Friday, May 21, 2010

திருமண வாழ்த்துகள் - விஜய் ஆல்பர்ட்

எனது நண்பர் திரு. விஜய் ஆல்பர்ட் அவர்களுக்கு நேற்று 19ம் தேதி துறையூரில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

Monday, May 17, 2010

மியாமி - 2

விலங்குகளின் தீவை அடைந்த போது, கூட்டம் என்று எதுவும் இல்லை. என்னடா இது! சுற்றுலா தளம் தானே என்று யோசித்து கொண்டே உள்ளே சென்றால் தான் தெரிகிறது, அது முழுக்க சிறுவர்களுக்கான இடம் என்று தெரிகிறது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒவ்வொரு பறவைகளாக, விலங்குகளாக பார்க்க ஆரம்பித்தோம்.

அடுத்தது மியாமியின் மீன்களின் அரும்காட்சியகம். நாம் இது நாள் வரை எத்தனை படத்தில் பார்த்து இருந்த டால்பின் என்ற மீனின் சாகசங்கள் கண் முன்னே. சுமார் ஒரு மணி நேரம். வித்தியாசமான கண் காட்சி. இதே சில காட்சிகள் உங்களுக்காக






மாலைப் பொழுதில் செல்ல முடிவு எடுத்து இருந்த இடத்திற்கு நேரம் இருந்ததால், அதற்கு நடுவில் சென்ற இடம் மிக பிரபலமான மற்றும் அரசாங்கமே அனுமதி கொடுத்து இருக்கின்ற சூதாட்ட விடுதி. உள்ளே போய் பார்த்து தலை சுற்றியது தான் மிச்சம். ஒன்றும் விளையாட தெரியவில்லை. நண்பர் அங்கூர் தான் பணத்தை இழந்தது தான் தெரியும். உடனே அங்கிருந்து மியாமியின் முக்கிய தலமான அதுவும் மியாமியின் தீவுகளை சுற்றி காட்டும் கப்பல் பயணம்.

அவ்விடம் மியாமியின் மைய பகுதியில் இருப்பதாலும், துறைமுகத்தில் இருப்பதாலும்  மேற்கு ஆசிய மக்கள், அமெரிக்காவின் வெள்ளை, கருப்பு இனத்தவர், மற்றும் மெக்சிகன் மக்கள் என்று களைகட்டி இருந்தது. அனைத்து வகையான அம்சம் கொண்ட அழகு மிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் என்று அவ்விடத்தில் இருந்தாலும், அதே போல் அதற்கு எதிர் மறையான மக்களையும் அங்கே காணமுடிந்தது. ஆனாலும் அங்கு இருந்த அனைவரின் உடை மற்றும் நடையில் வித்தியாசம் இல்லை. அனைவரும் பணகார கலை உடையவர்கள் என்று நிதர்சனம்.

கப்பல் பயணம் ஆரம்பிக்கும் முன்னர், அங்கே கறுப்பின மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. இசை கேட்டாலே தன்னால் ஆட்டம் வரும் என்பது இங்கே காண முடிந்தது. இதோ அந்த இசை நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் 



பயணம் தொடரும்

Sunday, May 16, 2010

மியாமி - 1

என்னடா, வந்து இவ்வளவு நாட்கள் ஆகி விட்டதே ஊர சுத்தி பக்க வேண்டமா என்று நினைப்பு வந்த போதே தானாக வந்து அமைந்து தான் இந்த மியாமி. அமெரிக்காவின் கோவா என்று செல்லமாக இந்தியர்களால் அழைக்கப்படும் இடம்.  நான் அமெரிக்காவில் தான் இருக்கின்றேன் என்று கூறி கொண்டாலும், மியாமி சென்று பார்த்த போது, என் இடம் ஒரு குக்கிராமம் என்று தெரிந்தது. 



நான் எப்போதும் இரண்டு நாட்களில் பயணம்/சுற்றுலா என்று பழகிய எனக்கு, இதே போல் இங்கும் பயணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம் பொய் ஆகி போனது உண்மை. கடைசியில் மியாமி பயணம் மூன்று நாட்கள் என்று முடிவாகி வியாழக்கிழமை புறப்பட்டோம். அங்கூர் மற்றும் மானஸ் என்ற இரண்டு நண்பர்கள் உடன்  வியாழக்கிழமை மாலை பொழுதில் 7 மணிக்கு கிளம்பினோம். Orlandoவில் இரவு 10 மணிக்கு அடைந்து, மியாமிக்கு பயணம் ஆரம்பானது. எதுவுமே சாப்பிட முடியாமல் ஒர்லண்டோவில் பார்த்து கொள்ளலாம் என்று ஐடியாவிற்கு சரியான முடிவு கிடைத்தது. செல்லும் வழியில் ஒரு உணவகமும் இல்லை. என்னடா வழி தெரியுமா என்று கேட்டால் பதில் இல்லை என்று வரும். அமெரிக்கா தான் தொழில் நூட்ப நாடே. அதனால் தொலை தொடர்பு சாதனத்தை கொண்டு அது காட்டும் வழியில் பயணம் தொடங்கியது.


நமக்கு தான் இரவு 10 மணிக்கே தூங்கும் வந்து விடுமே, ஒருவன் கார் ஓட்டுகிறான் என்று நாமும் தூங்காமல் அவனுடன் பேசிக் கொண்டே இரவு பயணம் தொடர்ந்தது. நாங்கள் தங்க வேண்டிய இடத்தை தேடி கொண்டு அடைய இரவு 3:30 மணி ஆகி விட்டது. காலையில் எழுந்து வெளியில் பார்த்தல் மியாமியின் தெற்கு கடற்கரை. என்ன அழகு... அமெரிக்கா மக்களான வெள்ளை, கருப்பு மற்றும் மெக்சிகோ இனத்தவர், வேறு சில நாட்டு மக்கள் என  கடற்கரையில் அவர்களின் கலாச்சாரப்படி பொழுதை கழித்து கொண்டு இருந்ததனர். 


வெள்ளிகிழமை முழுவதும் உள்ளூர் இடத்தை பார்த்து விட வேண்டும் என்றும், சனிக்கிழமை முழுவதும் கடற்கரை ரசிக்க வேண்டும் முடிவாகி, முதலில் விலங்குகளின் தீவு என்று அழைக்க படும் இடத்திற்கு சென்றோம்.

பயணம் தொடரும்

விமர்…




Clash of the titan – 2010 - மொக்கைபடம்
Robin Hood – 2010 - சொல்ல விஷயம் இல்லாத படம்


நடு இரவில் – 1966 - இசையில், ஒளிப்பதிவில் மிரட்டிய படம்

Thursday, May 06, 2010

கவலைகள்


என்ன தான் அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமை இருந்தாலும், சின்ன சின்ன கவலைகள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது... என் மனதில் கவலைகள் என்று நினைத்த உடன் தோன்றிய எழுத்துக்கள் இங்கே.
  • மாத மாதம் மதுரைக்கு போக முடியாமல் இருப்பது
  • சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மதுரை சித்திரை விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நெல்லை மற்றும் பாண்டியன் விரைவு தொடர் வண்டியின் பயணத்தை இழந்தது
  • சென்னையில் இருந்து கொண்டே உள்ளூரில் நன்றாக சுற்றி கொண்டு இருந்த நான், அமெரிக்காவில் அதுவும் ஒரு மூலையில் அடைப்பட்டு இருப்பது
  • இந்த ஆண்டு பல நண்பர்கள்/உறவினர்கள் கல்யாணம் இருந்தும், அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
  • நம்மூர் இட்லி, தோசை, வடை மற்றும் சாம்பாரை பற்றி நினைத்து கொண்டு இருப்பது
  • எப்போதும் அலுவலக வேலை நினைப்பாலே இருப்பது
  • முக்கியமாக நாள்முழுவதும் கை கணிப்பொறியில் போவதும்
  • பதிவுகளை படிக்கவும் முடியாமல், எழுதவும் முடியாமல் போனது
  • மதுரையில் மற்றும் சென்னையில் இருக்கும் என்னுடைய சொந்த வேலைகளை கூட செய்ய முடியாமல் போனது.


மாதத்திற்கு கண்டிப்பாக நான்கு பதிவுகளையாவது போட்டு தீர வேண்டும் என்று ஆசை. நிறைவேறுமா என்ற கேள்வி உடன், கண்கள் வானத்தை நோக்கி...