Saturday, May 22, 2010

மியாமி - 3

சனிக்கிழமை காலை: வட அமெரிக்காவின் ஒரு எல்லையான (காது வழி வந்த விஷயம்) "Key West " என்ற  இடத்திற்கு பயணம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகம் என்பதால், அங்கு செல்லும் பாதி வழியில் உள்ள "Key Largo" என்ற இடத்திற்கு புறப்பட்டோம். இரண்டு மணி நேர பயணம் என்றாலும், ஒரு ஐந்து மைல் தூரத்திற்கு மட்டும் அனுபவித்து செல்ல பட வேண்டிய இடம். சாலையின் இரண்டு புறங்களிலும் கடல், நடு சாலையில் பயணம்.  நாங்கள் சென்ற இடத்திற்கு பிறகு தான், நீச்சல் தெரியாமல் மியாமி வந்தால் எவ்வளவு மிக பெரிய தவறு என்று தெரிந்தது.

கப்பலில் கூட்டி சென்று நடுக்கடலில் இறக்கி விடுகின்றனர்
கடலின் அடியில் உள்ள பலவகையான செடிகள் மற்றும் சின்ன மீன்களை பார்க்கலாம்
"key Largo" முடிந்தவுடன் மீண்டும் மியாமியின் பிரபலமான "Haulover Beach". அங்கு மாலை பொழுது இனிதே கழிந்தது.
Haulover Beach
 ஞாயிறுகிழமை அதிகாலையிலே மீண்டும் ஒர்லாண்டோக்கு பயணம் தொடங்கியது. அமெரிக்காவின் பெரிய மாவட்டங்களில் இந்திய மக்கள் அதுவும் இந்து மதத்தின் சேர்ந்த மக்கள் அதிகம் இருந்தால் ஒரு குழு அமைத்து, அக்குழு நடத்துகின்ற கோவில் கண்டிப்பாக இருக்கும். இந்நாட்டில் முதல் முறையாக நம் கோவில், அதுவும் இந்த பயணத்தில் அமைந்தது ஒரு மனதிருப்தி. நான்கு மணி நேரத்திற்கு பிறகு நேராக கோவிலுக்கு சென்றோம். அப்போது மணி சரியாக மதியம் 12. அமைதியான இடத்தில் அழகான பெரிய கோவில் என்று நினைத்து உள்ளே நுழையும் போது மதிய பூஜை தொடங்க சரியாக இருந்தது. தமிழ், தெலுகுமற்றும் இந்தி என்று அனைத்து மொழி மக்களையும் காண முடிந்தது. அக்கூட்டத்தில் மேல் தமிழ் மக்கள் (பூஜை செய்யும் ஐயர் உட்பட).
 

துர்கா, விநாயகர், திருப்பதி வெங்கடேஸ்வர உடன் லக்ஷ்மி மற்றும் ஆண்டாள், ராமர் சீதா, கிருஷ்ணர், காசி விஸ்வநாதர், நவகிரங்கள் என்று மூலவர்கள் இருந்தன. அதில் காசி விஸ்வநாதர், நவகிரங்கள் மற்றும்  விநாயகர் மட்டும் நம்மூர் மாதிரியும், மற்றவை பளங்கி கற்களிலும் அமைத்து இருந்தனர்.



பூஜை முடிந்ததும் அக்கோவிலில் இந்து முறை படி அன்னதான இடத்தில்  உணவு பரிமாறப் பட்டது. நம்ம வீட்டில் சாப்பிட்ட மன திருப்தி. அருமையான அன்னதானம். அங்கேயே தமிழ் மக்கள் நடத்துகின்ற உணவகமும் அவ்விடத்தில் இருந்தது. உணவு அருந்தும் போது அவ்வூரில் உள்ள சின்ன சின்ன தமிழ் குழந்தைகள் ஆங்கிலம் கலந்த தமிழை பார்க்கும் போது, சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்நாட்டில் இவ்வளவு தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்கள் என்ற செய்கின்றனர் என்பது மிக பெரிய கேள்வி.  ஒர்லாண்டோ சென்றால் மறக்காமல் பார்க்க வேண்டிய கோவில் மற்றும் இந்த உணவகம்.

இந்த மியாமி பயணத்தில் முக்கிய விஷயம் என்று கூறி கொண்டால் கப்பல் பயணமும், இந்த கோவிலும் தான். மறக்க முடிய அனுபவங்கள்.

பயணம் முடிந்தது.

No comments: