Post a Comment