சில நேரங்களில் அனைவருக்கும், ஒரு மாற்றம் தேவைபடுகிறது. மாற்றத்தை சில சமயம் நாமே தேடி கொள்கிறோம். சில பேருக்கு தானாக மற்றவர்களால் கட்டாயமாக தர படுகிறது. ஆனால் அந்த மாற்றத்தை தேர்ந்து எடுத்து விடுவதற்குள் பல கஷ்டங்களை சந்திக்க நேருகிறது. ஆனால் அந்த கஷ்டங்கள் எல்லாம் நமக்கு தெரிய காரணம், நாம் இருந்த வசதியான மற்றும் சூழல் தான். அதை எல்லாம் மீறி, புதிதாக கிடைத்த மாற்றத்தில் கூட, பழைய சூழலை தான் எதிர்பார்க்கிறோம். அங்கும் ஏமாற்றம் தான். சில பேர் மட்டுமே, இந்த ஏமாற்றத்தை சின்ன விஷயமாக எடுத்து கொள்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, எனக்கும் அந்த ருசியை பார்க்கும் தருணம் கிடைத்தது. வரும் நாட்களில் மட்டுமே, அந்த ருசி இனிக்கிறதா அல்லது கசக்கிறதா என்னால் சொல்ல முடியும். இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே
Sunday, March 04, 2012
Monday, February 20, 2012
எஸ். என். லட்சுமி - அஞ்சலி
Thursday, February 09, 2012
கிருஷ்ணா குமார் - திருமண வாழ்த்துக்கள்
நான் முதன் முதலில் அமெரிக்கா சென்று இறங்கிய போது, என்னை விமான நிலையத்தில் வந்து அழைத்து கொண்டு, அவர் வீட்டிற்கு கூட்டி சென்று, டாலர் தேசத்தில் முதல் நாளே இந்திய உணவு கிடைக்க செய்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு மேல், அனைவரும் சேர்ந்து தான் இருந்தோம். தான் உண்டு, தன் வேலை உண்டு என இல்லாமல், அனைத்து உதவிகளையும் செய்து, டாலர் தேசத்தை புரிந்து கொள்ள உதவியவர். என்ன தான் பல பிரச்சனைகள் அவருக்கு இருந்தாலும், அவரின் பொறுமை மற்றும் மன வலிமையை பார்த்து அசந்து போனது உண்டு. இவரின் மூலமாக எனக்கு நான் இருந்த இடத்தில் பல தமிழ் மக்களின் பழக்கம் ஏற்பட்டது. அதனால் தான் இவர் சென்ற பிறகும், ஓரளவு சமாளிக்கும் நிலைமை எனக்கு கிடைத்தது. ஒரு வருட பழக்கமே (இரயில் சிநேகம்) என்றாலும், இந்த மாதிரியான மனிதரை பார்ப்பது அபூர்வம். நான் பழகின சிநேகங்களை, தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே வைத்து இருக்கும் பழக்கம் இவருக்கும் பொருந்தும்.
Labels:
கோயமுத்தூர்,
திருமணம்,
வாழ்த்துகள்,
வாழ்த்துக்கள்
Wednesday, February 08, 2012
டெல்லி பெல்லி - திரைவிமர்சனம் – 2011 – Delhi Belly
இன்னுமும் தமிழில் அருவாள், மண்வாசனை, அம்மா/அப்ப/தங்கை பாசம் போன்ற படங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காட்டும் படமே எடுக்கபடுகிறது மற்றும் ஓட்டவும் படுகிறது. அதை மீறி படங்கள் எடுத்தால் கஷ்டம் தான். மக்களின் ரசனை அவ்வளவு தானா? அல்லது ரசனையை வெளிபடுத்த மறுக்க படுகிறதா அல்லது தமிழ் என்ற உணர்வின் காரணமா என்ற கேள்வி இன்னும் தமிழ் திரைஉலகத்தில் இருக்கிறது. இதை அனைத்தையும் உடைத்து விட்டு, மக்களின் வேறு ரசனையை தட்டி எழுப்பிய படம் என்று இத்திரைப்படத்தை கூறலாம். வெறுமனே ஜாலியான திரைக்கதை மற்றும் இளசுகளை கட்டி போடும் காட்சி மற்றும் வசன அமைப்புகள் வைத்து கொண்டு இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படம் என்றால் இது தான். அனைத்து காட்சிகளும் மற்றும் வசனங்களும் தமிழ் நாட்டை பொறுத்த வரை கெட்ட காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் என்றால் யூகித்து கொள்ளுங்கள்.
இம்ரான்கான் ஒரு செய்திமைப்பாளர். அவரின் காதலி விமானத்தில் பணிபுரியும் ஒரு நங்கை. இம்ரான் உடன் குன்னால் மற்றும் அருப் தங்கி இருப்பார்கள். கள்ள கடத்தல் செய்யும் கும்பல், காதலி வழியாக ஒரு பார்சலை கொண்டு வந்து இருப்பார்கள். அவள் அந்த பார்சலை அனுப்புவதற்கு இம்ரானை கேட்க, இம்ரான் குன்னலை கேட்க, குன்னால் அருப்பை கேட்க, கடைசியில் பார்சல் மாறி சென்று விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காதல் என்ன ஆனது என்று எல்லா கேள்விகளுக்கும் முடிவில் பதில்.
இம்ரான் உடன் வேலை பார்க்கும் பூர்ணவின் மறுவாழ்க்கை, குன்னலின் குறுக்கு புத்தி, அருப்பின் காதல், கள்ள கடத்தல் கும்பல் என்று பல கிளைகள். இத்தனையும் இரண்டு மணி நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் அதுவும் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுடன். உச்ச கட்டமாக, குன்னால் தன்னுடைய வீட்டு சொந்தகாரரை மிரட்ட, அவர் போட்டோ எடுக்க செல்லும் இடமும், காசு கொடுத்த பின் கை வைக்கும் இடமும், முடியல. அதே போல் இம்ரான் தன் காதலி உடன் இருக்கும் காட்சிகள் படத்தின் வரம்புக்கு உச்சகட்டம். அருப் தன் காதலில்லை பற்றி குறை சொல்வதாக காட்டும் காட்சிகள் வசனத்தின் வரம்பு. இதற்கு மேல் கெட்ட வார்த்தைகளுடன் எழுத முடியாது. இதே போன்ற காட்சிகளை தமிழில் கற்பனை செய்ய முடியவில்லை.
வறச்சி இல்லாமல் கண்கள் முழுவதும் பல வண்ணங்கள். காரணம் அதற்கு காரணம் ஒளிபதிவாளர் ஜசோன். அருமையான காட்சி அமைப்புகள். பாடல்கள் தான் ஏனோ மனதில் நிற்க மறுக்கிறது. அதே போல் பின்னணி இசை சுமார் ரகம் தான். மொத்தத்தில் டெல்லி பெல்லி வயது வந்தவர்களுக்கு ஒரு அருமையான படம். தமிழில் இதே படத்தை எடுத்தால், கண்டிப்பாக மெகா ஹிட் தான்.
Labels:
2011,
2012,
திரைவிமர்சனம்,
ஹிந்தி
Tuesday, February 07, 2012
திருக்கடையூர் கோவில் - ஆறுபதாம் கல்யாணமா?
சென்ற பதிவில் நான் போட்ட திருக்கடையூர் கோவில் பதிவை பார்த்து என்னிடம் சில பேர் அக்கோவிலை பற்றியும், அதனுடைய சிறப்பு அம்சத்தை பற்றியும், அங்கு சென்று வந்தால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கின்றனர். திருக்கடையூர் கோவிலை பற்றி உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் வீட்டிற்கு பின்னால் இருந்த என் குல வம்சவழியினர், 75ம் வயது சிறப்பு கல்யாணத்தை செய்து கொண்டனர். அதனால் தான் அம்மாதிரியான கல்யாணத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, ஆராய தொடங்கினேன். எனக்கு தெரிந்த சென்னை, மதுரை மற்றும் திருச்சி மக்களிடம் நான் ஆறுபதாம் கல்யாணம் பற்றி கேட்டும் போது, இதே கோவிலை தவறான பெயருடன் சொன்னார்கள். நான் இக்கோவிலின் பெயரை சொன்ன உடன், ஆம் என்று சொன்னார்கள்.
நான் அந்த கோவிலுக்கு சொல்லும் பொழுது, அங்கு மூன்று கல்யாண நிகழ்ச்சிகளை காண முடிந்தது. பார்க்கும் போது எல்லாமே ஆறுபதாம் கல்யாணம் போல் தான் இருந்தது. ஆனால் எங்குமே கூட்டம். மூன்று அல்லது நான்கு பேருந்துகளை பார்க்க முடிந்தது. நான் பொது அறிவு வேண்டி, இந்த விழாவை பற்றி கேட்க, கோவில் அலுவலகம் சென்றேன். அவர்கள் போட்ட பட்டியல்.
கோவிலுக்கு கட்ட வேண்டிய பணம் - ~ ரூ.1526 . இரண்டு விதமான திருகல்யாணங்கள் உள்ளன. முதல் விழாவுக்கு ~ ரூ.4000 (இரண்டு மணி நேரம் பூஜை) மற்றும் இரண்டாம் விழாவுக்கு ~ ரூ.8500 (நான்கு மணி நேரம் பூஜை). நம்முடைய பொருளாதார சூழ்நிலையை பொருத்து ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அது போக, நாம் வாங்கி கொண்டு செல்ல வேண்டிய சில பொருட்களை பட்டியல் இட்டனர்.
இப்பதிவின் காரணத்திற்கு வருவோம். மேற்சொன்ன அனைத்து செலவுகள் செய்தால் கூட, சிறப்பாக விழா இருக்கும் என்பது சொல்ல முடியாது என்பது சில பேரின் கருத்து. இதற்கு காரணம் இக்கோவிலை பற்றி பல பேருக்கு தெரிந்து விட்டதால், கூட்டம் அலை மோதுகிறது. இதையே பயன்படுத்தி, புனிதமாக செய்ய வேண்டிய கல்யாணத்தை, வருமானம் வரும் தொழிலாக நினைத்து செய்ய ஆரம்பித்து விட்டனர். நம்மிடம் எவ்வளவு பணத்தை பிடுங்கி செய்ய முடியுமோ, அவ்வளவு அவர்கள் பிடுங்க நினைப்பார்கள் என்று கேள்வி பட்டேன்.
இரண்டாவது காரணம், தென் தமிழ் நாட்டில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் இருந்தும் ஐந்து மணி நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆறுபதாம் கல்யாணம் என்பதால், அனைத்து சொந்தங்களையும் அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் பேருந்தை எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை. புதன் கிழமை கல்யாணம் என்றால், செவ்வாய் மாலை பொழுதில் சிறு பூஜை நடத்த வேண்டி இருக்கும் மற்றும் புதன் கிழமை காலையில் விழா இருக்கும். இதன் காரணமாக செவ்வாய் கிழமை மதியமே அங்கு சென்று தங்கி விட வேண்டும். ஆக மொத்தம் அழைத்து சென்ற அனைவருக்கும் தங்க ஏற்பாடு, உணவு என்று பார்க்கும் போது, கண்ணை கட்ட ஆரம்பித்து விடுகிறது.
எனக்கு மனதில் இருந்த அனைத்து இக்கோவிலின் அனைத்து விஷயங்களையும் எழுதி விட்டேன். இப்பதிவில் இருக்கும் அனைத்து விஷயங்களும், நான் பார்த்து, கேட்டது மற்றும் என் கருத்து மட்டுமே. மீண்டும் கோவில் மற்றும் சில புனிதமான விஷயங்கள், பணத்திற்கு அடிமை ஆகி அதன் உண்மையான நிறத்தை இழந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக இதை கருதுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)




