Wednesday, May 26, 2010

சமீபத்தில் ரசித்தது - கதைகளை பேசும்


சமீபலகமாக ஒரு பாடலின் முதல் ஒரு வரி மட்டும் எனக்கு தெரியாமலே பாடி கொண்டு இருந்த தான், நேற்று அந்த பாடல் எது என்ற ஆசை அதிகமாகி ரொம்ப கஷ்டப்பட்டு பாட்டை கண்டு பிடித்தால், சமீபத்தில் என்னை பாதித்த படமான அங்காடி தெருவில் இருந்து 






கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
(
கதைகளை)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(
கதைகளை)

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
(
கதைகளை)

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே
(
கதைகளை)

Tuesday, May 25, 2010

புன்னகை







தீட்டிய வார்த்தைகளும்,

பயணிக்கும் அழுக்கு நிறைந்த தொடர் வண்டியும்,


சென்னை வெயிலும்,


என்னை பாதிக்க வில்லை


உந்தன் புன்னகையை தவிர!

Monday, May 24, 2010

திருமண வாழ்த்துகள் - ரெங்கராம்

எனது தொழில் நூட்ப கல்லூரி நண்பர் திரு. ரெங்கராம் அவர்களுக்கு இன்று 24 ம் தேதி மதுரையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

Sunday, May 23, 2010

விமர்சனம்



சொல்லி கொள்ளும் படி இல்லை என்றாலும், இயக்குனர் சிம்பு தேவனை பாராட்டாமல் இருக்கு முடியாது. 38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் கவ்பாய் படம். ஒவ்வொரு இடமும், வீடும், உடைகளும், வசனங்களும் மற்றும் அனைத்து விஷயங்களும் மனதில் நிற்கும் கதையை தவிர. அணுஆயத ஒப்பந்தம், சுய உரிமை, அடிப்படை கல்வி என்று முற்போக்கு சிந்தனையை வைத்து, அதற்கு ஏற்றாற்போல் வசனங்களும் நச். அதே போல் நகைச்சுவை பல இடத்தில் மொக்கை போல் இருந்தாலும், சில இடங்களில் புன்னகை வருகிறது.

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - ஒருமுறை பார்க்க வேண்டிய படம் தான்

திருமண வாழ்த்துகள் - கதிர்வேலு

எனது அலுவலக நண்பர் திரு. கதிர்வேலு அவர்களுக்கு இன்று 23ம் தேதி கோவையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

Saturday, May 22, 2010

மியாமி - 3

சனிக்கிழமை காலை: வட அமெரிக்காவின் ஒரு எல்லையான (காது வழி வந்த விஷயம்) "Key West " என்ற  இடத்திற்கு பயணம் நான்கு மணி நேரத்திற்கும் அதிகம் என்பதால், அங்கு செல்லும் பாதி வழியில் உள்ள "Key Largo" என்ற இடத்திற்கு புறப்பட்டோம். இரண்டு மணி நேர பயணம் என்றாலும், ஒரு ஐந்து மைல் தூரத்திற்கு மட்டும் அனுபவித்து செல்ல பட வேண்டிய இடம். சாலையின் இரண்டு புறங்களிலும் கடல், நடு சாலையில் பயணம்.  நாங்கள் சென்ற இடத்திற்கு பிறகு தான், நீச்சல் தெரியாமல் மியாமி வந்தால் எவ்வளவு மிக பெரிய தவறு என்று தெரிந்தது.

கப்பலில் கூட்டி சென்று நடுக்கடலில் இறக்கி விடுகின்றனர்
கடலின் அடியில் உள்ள பலவகையான செடிகள் மற்றும் சின்ன மீன்களை பார்க்கலாம்
"key Largo" முடிந்தவுடன் மீண்டும் மியாமியின் பிரபலமான "Haulover Beach". அங்கு மாலை பொழுது இனிதே கழிந்தது.
Haulover Beach
 ஞாயிறுகிழமை அதிகாலையிலே மீண்டும் ஒர்லாண்டோக்கு பயணம் தொடங்கியது. அமெரிக்காவின் பெரிய மாவட்டங்களில் இந்திய மக்கள் அதுவும் இந்து மதத்தின் சேர்ந்த மக்கள் அதிகம் இருந்தால் ஒரு குழு அமைத்து, அக்குழு நடத்துகின்ற கோவில் கண்டிப்பாக இருக்கும். இந்நாட்டில் முதல் முறையாக நம் கோவில், அதுவும் இந்த பயணத்தில் அமைந்தது ஒரு மனதிருப்தி. நான்கு மணி நேரத்திற்கு பிறகு நேராக கோவிலுக்கு சென்றோம். அப்போது மணி சரியாக மதியம் 12. அமைதியான இடத்தில் அழகான பெரிய கோவில் என்று நினைத்து உள்ளே நுழையும் போது மதிய பூஜை தொடங்க சரியாக இருந்தது. தமிழ், தெலுகுமற்றும் இந்தி என்று அனைத்து மொழி மக்களையும் காண முடிந்தது. அக்கூட்டத்தில் மேல் தமிழ் மக்கள் (பூஜை செய்யும் ஐயர் உட்பட).
 

துர்கா, விநாயகர், திருப்பதி வெங்கடேஸ்வர உடன் லக்ஷ்மி மற்றும் ஆண்டாள், ராமர் சீதா, கிருஷ்ணர், காசி விஸ்வநாதர், நவகிரங்கள் என்று மூலவர்கள் இருந்தன. அதில் காசி விஸ்வநாதர், நவகிரங்கள் மற்றும்  விநாயகர் மட்டும் நம்மூர் மாதிரியும், மற்றவை பளங்கி கற்களிலும் அமைத்து இருந்தனர்.



பூஜை முடிந்ததும் அக்கோவிலில் இந்து முறை படி அன்னதான இடத்தில்  உணவு பரிமாறப் பட்டது. நம்ம வீட்டில் சாப்பிட்ட மன திருப்தி. அருமையான அன்னதானம். அங்கேயே தமிழ் மக்கள் நடத்துகின்ற உணவகமும் அவ்விடத்தில் இருந்தது. உணவு அருந்தும் போது அவ்வூரில் உள்ள சின்ன சின்ன தமிழ் குழந்தைகள் ஆங்கிலம் கலந்த தமிழை பார்க்கும் போது, சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்நாட்டில் இவ்வளவு தமிழ் மக்கள் மற்றும் இந்திய மக்கள் என்ற செய்கின்றனர் என்பது மிக பெரிய கேள்வி.  ஒர்லாண்டோ சென்றால் மறக்காமல் பார்க்க வேண்டிய கோவில் மற்றும் இந்த உணவகம்.

இந்த மியாமி பயணத்தில் முக்கிய விஷயம் என்று கூறி கொண்டால் கப்பல் பயணமும், இந்த கோவிலும் தான். மறக்க முடிய அனுபவங்கள்.

பயணம் முடிந்தது.

Friday, May 21, 2010

திருமண வாழ்த்துகள் - விஜய் ஆல்பர்ட்

எனது நண்பர் திரு. விஜய் ஆல்பர்ட் அவர்களுக்கு நேற்று 19ம் தேதி துறையூரில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

Monday, May 17, 2010

மியாமி - 2

விலங்குகளின் தீவை அடைந்த போது, கூட்டம் என்று எதுவும் இல்லை. என்னடா இது! சுற்றுலா தளம் தானே என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றால் தான் தெரிகிறது, அது முழுக்க சிறுவர்களுக்கான இடம் என்று தெரிகிறது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒவ்வொரு பறவைகளாக, விலங்குகளாக பார்க்க ஆரம்பித்தோம்.

அடுத்தது மியாமியின் மீன்களின் அரும்காட்சியகம். நாம் இது நாள் வரை எத்தனை படத்தில் பார்த்து இருந்த டால்பின் என்ற மீனின் சாகசங்கள் கண் முன்னே. சுமார் ஒரு மணி நேரம். வித்தியாசமான கண் காட்சி. இதே சில காட்சிகள் உங்களுக்காக






மாலைப் பொழுதில் செல்ல முடிவு எடுத்து இருந்த இடத்திற்கு நேரம் இருந்ததால், அதற்கு நடுவில் சென்ற இடம் மிக பிரபலமான மற்றும் அரசாங்கமே அனுமதி கொடுத்து இருக்கின்ற சூதாட்ட விடுதி. உள்ளே போய் பார்த்து தலை சுற்றியது தான் மிச்சம். ஒன்றும் விளையாட தெரியவில்லை. நண்பர் அங்கூர் தான் பணத்தை இழந்தது தான் தெரியும். உடனே அங்கிருந்து மியாமியின் முக்கிய தலமான அதுவும் மியாமியின் தீவுகளை சுற்றி காட்டும் கப்பல் பயணம்.

அவ்விடம் மியாமியின் மைய பகுதியில் இருப்பதாலும், துறைமுகத்தில் இருப்பதாலும்  மேற்கு ஆசிய மக்கள், அமெரிக்காவின் வெள்ளை, கருப்பு இனத்தவர், மற்றும் மெக்சிகன் மக்கள் என்று களைகட்டி இருந்தது. அனைத்து வகையான அம்சம் கொண்ட அழகு மிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் என்று அவ்விடத்தில் இருந்தாலும், அதே போல் அதற்கு எதிர் மறையான மக்களையும் அங்கே காணமுடிந்தது. ஆனாலும் அங்கு இருந்த அனைவரின் உடை மற்றும் நடையில் வித்தியாசம் இல்லை. அனைவரும் பணகார கலை உடையவர்கள் என்று நிதர்சனம்.

கப்பல் பயணம் ஆரம்பிக்கும் முன்னர், அங்கே கறுப்பின மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. இசை கேட்டாலே தன்னால் ஆட்டம் வரும் என்பது இங்கே காண முடிந்தது. இதோ அந்த இசை நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் 



பயணம் தொடரும்

Sunday, May 16, 2010

மியாமி - 1

என்னடா, வந்து இவ்வளவு நாட்கள் ஆகி விட்டதே ஊர சுத்தி பக்க வேண்டமா என்று நினைப்பு வந்த போதே தானாக வந்து அமைந்து தான் இந்த மியாமி. அமெரிக்காவின் கோவா என்று செல்லமாக இந்தியர்களால் அழைக்கப்படும் இடம்.  நான் அமெரிக்காவில் தான் இருக்கின்றேன் என்று கூறி கொண்டாலும், மியாமி சென்று பார்த்த போது, என் இடம் ஒரு குக்கிராமம் என்று தெரிந்தது. 



நான் எப்போதும் இரண்டு நாட்களில் பயணம்/சுற்றுலா என்று பழகிய எனக்கு, இதே போல் இங்கும் பயணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம் பொய் ஆகி போனது உண்மை. கடைசியில் மியாமி பயணம் மூன்று நாட்கள் என்று முடிவாகி வியாழக்கிழமை புறப்பட்டோம். அங்கூர் மற்றும் மானஸ் என்ற இரண்டு நண்பர்கள் உடன்  வியாழக்கிழமை மாலை பொழுதில் 7 மணிக்கு கிளம்பினோம். Orlandoவில் இரவு 10 மணிக்கு அடைந்து, மியாமிக்கு பயணம் ஆரம்பானது. எதுவுமே சாப்பிட முடியாமல் ஒர்லண்டோவில் பார்த்து கொள்ளலாம் என்று ஐடியாவிற்கு சரியான முடிவு கிடைத்தது. செல்லும் வழியில் ஒரு உணவகமும் இல்லை. என்னடா வழி தெரியுமா என்று கேட்டால் பதில் இல்லை என்று வரும். அமெரிக்கா தான் தொழில் நூட்ப நாடே. அதனால் தொலை தொடர்பு சாதனத்தை கொண்டு அது காட்டும் வழியில் பயணம் தொடங்கியது.


நமக்கு தான் இரவு 10 மணிக்கே தூங்கும் வந்து விடுமே, ஒருவன் கார் ஓட்டுகிறான் என்று நாமும் தூங்காமல் அவனுடன் பேசிக் கொண்டே இரவு பயணம் தொடர்ந்தது. நாங்கள் தங்க வேண்டிய இடத்தை தேடி கொண்டு அடைய இரவு 3:30 மணி ஆகி விட்டது. காலையில் எழுந்து வெளியில் பார்த்தல் மியாமியின் தெற்கு கடற்கரை. என்ன அழகு... அமெரிக்கா மக்களான வெள்ளை, கருப்பு மற்றும் மெக்சிகோ இனத்தவர், வேறு சில நாட்டு மக்கள் என  கடற்கரையில் அவர்களின் கலாச்சாரப்படி பொழுதை கழித்து கொண்டு இருந்ததனர். 


வெள்ளிகிழமை முழுவதும் உள்ளூர் இடத்தை பார்த்து விட வேண்டும் என்றும், சனிக்கிழமை முழுவதும் கடற்கரை ரசிக்க வேண்டும் முடிவாகி, முதலில் விலங்குகளின் தீவு என்று அழைக்க படும் இடத்திற்கு சென்றோம்.

பயணம் தொடரும்

விமர்…




Clash of the titan – 2010 - மொக்கைபடம்
Robin Hood – 2010 - சொல்ல விஷயம் இல்லாத படம்


நடு இரவில் – 1966 - இசையில், ஒளிப்பதிவில் மிரட்டிய படம்

Thursday, May 06, 2010

கவலைகள்


என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமை இருந்தாலும், சின்ன சின்ன கவலைகள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது... என் மனதில் கவலைகள் என்று நினைத்த உடன் தோன்றிய எழுத்துக்கள் இங்கே.
  • மாத மாதம் மதுரைக்கு போக முடியாமல் இருப்பது
  • சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மதுரை சித்திரை விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நெல்லை மற்றும் பாண்டியன் விரைவு தொடர் வண்டியின் பயணத்தை இழந்தது
  • சென்னையில் இருந்து கொண்டே உள்ளூரில் நன்றாக சுற்றி கொண்டு இருந்த நான், அமெரிக்காவில் அதுவும் ஒரு மூலையில் அடைப்பட்டு இருப்பது
  • இந்த ஆண்டு பல நண்பர்கள்/உறவினர்கள் கல்யாணம் இருந்தும், அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நம்மூர் இட்லி, தோசை, வடை மற்றும் சாம்பாரை பற்றி நினைத்து கொண்டு இருப்பது
  • எப்போதும் அலுவலக வேலை நினைப்பாலே இருப்பது
  • முக்கியமாக நாள்முழுவதும் கை கணிப்பொறியில் போவதும்
  • பதிவுகளை படிக்கவும் முடியாமல், எழுதவும் முடியாமல் போனது
  • மதுரையில் மற்றும் சென்னையில் இருக்கும் என்னுடைய சொந்த வேலைகளை கூட செய்ய முடியாமல் போனது.


மாதத்திற்கு கண்டிப்பாக நான்கு பதிவுகளையாவது போட்டு தீர வேண்டும் என்று ஆசை. நிறைவேறுமா என்ற கேள்வி உடன், கண்கள் வானத்தை நோக்கி...