நான் எப்போதும் இரண்டு நாட்களில் பயணம்/சுற்றுலா என்று பழகிய எனக்கு, இதே போல் இங்கும் பயணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம் பொய் ஆகி போனது உண்மை. கடைசியில் மியாமி பயணம் மூன்று நாட்கள் என்று முடிவாகி வியாழக்கிழமை புறப்பட்டோம். அங்கூர் மற்றும் மானஸ் என்ற இரண்டு நண்பர்கள் உடன் வியாழக்கிழமை மாலை பொழுதில் 7 மணிக்கு கிளம்பினோம். Orlandoவில் இரவு 10 மணிக்கு அடைந்து, மியாமிக்கு பயணம் ஆரம்பானது. எதுவுமே சாப்பிட முடியாமல் ஒர்லண்டோவில் பார்த்து கொள்ளலாம் என்று ஐடியாவிற்கு சரியான முடிவு கிடைத்தது. செல்லும் வழியில் ஒரு உணவகமும் இல்லை. என்னடா வழி தெரியுமா என்று கேட்டால் பதில் இல்லை என்று வரும். அமெரிக்கா தான் தொழில் நூட்ப நாடே. அதனால் தொலை தொடர்பு சாதனத்தை கொண்டு அது காட்டும் வழியில் பயணம் தொடங்கியது.
நமக்கு தான் இரவு 10 மணிக்கே தூங்கும் வந்து விடுமே, ஒருவன் கார் ஓட்டுகிறான் என்று நாமும் தூங்காமல் அவனுடன் பேசிக் கொண்டே இரவு பயணம் தொடர்ந்தது. நாங்கள் தங்க வேண்டிய இடத்தை தேடி கொண்டு அடைய இரவு 3:30 மணி ஆகி விட்டது. காலையில் எழுந்து வெளியில் பார்த்தல் மியாமியின் தெற்கு கடற்கரை. என்ன அழகு... அமெரிக்கா மக்களான வெள்ளை, கருப்பு மற்றும் மெக்சிகோ இனத்தவர், வேறு சில நாட்டு மக்கள் என கடற்கரையில் அவர்களின் கலாச்சாரப்படி பொழுதை கழித்து கொண்டு இருந்ததனர்.
வெள்ளிகிழமை முழுவதும் உள்ளூர் இடத்தை பார்த்து விட வேண்டும் என்றும், சனிக்கிழமை முழுவதும் கடற்கரை ரசிக்க வேண்டும் முடிவாகி, முதலில் விலங்குகளின் தீவு என்று அழைக்க படும் இடத்திற்கு சென்றோம்.
பயணம் தொடரும்
No comments:
Post a Comment